கெனால்ஸ் செயிண்ட் மார்ட்டின் என்ற கால்வாயின் ஸீன் நதியுடன் இணைகிறது. இந்தப் படகுசெல்லும் பாதை நகரைப் பிளக்கும் ஸீன் நதியின் ஏதோ ஒரு கால்வாய் என்றுதான் தோன்றுகிறது.
ஜீன் ப்ரூயல் என்பவரால் 1917 இல் இந்தப் படகுப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதா சொல்றாங்க. இந்தப் படகுகளை ஃப்ரான்ஸின் மூன்றாவது பெரிய நகரமான லையன் என்கிற படகுத் துறைமுகத்துல தயாரிக்கிறாங்களாம்.
இதன் அப்பர் டெக்கில்தான் பயணிகளை அமரவைத்துக் கூட்டிட்டுப் போறாங்க. மழை போன்றவை வந்தால்தான் லோயர் டெக்கில். இது பக்கவாட்டுகளில் மூடி இருக்கும். இந்தப் படகுப் போக்குவரத்துல நகரின் முக்கிய அம்சங்கள், கட்டிடங்கள், நிகழ்வுகள் , பற்றிப் பதிவு செய்யப்பட்ட ரன்னிங் கமெண்டரி போடுறாங்க.
பாட்டிக்ஸ் மௌச்சஸின் பிரம்மாண்ட அலுவலகம். டிக்கெட் புக்கிங் ஆஃபீஸ் . பயணிகள் காத்திருக்குமிடம்.
இதன் பக்கத்தில் உள்ள இடத்தில்தான் என் புகைப்படம் போட்டிருந்தார்களாம்.
மேலே ஏறும்போது அனைவரையும் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள் , பாட்டிக்ஸ் மௌச்சஸ் நிறுவனத்தார்.
அதில் என் படத்தை என்லார்ஜ் செய்தும் போட்டிருந்தார்கள் என்று அந்த முஸ்லீம் தோழி நாங்கள் பிரியா விடை பெறும் நேரம் சொன்னார். ” நீங்க புடவை கட்டி இருந்ததால் உங்களை ஸ்பெஷலாகக் கவர் செய்திருந்தார் அந்த ஃபோட்டோகிராஃபர் என்றார் !.
அதன் பின் ஈமெயிலில் தொடர்பு கொண்டு ஃபோன் செய்து விசாரித்தால் நாங்கள் டெக்கை விட்டு இறங்கிய அரைமணி நேரத்தில் அனைத்தையும் அழித்து விடுவோம் என்று சொன்னார்கள். நாம கொடுத்து வைச்சது அம்புட்டுத்தான். .
திடீரென சவுண்ட் விட்டு அசையும் டைனோசர் அனைவருக்கும் பீதியைக் கிளப்பியது.
அது ஒரு பொம்மை என்று தெரிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம் :)
க்ளிக் க்ளிக் என்று க்ளிக்கித் தள்ளினோம் அனைவரும். நிறைய செல்ஃபிக்கள் வேறு.
சென்று அமர்ந்ததுமே ஈஃபிலின் நெருக்கமான தரிசனம் !
க்ளிக் க்ளிக் என்று க்ளிக்கித் தள்ளினோம் அனைவரும். நிறைய செல்ஃபிக்கள் வேறு.
ஈஃபிலை ஒட்டிய இந்தப் பால அமைப்பைப் பாருங்கள் வேறு மாதிரி இருக்கும்.
கரண்டுக் கம்பமாக செயல்பட்டது இன்று டூரிஸ்ட் அட்ராக்ஷனாகி விட்டது.
சாய் கோணத்தில் முழுசாய் ஈஃபில்.
இப்படிப் படகில் நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதை போட் டூர் என்கிறார்கள்.
இடப்பக்கத் துறைமுகக் கரையோரம் ஆரம்பித்து உலா வந்து நகரைக் காண்பித்து அதன்பின் பாதியில் திரும்பி வலப்பக்கக் கரையோரமாகச் சென்று மிச்ச நகரைக் காண்பித்துத் திரும்ப இடப்பக்கத் துறைமுகத்தில் இறக்கி விடுகிறார்கள்.
துபாயில் எங்கெங்கும் புர்ஜ் கலிஃபா போல் இங்கே எங்கெங்கும் ஈஃபில்தான்.
ரயில்வே பாலம் போல் , படகுப் பாலம் போல் இன்னொரு பாலத்தைக் கடந்தோம்.

எம்மாம் பெரிய இரும்புக் கட்டமைப்புகள். !
இது அப்பாலத்தின் மேலே செல்லும் பாதை. மேற்கூரை வேய்ந்து மிக அழகாகக் காட்சி அளித்தது.
ஈஃபில் டவர், நாட்டர்டாம் கதீட்ரல், அலக்ஸாண்டர் 3 ப்ரிட்ஜ், பாண்ட் நியூஃப் ப்ரிட்ஜ், ஒர்ஸே மியூசியம், லூவர் மியூசியம் அனைத்தும் பார்க்கலாம்.
எஃகு இரும்புக் கம்பிகளால் கட்டமைக்கப்பட்ட பாலம்.
இது அப்பாலத்தின் மேலே செல்லும் பாதை. மேற்கூரை வேய்ந்து மிக அழகாகக் காட்சி அளித்தது.
எஃகு இரும்புக் கம்பிகளால் கட்டமைக்கப்பட்ட பாலம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!