எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

திருமண (பண) அழைப்பு ”இதழ்..”



திருமண அழைப்பிதழ்கள் இரண்டு வந்தது..
இரண்டும் மிக அழகு.. இன்று ரஜனிகாந்தின் மகள் திருமணம் நடைபெறுவதாக முகப்புத்தகத்தில் ஏகப்பட்ட டாக்ஸ் ( TAGS ) ..
மூன்று மணமக்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.. நலமுடன்...
என் அன்புத்தங்கை புதுகைத்தென்றல் ஹைதையில் புதுமனை குடி புகுந்து இருப்பார்.. அவருக்கும் அவர் குடும்பத்தார்க்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.. நலமுடன்..
லோட்டஸ் டெம்பிள் மாதிரி மெரூன்கலரில் ஒரு இதழ் இதழான அழைப்பு .. என்ன கற்பனா சக்தி.. என் திருமணப் போதிலெல்லாம் ( நான் என் ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் 100 அழைப்புதான் அனுப்பி இருந்தேன் ). மிக எளிமையாக ஒரே செவ்வக அமைப்பில் ரோஸ்வண்ணத்தில் இருக்கும். பெரியவர்கள் அனுப்பும் அழைப்பிதழ் மஞ்சள் ரோஸ் கலரில் பச்சை எழுத்துக்களோடு அல்லது சந்தனக்கலர் திக் கார்டில் தங்க எழுத்துக்களோடு.. அவ்வளவுதான்.. இப்போ கற்பனைக்கும் பட்ஜெட்டுக்கும் அளவே இல்லை..
அடுத்த அழைப்பிதழ்தான் என்னை ரொம்ப அசர வைத்தது.. வட இந்தியத்திருமணங்களில் ரூபாய் நோட்டு மாலை பார்த்து இருக்கிறேன்....
இதில் பர்ஸில் 1000 ரூபாய் நோட்டுப்போல... பாங்க் ஆஃப் லவ் வெட்டிங் இன்விடேஷன்.. (TWO HEARTS THAT BEAT AS ONE ) ...அதில் 100% லவ்., 100% எண்டர்டெயின்மெண்ட்., 100 % ஃபன் என எழுதி இருந்தது...முத்திரை குத்தும் இடத்தில் ஒருபக்கம் முகூர்த்தமும் இன்னொரு பக்கம் ரிசப்ஷனும்...
எல்லா மொழியிலும் ரூபாய் என எழுதி இருக்கும் இடத்தில்
அன்பாய் இரு..
ஆதரவாய் நட..
இன்பமாய் பேசு..
ஈசனை நினை..
உறவுகளை மதி..
ஊருடன் ஒத்துவாழ்..
எண்ணங்களை உயர்த்து..
ஏளனம் செய்யாதே..
ஐயம் மற..
ஒழுக்கம் கடைப்பிடி.,
ஓயாது உழை..
ஔஷதம் வேண்டேல்..
அஃகம் சுருக்கேல்..
என எழுதி இருந்தது..
உங்கள் அன்பை எல்லாம் இந்த திருமண மண்டபத்தில் டெப்பாஸிட் செய்யுங்கள் என்றிருந்தது... ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெழுத்திடும் இடத்தில் மணமகனும் மணமகளும் கையெழுத்திட்டிருந்தார்கள்.. இருவரும் இறுதிவரை இணைபிரியாமல் இருப்போம் என்று.. நல்லது மக்கா அப்படியே வாழுங்கள்.. எங்கள் ஆசீர்வாதமும் உங்களுக்கு ..

30 கருத்துகள்:

  1. திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. 1000ரூபாய் நோட்டு இன்விடேஷன் நல்ல கற்பனையில் தயாரிக்கப்பட்டவை தான்.

    பதிலளிநீக்கு
  3. அழகு அழைப்பிதழ்கள்
    வாழ்த்துக்கள் மணமக்களுக்கு ....

    பதிலளிநீக்கு
  4. ம்ம்.. இப்போது வரும் அழைப்பிதழ்கள் எல்லாம் அசர அடிக்கின்றன.. வடிவத்தில்.. அமைப்பில்.. வண்ணங்களில்..

    பதிலளிநீக்கு
  5. புதுமனைப்புகுவிழா மிக சிறப்பாக நடந்தது. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  6. இந்த முதல் அழைப்பிதழ் எனக்கும் கூட வந்தது ...ஆனால் இத்தனை செலவு தேவையா தேனு? என்ன சொல்றீங்க ?

    பதிலளிநீக்கு
  7. அக்கா,

    கொஞ்சம் பொறுங்க. அவங்களை வாழ்த்திட்டு வந்துடறேன்.

    ”எல்லா வளமும் பெற்று இன்பமாய் வாழ வாழ்த்துகிறேன்.”

    பதிலளிநீக்கு
  8. very happy to c the invitation. As per law , one shouldn't do like this currency. U may enlarge but the propotion of length and breath should vary , during night layman can believe this fake and disappoint while transcation.
    One should obey the Financial Laws particulary currecies.

    பதிலளிநீக்கு
  9. 1000ரூபாய் அழைப்பிதழ் நல்ல யோசிச்சு அடிச்சிருக்காங்க.பகிர்வுக்கு நன்றி& வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!

    வித்தியாசமாதான் இருக்கு...

    பதிலளிநீக்கு
  11. ரூம் போட்டு யோசிச்சிருக்காங்க...

    பதிலளிநீக்கு
  12. திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!

    வித்தியாசமாதான் இருக்கு...

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள்
    தேனு , நலமா ...
    //ஔஷதம்
    அஃகம்// இதற்கு அர்த்தம். Pls...

    பதிலளிநீக்கு
  14. அட அட்டகாசமா இருக்கேப்பா.. நல்லாவே நேரமெடுத்து யோசிச்சு தேர்வு செய்யறாங்க .. வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  15. திருமண அழைப்பிதழ் புதுமை அருமை.பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. தம்பதிகளுக்கு எனது திருமண வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. ம்ம்.. இப்பல்லாம் விதவிதம்மா அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படுது; பாத்துட்டு அப்படித் தோக்கி ஓரமா போடுற அழைப்பிதழுக்கு இவ்வளவு செலவு தேவையான்னும் தோணுது; சரி, இதனால சில பிரிண்டிங் கம்பெனிகளுக்கு வாழ்வுதானேன்னும் தோணுது.

    பதிலளிநீக்கு
  18. அருமையான வாழ்த்து மடல்..

    நல்ல கற்பனை வளம்.

    ரொம்ப நல்லா இருக்குங்க...

    பதிலளிநீக்கு
  19. மாறுபட்ட கோணத்தில் அழைப்பிதல்....ம்ம்ம்ம் இன்னும் மற்றங்கள் நிறைய...வரும்

    பதிலளிநீக்கு
  20. நன்றீ ஜோதிஜி., ரமேஷ்., ஜமால்., சசி., விஷ்ணு., பாலாஜி.,ரூஃபினா., மேனகா., ரிஷபன்., சித்து ., கலா., பத்மா., கோபால்., ஜெய்., ஜெரி., நரத்.(தகவலுக்கு நன்றீ) , ராம்ஜி., ஆசியா., குமார்., சுரேகா., யோகேஷ்., வெறும்பய., வேல்கண்ணன்.( மருந்து ., மற்றும் உடல்.), முத்துலெட்சுமி., உழவன். , மதுரை சரவணன்., அக்பர்., ஹுஸைனம்மா., கமலேஷ்., செந்தில்.,

    பதிலளிநீக்கு
  21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...