எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 மார்ச், 2025

செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் திரு. சபாரெத்தினம் அவர்கள் பார்வையில்.


பெண்கள் என்றால் அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், சுமைகள் இவை எல்லோருக்கும் பொதுவானவைதான். ஆனாலும் இந்த நூலை வாசிக்கும்போது, அந்த பகுதி கலாச்சாரம் சார்ந்த வழக்கங்கள் அந்த பெண்களின் துயரங்களை மிகச் சிறப்பாக தன், சிறுகதைகளில் வடித்திருப்பார், நூல் ஆசிரியர் தேனம்மை லட்சுமணன்.

சில கதை நாயகர்கள் கோவலன் மாதிரி. பொருள்வயிற் பிரிவில், போகுமிடத்தில் மற்றொரு குடும்ப உறவை ஏற்படுத்திக் கொள்ளுதல்.

மொத்தம் 16 கதைகள்.

முதல் கதை ஒப்பிலாள். இதில் அப்பச்சி மிகவும் பாசக் காரராகவும், ஆத்தா மகள்களைத் திட்டிக்கொண்டே இருக்கும் கொடுமைக்காரியாகவுமே எண்ணிக்கொ ண்டிரு ப்பார்கள். அவள் இறப்புக்குப் பின்னரே அவள் தியாகங்கள் தெரியவரும். அவை என்னவென்று நான் இங்கே சொல்லக்கூடாது.

அதே போல் நூலின் கடைசி கதை புவனா. நான் ஜோதிடம் அறிந்தவன் என்ற வகையில் அந்தக் கதையை ரொம்ப ரசித்தேன். எத்தனை எத்தனை ஜோதிடர்கள். எத்தனை எத்தனை பரிகார லீலைப் புரட்டுகள்.

ஆயில்யம் மூலம் பயமுறுத்தல். ராகு துற்கை விளக்கேற்றுதல், 21 தீர்த்தமாடுதல். யப்பா ஒருவன் எத்தனை பரிகாரங்கள் செய்வான் / செய்வாள்.

வாடாமலர் மங்கை என்று ஒரு கதை. அது தினமணி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதையாம். என்னைப் பொறுத்தவரை முதல்தரமான கதை.

"'சிலர் வாழ்க்கை முழுதுமே தன்னலம் அற்றதாக இருக்கிறது. மற்றவர்களுக்காகவே பிறந்து, வாழ்ந்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அதைத் தியாகம் என்று எண்ணுவதில்லை. கடமையாகவே நினைக்கிறார்கள் ""-- ஆஹா எப்பேர்ப்பட்ட உன்னதமான நிலை.
வாடாமலர் ஆச்சி, சூடாமல ராகக் கிடக்கிறார்....

யுவய்ட்டிஸ் இந்தக் கதையில், முதலாளிக்கே உழைத்து, தியேட்டர் ல்
நாள் முழுக்க படம் ஓட்டி, கண்களும் போய்விட்ட சோமண்ணன், அதே போல் ஐயாவுக்காக ஒமையாளின் உழைப்பு..... சிறப்பான கதை.

திருநி லை யும் கூட நல்ல கதை. ஆகமொத்தம், அருமையான சிறுகதைகளின் தொகுப்பு.
அவசியம், படிக்க வேண்டிய நூல்.

Her stories வெளியீடு.

ஒரு sample காண்பிப்பதுபோல், சில கதைகளைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

நீங்கள் எல்லாவற்றையும் படியுங்கள்.

நூல் ஆசிரியர் தேனைம்மை லட்சுமணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

டிஸ்கி:- பெருமகிழ்ச்சியும் பேரன்பும் சார்.  நண்பர் ஒருவரின் விமர்சனம் திரு சபாரெத்தினத்தின் பதிவு உங்கள் படைப்புக்கு மெருகு.
பாராட்டுக்கள்”

கிடைக்குமிடம் :- ஹெர் ஸ்டோரீஸ்
விலை ரு. 200/-
கைபேசி எண். 7550098666.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...