புதன், 5 டிசம்பர், 2012

சுத்த மோசம்.

"எவ்வளவு அழகா சிரிக்கிறா இன்னமும்” ஒரு பத்ரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்த்துச் சொன்னான் ரமேஷ்.

“அவளுக்கு மார்கெட்டே இல்லையாம். தீபாவளி விளம்பரம் ஏதும் வந்தால்தானாம்.” கிண்டலடித்தாள் ரேஷ்மா.

“என்னா க்ளாமர்.. இவ இனி நடிப்பாளா தெரியலை” வருத்தப்பட்டான் ரமேஷ் அடுத்தபக்கத்தில் இருந்த ஒரு சினிமா ஸ்டில்லைப் பார்த்து.“ ம்.. என்ன ப்ரயோஜனம். அடுத்தவங்க லைஃபை ஸ்பாயில் பண்ணிட்டு..” நொடித்தாள் ரேஷ்மா..

“எவ்வளவு முடி.. அழகான முகம் இல்ல..” ரசித்தான் ரமேஷ் ஒரு சினிமா விமர்சனம் பார்த்து.

“ கட்டிக்கப்போறேன்னு சொல்ற பையனோட அப்பா நடிகரோட இவ நடிக்கிறா..” பல்கடித்தாள் ரேஷ்மா..

‘நடிப்புத்தானே’ என சொல்ல நினைத்து மௌனமானான் ரமேஷ்.

அடுத்த பக்கம் இருந்த இன்னொரு சினிமா விமர்சனம் பார்த்து ரேஷ்மா சொன்னாள்., “ இவன் டிஃபரண்ட் ரோல் நல்லா பண்றான்ல..” என்று.

”இவன் இன்னொரு நடிகனோட சுத்துறானாமில்ல..” என்றவன் மனைவியின் கோபப்பார்வை உணர்ந்து பேச்சை மாற்றினான். “பிரபலமானாலே ப்ராப்ளம்தான். இந்தப்த்ரிக்கைகள் எல்லாம் ஒரே காசிப் ந்யூஸ்தான் சுத்த மோசம்....!”

 டிஸ்கி:- இந்தச் சிறுகதை 2, அக்டோபர் 2011, திண்ணையில் வெளியானது.


7 கருத்துகள் :

அமைதிச்சாரல் சொன்னது…

ஹா..ஹா..ஹா. கதை கலகலன்னு இருக்கு :-)

கோவை மு சரளா சொன்னது…

உணர்வுகள் பொதுவானவை என்று உணராத வரை இந்நிலை நீடிக்கும் அழகான சுருக்க கதை வாழ்த்துக்கள்

sury Siva சொன்னது…

என்ன எழுதினா என்னைப் படிப்பாங்க இன்றைய மக்கள்
அப்படின்னு நினைக்கிறது இன்னிக்கு தேதியிலே
வார மாத பத்திரிகைகள் மட்டுமல்ல,
வலைப் பதிவுகளும் கூட என்று எனக்குத் தெரியும்.
இருந்தாலும்,

சுசீலா அம்மா உங்களை தன் முதல் மாணவி என்று எழுதினதைப்
பார்த்து இன்று காலைலே சந்தோஷப்பட்ட
சுப்பு தாத்தா.

கோவை2தில்லி சொன்னது…

பிரபலமா இருந்தாலே ப்ராப்ளம் தானோ....:)))

வருண் சொன்னது…

///”இவன் இன்னொரு நடிகனோட சுத்துறானாமில்ல..” ///

இந்த வரியில் எதுவும் எழுத்துப்பிழை இல்லையே?

இந்த நவநாகரிக உலகில் எவ்ளோ அப்பாவியா ஒரு கேள்வி கேக்கிறான் இந்த மண்டு னு என்னை நெனைச்சு எல்லாரும் தன் தலையில் அடிச்சிக்கிறமாதிரி ஒரு உணர்வு எனக்கு! :-)
-----------

My comment about "the couple"! What a boring couple! :-(

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சாரல்

நன்றி சரளா

நன்றி சுப்பு சார். ரொம்ப சந்தோஷம் சார்..:)

நன்றி கோவை2தில்லி

நன்றி வருண்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...