எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 அக்டோபர், 2009

நீலோத்பவம்

பர் துபாயின் பேரழகே
நீல வைரமே ...
தேரா க்ரீக்கின் ஆப்ராவில்
உனைக்காண...

யமுனையின் ராதையாயும்
மீராவாகவும் ஆண்டாளாகவும்
சதுர்யுகமாய் உனைத்தேடி...

என் பேரழிந்து
ஊரழிந்தேன்
நீலோத்பவமே....

ஜலக்ரீடையும்
பாமாலையும்
பூமாலையும் சூடி ...

தேடித் தேடி
உன்னைச் சூடிக் கொண்ட
சுடர்க்கொடியாய்....

நீலச் சூரியனே
என் ப்ரபஞ்சத்தில் தான்
நீயென்றாலும்
தொடமுடியா உயரத்தில்....

வானவில்லை அணிந்துகொண்ட
நீள்வெளியாய்....
வர்ணமாலை அணிந்த
நீலவண்ணனே....

என் மனமெனும் காளிங்கத்தில்
மதங்க நர்த்தனமாடி
ஞானச்சுடர் தெறித்தோனே....

கறுப்பின் அழகும்
நெருப்பின் அழகுமாய்
ஜொலிக்கும் அழகே.....

உன் ஆழிப்பேரலையின்
கன்னச் சுழிப்பில் நான் மயங்க
நீ ஆலிலையில் அழகுத்துயிலில்....

துயில் எழுந்து வா கண்ணா
உன் மதுராவில்
உனக்காக நான்....

13 கருத்துகள்:

  1. கண்ணதாசனி ஆகிவிட்டீர்களே

    மிக அருமை

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. eppadi naan ninaithu mudikkiren enbathai kandupiduthu vidugiriirgal Nesan

    u r understanding me very well


    I too think like that
    the time is short for me to sit for poems
    somehow hectic
    next week unga expectation i vida atigamaga ezutukiren

    பதிலளிநீக்கு
  3. தேனு ஒவ்வொரு பூவுக்குள்ளும் இத்தனை காதலா !
    கண்ணனுக்காய் காத்திருக்கும் மீராவாய்.
    எத்தனை அற்புதமாய் வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  4. thanks HEMA

    next week than unga blog i padikka neram kidakkum nu ninaikuren
    naama appa santhikkalaam HEMA

    பதிலளிநீக்கு
  5. சீக்கிரம் வாங்க, பூக்கள் இல்லாமல் கவிதை உலகம் வாடுகிறது.

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...