எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 மே, 2012

அளவோடு நட்பு ( இன் & அவுட் சென்னைக் கட்டுரை -- 1)

இன்னிக்கு இருக்குற டீனேஜ் பசங்களுக்கு உள்ள பிரச்சனை என்னன்னா நல்ல படிக்கணும்., நல்ல வேலைக்குப் போகணும்., நல்லா கை நிறைய சம்பாதிச்சு கேள்வி கேப்பாரில்லாம என் ஜாய் பண்ணனும். அப்பிடித்தானே நினைப்பீங்க.. இது எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொரு பதின்பருவ ஆணுக்கும் உள்ள ஆசை என்னன்னா., “ பால்போலே பதினாறு . எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா” என்று சங்கரின் படப்பாடல் போல ஒரு தோழிதான். பதின் பருவத்துல இல்லாட்டியும் தன்னைப் புரிஞ்சி ஊக்கம் கொடுக்குற எல்லாப்பெண்ணையும் தோழியா நினைக்கிறாங்க.. அவங்க பதின்பருவப் பெண்ணா இருந்துட்டா ரொம்பவே சந்தோஷம்தான். அவங்களோட பைக்கில ஊர் சுத்தணும். என் கேர்ள் ஃப்ரெண்ட் என நண்பர்களுக்கு காட்டணும். அப்போ அப்போ அவகிட்ட இருந்து போன் கால் வரணும். அத கெத்தா நண்பர்கள் கிட்ட காமிச்சிகிட்டு போய் தனியா பேசணும் அவங்களுக்கு.


 பெண்களைப் பொறுத்தவரை பெண்களுக்கு அவங்களைப் பாராட்டுற எல்லாரையும் பிடிக்கும். ஆனா அந்தப் பாராட்டு உண்மைக்கு மிக நெருக்கமா இருக்கணும். பொய் சொல்லும் எந்த ஆணையும் பெண்ணுக்குப் பிடிக்கவே பிடிக்காது.

அடலஸண்ட் ஆண் அல்லது பெண் மனதில் ஏற்படும் கன்றுக்குட்டிக் காதல்., அல்லது இன்ஃபாச்சுவேஷன்., எதிர்பாலினக் கவர்ச்சி என்பது ஒரு காலகட்டம் வரை அவங்களை ஆட்சி செய்யுது. அதன்பிறகு அவங்க மெச்சூர்டா ஆகும்போது நல்லது கெட்டது., தேவையானது., தேவையில்லாதது புரியுது அந்த இனம் காணும் காலகட்டம் வரை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பலவித குழப்பங்களில் ஆழ்கிறார்கள். நம் தோழி அல்லது தோழனுக்குப் பிடிக்குமோ இல்லையோ என பலதும் செய்வார்கள்.

எப்போது பார்த்தாலும் செல்போனில் மெசேஜ்., தூங்கினியா., சாப்பிட்டியா., குளிச்சியான்னு ஒரே அரட்டைதான். நடுராத்திரி அப்பா அம்மாவுக்குத் தெரியாம போர்வைக்குள்ள ஒளிச்சி வைச்சி கூட மெசேஜ் பண்ணிகிட்டு இருப்பாங்க. இதெல்லாம் ஒரு வயசு வரைக்கும்தான்னு நீங்க நினைச்சா தப்பு., அது சில கேஸ்ல இருவருக்கும் திருமணம் ஆகும் காலம் வரை கூட அதுக்குப் பின்னேயும் கூட தொடரும். இப்பதான் பிரச்சனையே ஆரம்பிக்குது. ஏன்னா எப்ப ஒரு உறவுல இரண்டுக்கு மேற்பட்டவங்க இருக்காங்களோ அப்பவெல்லாம் பிரச்சனைதான். அதுனால எந்த நட்புலயும் அளவோடு மெயிண்டெயின் பண்ணுறது நல்லது.

இதுவுமில்லாம பொஸஸிவ்னெஸ் ஒரு காரணம். என்னோடதுன்னு அந்த உறவுல இறுக்கிப் பிடிச்சீங்கன்னா உறவுநொறுங்கிப் போயிரும். மேலும் வேலையில் இருக்கும் சிலர் இருவர் வீட்டுக்கும் தெரியாம மணமாகும்வரை சேர்ந்து வாழ்வோம் என முடிவெடுத்து ஒண்ணா தங்குறது இதெல்லாம் தவறான முடிவுகள். நம் கலாசாரம் என்று ஒன்று உண்டு. அதுக்குன்னு சில பாரம்பர்யங்கள் உண்டு. அப்பா அம்மா சம்மதத்தோடு சேர்ந்து வாழணும் . இல்லாட்டா நல்ல நண்பர்களாகவே பிரிந்துவிடணும். யாரும் யார் வாழ்விலும் ஆக்கிரமிப்பு செய்து., பின் அவர்களைப் பிடிக்கவில்லை என்னும்போது கொலை செய்தல் அல்லது திருமணத்துக்குப் பின் கட்டிய வாழ்க்கைத் துணையை கொலை செய்தல் என விபரீதமான போக்குகளில் இறங்கி விடுகிறார்கள்.

எண்ணங்களைக் கட்டுப் படுத்தி வாழ்தல்., ஒழுக்கம்., நேர்மை., உறவுகளை நல்ல முறையில் கையாளுதல் போன்றவை முக்கியம். காதல்., இன்ஃபாச்சுவேஷன்., சுயநலம் மட்டுமே வாழ்க்கையல்ல. விட்டுக்கொடுத்தலும்., புரிந்துணர்வும்., கொண்ட நட்பே என்றும் ஜெயிக்கும். தேவைப்பட்டால் நம் தனிப்பட்ட வாழ்வு இனிமையாக நட்பைக்கூட ( நட்பு கொண்டோரிடம் புரிய வைத்து ) விட்டுக் கொடுக்கலாம்.

14 கருத்துகள்:

  1. In early days we have MI(Moral Instruction classes) in Schools and also Grandpa & Grandma in our Homes.
    Now both have gone!
    That may be a reason. In a Nucleus family where husband and wife are employed, the status of their children is more pathetic!

    பதிலளிநீக்கு
  2. நட்போ உறவோ அளவோடு இருத்தல் அனைவருக்கும் நல்லது இன்னைக்கு இருக்கிற லிவிங் டூ கெதர், எதிர்பாலினக் கவர்ச்சி,அதோட வரையறைக்கு உட்படாத உட்படுத்தப்படாத உறவு நம்ம வாழ்க்கை முறையை நெறி தவறி நடக்க நிர்பந்திப்பதற்க்கான அத்தனை காரணிகளையும் மேற்கோள் காட்டிவிட்டீர்கள் சகோதரி...

    அழகான இன்றைய எதார்த்தப்போக்கை கண்முன்னே கட்டிப்போடும் அழகானதொரு கட்டுரை...இன்னை எல்லார் பார்வைக்கு தேவையானதொரு பதிவும் கூட :)

    பதிலளிநீக்கு
  3. 100-க்கு 99-சதவீதம் காதல் நம்மையும் மற்றும் நம்மை சார்ந்துள்ள நம்முடைய உறவினர்களுக்கு மன அமைதியின்மையையும், துயரத்தையும், வலியையும் தான் ஏற்படுத்துகிறது, எல்லோரையும் வேதனைக்கு உட்படுத்தி கிடைக்கும் அந்த காதல் நமக்கு தேவைதானா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும் ..!

    அருமையான படைப்பு அக்கா ..!

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஆர் ஆர் ஆர் உண்மைதான் இப்போவெல்லாம் பிள்ளைகள் பணம் சம்பாதிக்கும் மிஷின்களாயிட்டாங்க.. மனிதாபிமானம் தொலைஞ்சு போச்சு

    நன்றி ரேவா

    நன்றி வரலாற்று சுவடுகள்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. இன்றைய
    சூழ்நிலையில் அவசியமான
    நல்ல கட்டுரை கவிதாயினி

    பதிலளிநீக்கு
  7. இன்றைய இளைய சமுதாயம் எதிர் நோக்குகின்ற ஒரு வாழ்க்கை முறை அருமையாக,நேர்த்தியாகக் கையாளப் பட்டிருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வார்த்தைகள் வடிவமைக்கப் பட்டுள்ளது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. இன்றைய இளைய சமுதாயம் எதிர் நோக்குகின்ற ஒரு வாழ்க்கை முறை அருமையாக,நேர்த்தியாகக் கையாளப் பட்டிருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வார்த்தைகள் வடிவமைக்கப் பட்டுள்ளது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய இளைய சமுதாயம் எதிர் நோக்குகின்ற ஒரு வாழ்க்கை முறை அருமையாக,நேர்த்தியாகக் கையாளப் பட்டிருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வார்த்தைகள் வடிவமைக்கப் பட்டுள்ளது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  10. //விட்டுக்கொடுத்தலும்., புரிந்துணர்வும்., கொண்ட நட்பே என்றும் ஜெயிக்கும். தேவைப்பட்டால் நம் தனிப்பட்ட வாழ்வு இனிமையாக நட்பைக்கூட ( நட்பு கொண்டோரிடம் புரிய வைத்து ) விட்டுக் கொடுக்கலாம். //

    மிகச் சிறப்பான அறிவுரைகள்.

    உண்மையான நட்பு என்றால், ஒருவர் விட்டுக்கொடுத்து, மற்றவரை நிம்மதியாக வாழவிடுவதும் தான் என்பதை நன்றாகவே சொல்லியுள்ளீர்கள்.

    ஆனாலும் உணர்ச்சிவசப் படுபவர்களால் இந்த உண்மையை சரியான கோணத்தில் உணர்ந்து செய்ல்பட முடியாது.

    அவரவர்கள் தங்கள் நிம்மதியையும் சந்தோஷத்தையுமே உறுதிப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான கட்டுரை - காலத்திற்கேற்ற அறிவுரை - ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனியாக இடம் (SPACE) பல மட்டங்களில் அவசியம். அதையறிந்து நம் கலாச்சாரத்தினை மறக்காது வாழ்ந்தாலே போதுமென நிணைக்கிறேன். தாங்கள் இது போன்ற சமூக சிந்தனையுள்ள கட்டுரைகளை / கவிதைகளை மேலும் மேலும் எழத வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன்
    நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:

    பதிலளிநீக்கு
  13. எதார்த்தப்போக்கை கண்முன்னே கட்டிப்போடும் அழகானதொரு கட்டுரை.

    பதிலளிநீக்கு
  14. நன்றி செய்தாலி.

    நன்றி இளங்கோ

    நன்றி கோபால் சார்

    நன்றி லெஷி

    நன்றி செய்தாலி விருதுக்கு

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...