எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 டிசம்பர், 2012

MENSES. மாதவிடாய்.

மாதவிடாய் பற்றி என் அன்புத் தங்கையும் தோழியுமான கீதா இளங்கோவன் எடுத்த ஆவணப்படம் இன்று பி. ஏ. ராமசாமி ராஜா ஹால், பாரதீய வித்யா பவன், சென்னையில் வெளியிடப்படுகிறது.

பாலபாரதி, தமிழிசை சௌந்தர்ராஜன், திலகவதி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், பொதுமக்கள் புழங்குமிடங்கள் அனைத்திற்கும் சென்று ஆய்வு செய்து மாதவிடாய் பற்றிய கற்பித எண்ணங்களை உடைத்தெறிந்து உண்மைகளைப் பதிவு செய்திருக்கிறார் கீதா.

ஆட்டிசம், அஃறிணை ஆகிய குறும்படங்கள் எடுத்திருக்கிரும் கீதா இளங்கோவனின் அடுத்த ஆவணப் படம் இது.

ஒரு பெண் பதின் பருவங்களில் அனுபவிக்கத் தொடங்கும் துயரம் அவளின் மெனோ பாஸ் வரை தொடர்கிறது. இதன் நடுவே குழந்தைப் பேறு, இன்னும் கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் எல்லாம் மாதவிடாய் ஒட்டியே பெரும்பாலும் நிகழ்கின்றன.

பொதுவாக இந்த சமயங்களில் பெண்ணுக்கு ஓய்வு தேவை என்பதாலேயே நம் முன்னோர்கள் தனியாக வைத்தார்கள் ஆனால்  அது எதையும் தொடக்கூடாத தீட்டு என்று கருதப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது கொடுமை. 

விலக்கான பெண்ணை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று அனுமதிக்காததாலேயே மும்பையில் கோயில் கொண்டிருக்கும் மகாலெக்ஷ்மி தமிழகம் விட்டு நீங்கி மும்பை சென்று கோயில் கொண்டதாக ஒரு ஐதீகம் என செவி வழிச் செய்தியாக கேள்வியுற்றிருக்கிறேன்.

பள்ளி , கல்லூரிகளில் பெண்களுக்கு இது ( பொதுவாக நகரங்களில் நாம் நாஃப்கின் உபயோகப்படுத்துகிறோம், கல்லூரிகளில் இதற்கென தனி ட்ரம்கள் ஒவ்வொரு பாத்ரூமிலும் உண்டு ) பற்றி பெரிதாக வருந்தும் அளவு இல்லை என்றாலும் கிராமங்களிலும், பொது இடங்களிலும் பெண்களுக்கு சரியான அளவு வசதி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இது பெண்களுக்கானது மட்டுமல்ல . ஆண்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு இருந்தால் நல்லது என இதைத் தெளிவுறுத்த எடுக்கப்பட்டிருக்கிறது. கீதாவின் ஆவணப் படம் அனைவருக்குமானது. இந்தக் ஆவணப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


10 கருத்துகள்:

 1. மிகவும் தேவையான ஒரு படம். இப்படம் பற்றி நேற்று இன்னோர் பதிவரும் தகவல்கள் வெளியிட்டு இருந்ததைப் படித்தேன்....

  பதிலளிநீக்கு
 2. ஆவணப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் தோழிக்கு எனது வாழ்த்துக்கள்.இம்மாதிரி விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஆவணப் படங்கள் வரவேற்கப்பட வேண்டியவை

  பதிலளிநீக்கு
 4. தோழிக்கு பாராட்டுகள். விழிப்புணர்வு எல்லா இடத்திலும் வந்து விட்டால் நோய்கள் அண்டாது. பெண்களின் வாழ்வும் சீர்படும்...

  பதிலளிநீக்கு
 5. அருமை சிவா கோவில்களில் பெண்களை மாதவிடாய் காலங்களில் வரக்கூடாது என்பது முட்டாள் தனம் உண்மையான கருத்து பழங்கால கோவில்கள் சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை கொண்டது . அப்போது மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோவிலுக்கு சென்றால் உடல் வெப்பநிலை அதிகமாகி அதிக படியான ரெத்தபோக்கு ஏற்ப்படும் இதனாலே பெண்கள் கோவிலுக்குள் இந்த கால கட்டங்களில் வரக்கூடாது என்று முன்னோர்கள் கூறினார்கள் . இன்றும் ஆந்திரவில் ஒரு கோவிலில் அம்மனுக்கு மூன்று நாங்கள் மாதவிடாய் காலம் வருகிறது . அப்போது அங்குள்ள குளம் ரெத்தம் ஆகிறது என்று சன் டி‌வி பார்த்திருக்கிறேன் . அப்போம் கோவிலை என்ன செய்வார்கள் . இந்த மூடர்கள்

  பதிலளிநீக்கு
 6. படம் இணையத்தில் காணக் கிடைக்கிறதெனில், சுட்டியைப் பகிருங்களேன் தேனக்கா.

  பதிலளிநீக்கு
 7. அருமை ! கிராமங்களில் அதிகம் விழிப்புணர்வு தேவை!

  பதிலளிநீக்கு
 8. நன்றி வெங்கட்

  நன்றி குமார்

  நன்றி ராஜி

  நன்றி கோவை2தில்லி

  நன்றி சித்தர்கள் ராஜ்ஜியம்

  நன்றி ஹுசைனம்மா .. இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. இணையத்திலும் பகிரவில்லை.. பகிர்ந்தால் சுட்டி தருகிறேன்.

  நன்றி செம்மலை ஆகாஷ்

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 10. இந்தப்படம் பத்தி இதழ்களில் படித்தேன். பார்க்க வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...