எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 அக்டோபர், 2010

உயிர் உறை ரகசியம்..

குறுக்கில் மரத்துண்டாய்..,
பூவில் பனித்துளியாய்.,
காரணமற்ற காய்ச்சலாய்..
பீடித்துக் கிடக்கிறது..
உன் அன்பு.. என் மேல்..

எல்லா அம்புகளும் படுக்கையாய்..
தக்ஷிணாயனம் இருக்கட்டும்..
எய்துவிடு மிச்சமும்..

நேசத்தின் இழையா ..
அன்புப் பிளவை..
நெய்வதை நிறுத்து..


எவ்வளவு புரை ஏறியது..
நுரையீரலைக் கேள்..
என் நினைவை விட்டெறி..
மூச்சுக்குழாய் பிழைக்கட்டும்..

வலப்புற மூளையா..
இடப்புற மூளையா..
எதிலாவது அடக்கு..
நினைவுகளின் உற்பத்தி..

காதலும் காமமும்
கிளைத்த கொடியே..
பூப்பது உன்னிஷ்டம்..
என்னை மூழ்கடிக்காமல்..

முப்பாலும் உன் அணைப்பால்..
நாலாம் பக்கம் உன் ஆக்கிரமிப்பால்..
நானும் ஒரு தீபகற்பமாய்..

எத்தனை யுகங்களாய்
உன்னைத் தள்ளுவது..
இடையறாத அலையாய்..
என்னைச் சுற்றி நீர்தான்..

உயிர் உறை ரகசியமே..
மாய கர்ப்பமே..
இதயச் சூலுக்குள்
பிரசவிக்க இயலாமல் நீயும்
வெளியேற முயலாமல் நானும்..

டிஸ்கி...1..:- இது அக்டோபர் 10ம் தேதி திண்ணையில் வெளிவந்துள்ளது... நன்றி திண்ணை..

டிஸ்கி...2..:- முக்கிய அறிவிப்பு மக்காஸ்.. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு சிறுகதைகள்., குறுங்கதைகள்., நாவல்கள்., கவிதைகள்., அனுப்பி வையுங்கள்... எல்லா ப்லாக்கர்களும்.. ஆண் வலைப்பதிவ நண்பர்கள் பலரின் படைப்புக்களும் நன்றாக இருப்பதால் கிரிஜாம்மாவிடம் இந்த வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுள்ளேன்.. சிறப்பாக எழுதுங்கள்.. உங்கள் படைப்புக்களை அச்சில் பார்க்கும் ஆவலோடு நானும் வாழ்த்துகிறேன்.. தேர்ந்தெடுக்கப்படுபவை பிரசுரிக்கப்படும்.. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.. thenulakshman@gmail.com

டிஸ்கி...3..:- அன்பு மக்காஸ்.. எல்லார் வலைத்தளத்துக்கும் சென்று சொல்ல முடியவில்லை.. நேற்று சிலரின் வலைத்தளம் சென்றேன்.. கை வலி.. எனவே எல்லாரும் கலந்துக்குங்கப்பா.. படிக்கிறவங்க அடுத்தவங்களுக்கும் சொல்லுங்க.. நேசன்.,பாலா சார்., ஜெசி., கலகலப்பிரியா., கதிர்., ரோஹிணி., புலவன் புலிகேசி., பட்டியன்., அக்பர்., ஸ்டார்ஜன்., கண்ணகி., அம்பிகா., பத்மா., திவ்யாஹரி., மேனகா., கீதா ஆச்சல்., புவனேஷ்வரி ராமனாதன்., ஷாந்தி லெட்சுமணன்., ஜெரி., சீனா சார்., ராகவன் நைஜீரியா, முனியப்பன் சார்., தியா., நிகே., சந்த்ரு., வசந்த்., வினோத்., ஜெட்லீ., சுரேகா., பட்டர்ஃப்ளை சூர்யா., ருத்ரன்., கேபிள்ஜி., சரவணகுமார்., மதுரை சரவணன்., ஆனந்தி., ஜெய்லானி., ஸாதிகா., மலிக்கா., கமலேஷ்., சிவாஜி சங்கர்., ஆசியா., அஹமத் இர்ஷாத்., நியோ., தேவன்மாயம்., சுரேஷ் பழனியிலிருந்து., ராகவன்., பாரா., அஷோக்.,மஞ்சு., வேல்கண்ணன்.,முகிலன்., மரா., .,வித்யா.,சத்ரியன்.,கோபிநாத்.,பிரபு., மயோ., ஜோதிஜி.,ரோஸ்விக்., குமார்.,ஜலிலா., பாலா.,சீமான்கனி., கண்மணி., பனிதுளிசங்கர்., அப்துல்லா., ஃபாத்திமா ஜொஹ்ரா., கருணாகரசு., மணிகண்டன்.,ரூஃபினாராஜ்., ஷஃபி., பனிதுளிசங்கர்.. இன்னும் நிறைய பேர் இருக்கீங்க.. எல்லாருமே அனுப்புங்க..விட்டுப்போன பெயர்கள் என் தற்காலிக ஞாபகக் குறைவே அன்றி வேறொன்றில்லை..

28 கருத்துகள்:

  1. அக்கா - திண்ணையில் கவிதை வெளியானதற்கு வாழ்த்துக்கள்.... பதிவர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கி தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //காரணமற்ற காய்ச்சலாய்.//

    //முப்பாலும் உன் அணைப்பால்..
    நாலாம் பக்கம் உன் ஆக்கிரமிப்பால்..
    நானும் ஒரு தீபகற்பமாய்..//

    நினைவு எங்கெங்கோ சுற்றி வருகுது அக்கா.. இவ்வரிகளை படித்ததும்..
    அருமை!

    பதிலளிநீக்கு
  3. வார்த்தைகளை தேடி தேடி கவிதையாக்கும் அழகை என்னவென்று சொல்வது.

    பதிலளிநீக்கு
  4. யாராவது என் பேர் போட்டு அனுப்புங்களேன் புண்ணியமா போகும். ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  5. ////எவ்வளவு புரை ஏறியது..
    நுரையீரலைக் கேள்..
    என் நினைவை விட்டெறி..
    மூச்சுக்குழாய் பிழைக்கட்டும்..////உணர்வுகளின் அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கவிதை அருமை உங்கள் முயற்ச்சி அருமை

    பதிலளிநீக்கு
  7. திண்ணையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    டிஸ்கி-2, கவனத்தில் எடுத்துக் கொண்டாயிற்று:)!

    பதிலளிநீக்கு
  8. எவ்வளவு புரை ஏறியது..
    நுரையீரலைக் கேள்..

    அருமைங்க ...

    பதிலளிநீக்கு
  9. நல்லாயிருக்கு தேனக்கா.அக்கா கதை,கவிதை மட்டும் தான் அனுப்பவேண்டுமா?

    பதிலளிநீக்கு
  10. திண்ணையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிவர்களின் திறமைக்கு வாய்ப்பளிக்க எண்ணும் உங்கள் எண்ணத்துக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அன்புக்கவிதை அழகு தேனக்கா.

    தீபாவளி மலருக்கு கடைசித் திகதியையும் சொல்லிவிடுங்களேன்.
    10-15 நாளைக்கு வீடு திருத்துவதன் காரணமாக எந்த வேலையும் கணணியில் செய்யமுடியாதென நினைக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  12. அக்கா கவிதை நல்லாயிருக்கு
    வாழ்த்துக்கள்.
    நேரம் இருப்பின் நம்ம வலைப்பக்கம் வந்து போங்க.

    பதிலளிநீக்கு
  13. எத்தனை யுகங்களாய்
    உன்னைத் தள்ளுவது..
    இடையறாத அலையாய்..

    ஆஹா.. புதுப் பிரயோகம்.

    மிக்க நன்றி. மெயிலில் அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. கவிதை அருமை


    Pl visit my blog
    http://annaimira.blogspot.com/
    http://siruvarulakam.blogspot.com/

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள் தேனக்கா நல்ல முயற்சி

    பதிலளிநீக்கு
  16. உங்கள் பாணியில் சற்று வித்தியாசமான கவிதை

    ரொம்ப நல்லா இருக்கு

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  17. எத்தனை யுகங்களாய்
    உன்னைத் தள்ளுவது..
    இடையறாத அலையாய்//

    அழகான இவ்வரிகளை மிக ரசித்தேன்
    தேனம்மை..

    பதிலளிநீக்கு
  18. நன்றி புவனேஷ்வரி., சித்ரா., பாலாஜி., அஷோக்., ரமேஷ்., சசி., நந்தா., யாதவன்., சை கொ ப., வேலு., ராமலெக்ஷ்மி., ஜமால்., கார்த்திக்., ஆசியா., கோபி., அம்பிகா., ஹேமா., டி வி ஆர்., குமார்., ரிஷபன்., ஆர் ஆர் ஆர்., காஞ்சனா., ஜலீலா., விஜய்., அருணா., முத்துலெட்சுமி., சரவண குமார்., வெறும் பய.

    பதிலளிநீக்கு
  19. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...