எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 மே, 2022

மன்னை இராஜகோபாலஸ்வாமி செங்கமலத் தாயார் திருக்கோயில்

 மன்னார்குடி மதில் அழகு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த ராஜ மன்னார்குடியில் இராஜ கோபாலனையும் செங்கமலத் தாயாரையும் தரிசிக்கும் வாய்ப்பு சென்ற ஆண்டு கிட்டியது.

நான் மன்னார்குடி செல்லக் காரணமே என் தோழி ப்ரேமலதாதான். அவளுடைய அன்புதான் என்னை அங்கே கட்டி இழுத்துச் சென்றது என்று சொல்லலாம். அவள் மூலம் வசந்தி, வஹிதா, அமுதா ஆகியோரையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.( தஞ்சையில் தேன்மொழி & சாந்தியின் பெண் நந்தினி ) 


கோடைக்காலத்தில்தான் கோயில் திருவிழாக்கள் களை கட்டும். 

மூன்று நான்குசுற்று மதில்கள் உடையது மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில். 

இங்கே திருவிழாவின்போது 18 நாள் உற்சவங்கள் நடைபெறும். அப்போது எல் ஆர் ஈஸ்வரி, அரசவை நர்த்தகி என்ற சிறப்புப் பெற்ற ஸ்வர்ணமுகி ஆகியோர் பாடிய & ஆடிய சிறப்புடையது இக்கோயில். 


கிட்டத்தட்டப் 12 வருடங்கள் மன்னையில்தான் என் இளமைப்பருவம் கழிந்தது. அதனால் ஒவ்வொரு வருடத் திருவிழாவையும் கண்டு களித்திருக்கிறோம். 

முன் மண்டபம், மஹா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறைச் சுற்று எனப் பல அடுக்குப் பிரகாரங்கள் கொண்டது. 
ஆயிரங்கால் மண்டபம். 
நேரே கோபாலன் சந்நிதி. 
செங்கமலம் வரவேற்கிறாள்.
இக்கோயிலைத் தட்சிண துவாரகை என்பார்கள். 

குலோத்துங்கச் சோழனால் கிபி பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஹரித்ரா நதி என்றொரு பெரிய புஷ்கரணியும் உண்டு. 

இறைவன் பெயர் இராஜகோபால சுவாமி, இறைவி செங்கமலத் தாயார். 

உற்சவ மூர்த்தங்கள். குதிரை வாகனம், கருட சேவை, சூரியப் பிரபை, சந்திரப் பிரபை, குறிப்பாக வெண்ணெய்த் தாழி ரொம்ப விசேஷம். 

ஹரித்ரா நதி போக துர்வாசர் தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், கோபிகா தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. 


மேலே சிந்தூர வண்ணத்தில் காட்சி அளிக்கும் பஜ்ரங் பலி. 
இங்கே வெண்ணெய்த் தாழிபோக தேரும் தெப்பமும் கூட மிக விமரிசையாக இருக்கும். 
முருகன் வள்ளி தெய்வானை. 
பசு பால் சொரியும் லிங்கத்திருமேனி. 
பெருமாள் கோயிலுக்குப் போனால் முதலில் தாயாரைச் சேவிக்க வேண்டும் என்பார்கள். 

இது தாயார் சந்நிதி செல்லும் வழியில் இருந்த ஒரு தாமரை அமைப்பு. 

இங்கேதான் சுவாமி உலாவின்போது பல்லக்கு சிறிது நேரம் நிற்குமிடம். 
இராமலெக்ஷ்மண சீதை. 
உயரத்தில் ஒரு சந்நிதி. 

இது ஒரு கற்கோயில். மேலே விதானம் பூராவும் இயற்கை வண்ண ஓவியங்கள். பக்க வாட்டில் யாளிகள் கொண்ட தூண்கள்.

வாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள் காட்சி அளிக்கிறார்கள். 

அம்மன் சந்நிதியில் இருந்து வெளியே தெரியும் மூன்று கோபுரங்கள். 

ஒளியாய் நிறைந்தவள். 

இராமர் பட்டாபிஷேக ஓவியம் ஒரு பக்கச் சுவரில். கல்தூண்களும் கொடுங்கைகளும் அழகு. 


சந்நிதியில் எடுத்தால் சாந்நித்யம் குறைந்துவிடும் என்பதால் பிரகாரங்களை மட்டும் எடுத்துள்ளேன். 

பிரகாரத்தில் காட்சி தரும் திருப்பதி வெங்கடாசபதி. 

அம்மன் சந்நிதியின் உள்ளே பிருந்தா எனப்படும் பிரம்மாண்டத் துளசி மாடம். 


தாயார் சந்நிதியில் இருபுறமும் காவல் பெண்கள் துவாரபாலகிகள். 
மிகப் பெரிய கோவில் இது. நீண்ட பிரகாரங்கள். 

ஃபயர் எக்ஸ்டிங்க்‌ஷருடன் காட்சி தரும் கோல் பிடித்த கோபாலனும் கோமாதாக்களும். 

பல்லக்கு.
ஒவ்வொரு முறை செல்லும் போது நான் வியக்கும் விழுந்து வணங்கும் தம்பதியரின் சிலை. ஆண் அஷ்டாங்க நமஸ்காரம், பெண் பஞ்சாங்க நமஸ்காரம். 
பிரகாரம் முழுமையும் கண்ணாடிச் சட்டத்துள் கோபாலனின் பால்ய லீலைகள். 

சேவை சாதித்தருளிய விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 

கோகுலம், மதுரா, துவாரகையில் நிகழ்த்திய ராஸ லீலைகள். 

மேலே காட்சி தருபவர்கள் ஆழ்வார்கள். 

26 ஆவது சேவையாகத் துலாபாரக் காட்சி. துளசிக்கும் தூய அன்புக்கும்  ஈடாகாது குபேர சம்பத்தும் என்று பாமாவுக்கு உணர்த்திய சேவை.

ஆஞ்சநேயர், ஆலிலைக் கிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், யசோதா கிருஷ்ணன். 
சுவாமியின்  கருவறைச் சுற்றுப் பிரகாரத்தில் ஒரு பிள்ளையார். 

பூதனையைக் கொன்றது. யசோதைக்கு உலகத்தைக் காட்டி அருளியது, விசுவரூப தரிசனம். 

இன்னும் பல சேவைகள் பிரகாரம் முழுமைக்கும். 

அடுத்துச் சித்திர ராமாயணம். 

இங்கே சந்தான கோபால கிருஷ்ணன் விசேஷம். 

ஐந்து தலை நாகத்தின்மேல் அழகுற அமைந்திருக்கும் பால/சந்தான கோபாலனைப் பிள்ளை வரம் வேண்டுவோர் தங்கள் மடியில் அமர்த்தித் தாலாட்டுவர். ( சந்தான கோபால கிருஷ்ணன் )

பட்டர் இதற்கான சில பாடல்கள் பாடி அவர்கள் மடியில் அந்தத் தங்கக் கோபாலனைத் தாலாட்டுவார். அதன் பின் அவர்களுக்குப் பிள்ளை வரம் கிடைத்துவிடும் என்பது நான் கண்டுணர்ந்த ஒன்று. 

சந்நிதி திறக்க வேண்டி சுற்றுப்புற ஓவியங்களைக் க்ளிக்கிக் கொண்டே வெயிட்டிங்,. 

கிருஷ்ணனின் லீலைகள் எவ்வளவு பார்த்தாலும் அலுக்காது. 

இக்கோயிலுக்குத் திருப்பணி செய்த ஸ்ரீ அச்சுதப்ப நாயக்கர், ஸ்ரீ விஜயராகவ நாயக்கர்,  ஸ்ரீ செண்பக லட்சுமி. 
பெருமாள் சந்நிதிக்குப் போகு முன்னே தூணில் தோன்றிக் காட்சி அளிக்கும் ஆழத்து ஆஞ்சநேயர். 

உள்ளே அற்புதக் காட்சி அளித்தான் இராஜகோபாலன் செங்கமலத்தாயாருடன். 
தெரிந்த எல்லாப் பாடல்களையும் சொல்லியபடி இருந்தேன்.

நமஸ்தேஸ்து, மஹா மாயே, ஸ்ரீ பீடே

தேவதா கார்ய சித்யர்த்தம் சபாஸ் தம்ப சமுத்பவம். 

வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய். 

கண்ணிரண்டும் ராமனைக் காணவே காதிரண்டும் ராமனைக் கேட்கவே

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வாரணமாயிரம் சூழ வலம் செய்து

பச்சை மா மலைபோல் மேனி

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

கதிரவன் குணதிசை சிகரம் வந்தனைந்தான்

மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நீளா துங்கஸ்தநகரி தடி சுப்ரமுத் போத்யக்ருஷ்ணம்

அன்னவயல் புதுமை ஆண்டாள் அரங்கற்குப்

திருவாடிப் பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியே. 

ஸ்ரீ ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய சமப்ரப

அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் பிரஹ்மச்சாரிணம். 

ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

அஸாத்ய ஸாதக ஸ்வாமியின் அஸாத்யம் தவகிம் வத

பரித்ராணாய சாதுர்யாம் விநாசாய சதுஸ்க்ருதாம்

கர்மண்யேவாதி காரஸ்தே மாபலேசு கதாசன்

சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ. 

மனோஜவம் மாருத துல்ய வேகம் 

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம். 

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் 

இறைவன் அருட்காட்சியில் கரைந்து பால்யத்துக்குப் போய்த் திரும்பினேன். கூடவே எங்கள் அப்பா அம்மா என் மூன்று சகோதரர்கள் ( ஒருவன் இல்லை இப்போது ) , இரண்டு சித்தப்பாக்களும் மானசீகமாக உலா வந்தார்கள். 

ஆனால் யதார்த்தத்தில் கூட வந்தது கணவர்தான் :)
 
சிம்மத்தின் மேல் கால் வைத்துத் தண்டத்துடன் காட்சி அளிக்கும் பிரம்மாண்ட துவார பாலகர்கள். 
ராயல் சல்யூட். 

பதினோரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இக்கோயிலைக் காத்து வருபவர்கள் அல்லவா. 
பெருமாளை அற்புதமாகச் சேவித்துத் திரும்பி விட்டோம். நல்ல கட்டுக்கோபான கோவில் மற்றும் மதிற்சுவர்கள். 

தேர்நிலை. 
பின்னே பசுமடமும் இருப்பதாகச் சொன்னார்கள்.

கோபாலன் இருக்குமித்தில் கோமாதாக்கள் இல்லாமலா :)
திருக்கோயில் நந்தவனம்

இதைச் சுற்றிக் கொண்டு சாந்தி தியேட்டருக்கு எல்லாம் சென்றிருக்கிறோம். :)


பதினோரு நிலை இராஜகோபுரம்.

நான் மன்னார்குடியைப் பிரிந்து வந்தே நாற்பது வருடம் ஆகிவிட்டது. என்னதான் ஊரே மாறிவிட்டாலும் கோபாலனின் திருக்கோயில் புதுமை அடைந்தாலும் அப்படியே இருப்பதில் மகிழ்ச்சி.  

பிறவிதோறும் தொடரும்பந்தம் போல் கோபாலனைப் பிரிய இயலாமல் திரும்பிப் பார்த்தபடியே பிரிந்து வந்தேன். 

போய் வந்து பத்து மாதமாவது இருக்கும். எப்போடி வருவே திரும்ப என்று பிரேமலதா போனில் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். பார்க்க ஆசைதான். நீ அழைக்கிறாய். பெருமாளும் என்னைத் திரும்ப அழைத்தால் வருவேன் என்று மனதில் எண்ணிக் கொள்கிறேன். 

ஓம் நமோ நாராயணாய.!

2 கருத்துகள்:

  1. புகைப்படம் எடுக்க எடுக்க சலிக்காத அழகு கொண்ட கோவில்.  எத்தனை கோடி பக்தர்களை பார்த்திருப்பார்கள் அந்த துவாரபாலகர்கள்...  எத்தனை பெரிய மனிதர்கள்..  எத்தனை சிறிய மனிதர்கள்...  எத்தனை கயவர்கள்...  

    நான் 2014 ல் ஒருமுறை சென்று வந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஸ்ரீராம். உண்மையான வார்த்தைகள்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...