எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 9 அக்டோபர், 2010

சுய உதவிக்குழுக்கள்.. நவராத்திரி அங்காடி ..பெண்களுக்கான போட்டிகள்..




நவராத்திரி ..சுபராத்திரி.. பாடல் கேட்கும்போதே முப்பெரும் தேவியரும்.. பட்டுப்பாவாடையணிந்த சுவாசினிகளும் ., மஞ்சள் குங்குமமும் தாம்பூலமும் ., கொலுவும் சுண்டலும் கண்முன்னே விரிகிறதா..
இந்த வருடம் கொஞ்சம் ஸ்பெஷல் ..ஏனென்றால் லேடீஸ் ஸ்பெஷல் சார்பில் மாம்பலம் குமரன் கல்யாண மண்டபத்தில் நடந்த நவராத்திரி ஆரம்ப விழா.. சுய உதவிக்குழுக்களை நபார்டின் வாகீசன் அவர்கள் ஒன்றிணைக்க.. எக்ஸ்னோராவின் சிதம்பரமும்., ரோட்டரியின் சேதுராமனும் ., சசி ஹெர்பல் சசிரேகாவும் கிரிஜா ராகவன் மேடத்தோடு இணைந்து மிகச் சிறப்பான நவராத்திரி அங்காடி ஆரம்ப விழாவாக நடந்தது...
கீதா இறைவணக்கம் பாட... விழாவை கிரிஜா மேடம் ஆரம்பித்து வைக்க.. சீஃப் கெஸ்ட் மேன்மைமிகு கவர்னர் பர்னாலாவின் பேத்தி ஆயிஷா ஸாந்து ., ஸ்பெஷல் கெஸ்ட் ஃபிலிம் டைரக்டர் மதுமிதா விஜய்., மற்றும் எக்ஸ்னோரா சுலோசனா ராமசேஷன்.. குத்துவிளக்கேற்றி முப்பெரும் தேவியரும் விழாவைத் தொடங்க.. நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன..

எக்ஸ்னோரா ராஜம் ஆயிஷா அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்க ., அடுத்ததாக நான் சுலோசனா அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்க., கிரிஜா மேடத்தால் அழைக்கப்பட்டபோது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.. ”ஷி இஸ் எ ரைட்டர்” என அறிமுகப்படுத்தினார்..அனைவருக்கும்.. அடுத்து மதுமிதா அவர்களுக்கு காந்தலெக்ஷ்மி நினைவுபரிசு வழங்கினார்.

சுய உதவிக்குழுக்களின் விற்பனை., வாழ்வு., பற்றி அனைவரும் கருத்துக்கள் சொன்னார்கள்.. இது ஐந்தாம் வருடம் . முதல் வருடம் ஒன்றரை லட்சம் விற்பனை., அடுத்தடுத்த வருடங்களில் பெருகி பத்து லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக சொன்னார்கள்..விற்பனை இந்த வருடம் 20 லட்சமாக இருக்கட்டும் என மதுமிதா வாழ்த்தினார்..

சுலோசனா மிகச் சுருக்கமாக இந்த குழுக்கள் வியாபாரம்., பற்றி அற்புதமாக உரையாற்றினார்.. ஆயிஷா அவர்கள் எல்லாரும் சொன்னதை வழிமொழிவதாக கூறினார்.. ராஜம் அவர்களும் உரையாற்ற தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது..
அனைவரும் ஸ்டால்களில் சென்று பொருட்கள் வாங்கினோம்.. கொலு பொம்மைகள் தவிர தோடுகள்., வளையல்கள்.,எம்பிராய்டரி புடவைகள்., சங்கிலிகள்., டாலர்., வால் ஹாங்கர்கள்., உணவுப் பொருட்கள்., நலுங்குமாவு., ராகி ஃப்ளேக்ஸ்., ஜோவர் ஃப்ளேக்ஸ். , பூஜைப் பொருட்கள், ஹாண்ட் பேக்குகள்..என பெண் குழந்தை உள்ளவர்களுக்கு ஷாப்பிங்க் செய்ய ரசனையான இடம்.. போட்டிக்ளும் இருக்கு சென்னை மக்காஸ்..
12. 10. 10--- 12 மணி.-- கோலப்போட்டி -- நடுவர் -- மிசஸ். ஆனந்தி ராமச்சந்திரன். எந்தக் கோலமும் வரையலாம்.
13. 10. 10----12 மணி---ஆன்மீகப் புதிர்ப் போட்டி -- நடுவர் -- மிசஸ் ஹேமா சந்தானராமன்..
14. 10. 10 ---12 மணி--- மடிசார் மாமி போட்டி -- நடுவர் மிசஸ் கமலா நடராஜன்
15 .10 .10 --12 மணி--- சமையல் போட்டி.-- நடுவர் மிசஸ் மீனாஷி பாலு
16 .10. 10 -- 12 மணி -- அசத்தல் ஐடியா டிப்ஸ் போட்டி -- நடுவர் மிசஸ் கலா பாலசுப்ரமணியன்..
விதிமுறைகள்;-
1. பதினோரு மணிக்கு முன்னதாக ஹாலுக்கு வந்துவிட வேண்டும்..
2. முன் பதிவு செய்ய.. ரொட்டேரியன் ஜெயந்தி ரமேஷின் ஃபோன் நம்பர்.. 9841035311.
3. எல்லா நாட்களிலும் ஹால் கவுண்டரில் லேடீஸ் ஸ்பெஷல் ஸ்டாஃப் வள்ளியிடம் நேரில் சென்று பதியலாம்.
4. ஈ மெயிலில் பதிவு செய்ய girijaraghavan@ladiesspecial.com இல் மெயில் அனுப்புங்கள்..
வாழ்த்துக்கள்.. சென்னை லேடீஸ் அண்ட் கேல்ஸ்.. ஹாவ் எ ப்லாஸ்ட்..:))

22 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு.

    கிரிஜா மேடத்தால் அழைக்கப்பட்டபோது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.. ”ஷி இஸ் எ ரைட்டர்” என அறிமுகப்படுத்தினார்..

    -தேனக்கா மிகபெருமிதமாக இருக்கு.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பர்னாலா தான் தற்போதைய ஆளுநர். முன்னாள் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்..விபரத்தை சரி பார்த்து தேவை என்றால் திருத்திக் கொள்ளவும்

    பதிலளிநீக்கு
  3. பர்னாலா தான் தற்போதைய ஆளுநர். முன்னாள் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்..விபரத்தை சரி பார்த்து தேவை என்றால் திருத்திக் கொள்ளவும்

    பதிலளிநீக்கு
  4. பர்னாலா தான் தற்போதைய ஆளுநர். முன்னாள் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்..விபரத்தை சரி பார்த்து தேவை என்றால் திருத்திக் கொள்ளவும்

    பதிலளிநீக்கு
  5. சென்னை பெண்கள் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்று பல்வேறு பரிசுகளை தட்டிச்செல்லட்டும்

    மகளிர் சுய உதவி குழுக்கள் மென்மேலும் வளரட்டும் என மனதார வாழ்த்துகிறேன் தேனக்கா

    பதிலளிநீக்கு
  6. மகளிர் சுய உதவிக் குழுக்களை உற்சாகப்படுத்தும் பணி பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  7. கங்ராட்ஸ் தேனம்மா!

    போட்டியில் கலந்து கொள்ள போகிறவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் அக்கா...
    உங்கள் விழா குறித்த பகிர்வு மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. போட்டிக்கப் பொறவங்களுக்க என்னுடைய வாழ்த்தையும் சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வு, அக்கா.... பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துககள் ச்கோதரி. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. எப்பவும் போல அருமையான பகிர்வு அக்கா வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. தேனம்மை படிக்கும் பொழுது மகிழ்வாக இருந்தது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி மேடம்! நான் 2000 முதல் இனி பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை என்று
    ஒரு தீர்மானம் செய்துள்ளேன்.

    அன்புடன்,
    ஆர்.ஆர்.ஆர்

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் தேனக்கா

    பதிலளிநீக்கு
  16. நன்றி சரவணா., ஆசியா., வெற்றி., சக்தி., ராமலெக்ஷ்மி., வசந்த்., குமார்., சுதா., சித்ரா.,ஹுஸைனம்மா., சந்துரு.,முத்து., சசி., வி ஆர்., ஸாதிகா., புதுகைத்தென்றல்., ஆர் ஆர் ஆர் ., ஜலீலா கமல்.

    பதிலளிநீக்கு
  17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...