கோயில்களின் வாயில்களில் கல் யாழி, சிங்கம் யானை அண்டபேரண்டப் பட்சி போன்ற உருவங்களைப் பார்த்திருப்பீர்கள். காரைக்குடி வீடுகளில் வீட்டின் நிலையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் ஓவியங்கள், மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு வர்ணமடிக்கப்பட்டிருக்கும்.
ஒரு வாயில் கதவின் இரு பக்கங்களிலும் 3 சிற்பங்கள் வீதம் 6 மற்றும் நிலை உச்சியில் கீழ் நோக்கியவாறு ஒன்று என ஏழு மரச்சிற்பங்கள். இது நிலைவாயிலில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் சூரியப்பலகை என்னும் நிலையில் தெய்வத் திரு உருவங்கள் சமைக்கப்பட்டுள்ளன.
210. பொதுவாக காரைக்குடி நகரத்தார் சைவர்கள் - சிவ கோத்திரம் - (ஆனித்திருமஞ்சனம் ஆருத்ரா தரிசனம் முக்கியப் பண்டிகை - எல்லாப் பிரதோஷமும் ஸ்பெஷல் ) - என்றாலும் 211. முருகனுக்காக கார்த்திகை விரதமிருந்து சோமவாரத்தை விசேஷமாகக் கொண்டாடுவது & தைப்பூசத்துக்குப் பழனி பாத யாத்திரை செல்வது என இருந்தாலும் , ஒரு சாரார் 212. பெருமாளை ( அரியக்குடி ) வணங்கிப் போற்றி புரட்டாசி மாதம் வீட்டில் ராமாயணம் படித்து ( பாராயணம் செய்து ) பட்டாபிஷேகம் நிகழ்த்தி மகிழ்வார்கள்.
ஆனால் இவ்வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கௌமாரம் என்றாலும் வைஷ்ணவமும் வாயிலில் கோலோச்சுகிறது :) !!!
இது இடதுபக்கம் கீழிருக்கும் சிற்பம். அன்னம் போன்ற முக அமைப்பு தெரியுது ஆனா இது 213. அண்ட பேரண்டப் பட்சி. எவ்வளவு நுணுக்கம் பாருங்கள் சுற்றிலும் தாமரை அதன் பார்டராக பச்சை ரோஸ், வெளிர் ரோஸ், மஞ்சள் நீலக் கரைகள். அதன் பின் வார்னிஷ் என அடிக்கப்பட்டிருக்கு.