எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 மே, 2022

பாட்டிக்ஸ் மௌச்சஸ் - 3

 ஏற்கனவே இரண்டு சுற்று ஸீன் நதியின் மேல் வந்திருக்கிறோம். வாங்க மூணாவது சுற்றும் போய் வருவோம். 

வான்கூவர், லூவர், மியூசியங்கள் , பிர்லா ஹவுஸ், ஈஃபில் டவர், சுதந்திர தேவி சிலை , அலக்ஸாண்டர் 3 ப்ரிட்ஜ் ம் பாண்ட் நியூஃப்,  ஓர்ஸே மியூசியம், நெப்போலியனைப் புதைத்த இடம், லே இன்வாலிட்ஸ் என்ற இடம்  இதெல்லாம் இந்த பாட்டிக்ஸ் மௌச்சஸ் என்னும் பறக்கும்படகில் போகும்போது பார்க்கலாம். 

அதோ தெரியுதுல்ல . மண்டபம் போல ஒண்ணு. அதுதான் பாட்டிக்ஸ் மௌச்சஸ் எனப்படும் பறக்கும் படகுகளின் துறைமுகம். பின் பக்கம் தெரிவது வெயிட்டிங் ஹால். 



அடுத்தடுத்துப் படகுகள் கிளம்பிக்கிட்டே இருந்தன. 

துறைமுகத்துக்கு இந்தப்பக்கம் ஹாஃப் ரவுண்ட். அந்தப் பக்கம் ஹாஃப் ரவுண்ட். 
இதுதான் முதல் பாலம். ஒவ்வொரு பாலத்தில் வடிவமைப்பையும் நல்லா பார்த்துக்கிட்டே வாங்க. ஏன்னா ஒண்ணு போல இன்னொண்ணு இல்லவே இல்ல. 

பாலத்தைத் தாங்கும் தூண்களில் பல்வேறு அழகிய சிற்பவேலைப்பாடு கொண்ட சிலைகள் வேறு எழிலூட்டுகின்றன.  ஏதோ ஒரு பெண் சிலை போலத்தான் தெரியுது. ராணியாக இருக்குமோ என்னவோ. தலைக்குமேல் வேல் ஈட்டி , லாரல் பூமாலை எல்லாம் காணப்படுது. 

இது அலக்ஸாண்டர் 3 பாலம். 
இவங்க எல்லாரும் நம்ம இண்டியன்ஸ்தான். 

லண்டன், அமெரிக்கா, யூரோப்பில் வாழும் இந்தியன்ஸ். 

முக்கால் படகை நாங்களே ஆக்கிரமிச்சிட்டு இருந்தோம். அதோ தெரியும் இஸ்லாம் பாணி உடையணிந்த பெண் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒரு டாக்டரின் மனைவி. ஆனால் பல்லாண்டுகளாக வசிப்பது என்னவோ  அமெரிக்கா என்பதால் அவர் மட்டுமே நம்முடன் தமிழில் பேசினார். 

இது இன்னொரு எழில்மிகு பாலத்தின் தோற்றம். மேலே மறுமலர்ச்சி பெற்ற ஃப்ரான்ஸின் புரட்சி வனிதையர் சிலை. 

இது மன்னர் மூன்றாம் அலக்ஸாண்டர்  பாலம் நெருக்கத்தில். ALEXANDER III BRIDGE. 

இந்தப் பாலம் கலைப்பாலம். அதுதான் வெகு அழகு. கூகுளில் தேடினால் இதன் பெயர் எல்லாம் கிடைத்தது.  :) 

இதன் விளக்குத் தூண்களையும் பாலம் முடிவில் மாபெரும் தூண் சிற்பங்களையும் கண்டு களித்தோம். பெரும்பாலும் வீரர்களும் வீராங்கனைகளும்தான். 
கோட்டை அமைப்பில் வாயில்களும் ஏறி இறங்கப் படிகளும்.  



பாலச் சிற்பங்களைப் பார்த்த மகிழ்வில் நான் தான் :) ! 

தூரத்தே தெரிகிறது ஈஃபில் டவர். 

இந்தப் பாலத்தின் நான்கு தூண்களும் அதன் மேல் தங்க நிறச் சிற்பங்களும் தூரத்திலும் கண்ணைக் கவர்கின்றன. 

இது ஃப்ரெஞ்ச் பார்லிமெண்ட் கட்டிடம் போல் தெரிகிறது. 

நிறையத் தூண்கள் கொண்ட பாரம்பரியப் புராதன பிரான்ஸின் கட்டிட அமைப்பில் உள்ளது இது. தெ மேடலைன் பில்டிங்க் ஸ்டோரி என்கிறது இமேஜஸ். 

OOPARA HOUSE ஓபரா ஹவுஸ் என்ற ஒன்றும் பார்த்தோம். 


அடுத்துப் பொதுமக்கள் புழங்கும் பாலம். வேறு மாதிரி எளிமையாய் அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

பறக்கும் படகில் நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளைப் பாருங்கள். வித்யாசமா இருக்கில்ல. !

இது ஓர்ஸே மியூசியம் ! 
குடும்பத்தோடு ஒரு ப்ரகாசமான க்ளிக். 
ஓர்ஸே மியூசியம் ரொம்பப் பிரம்மாண்டம். 

இந்தப் படகுப் போக்குவரத்துல போயிட்டு வர்றதுக்கு  ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் எடுக்குது. 

இது இன்னொரு பாரம்பரியப் பாலம். சிமிண்ட் கலவையால் கட்டப்பட்டது. 

இதோ தெரிவது லூவர் மியூசியம். 
சில படகுகளில் மதிய இரவு உணவு வகைகள் உண்டாம் . இதில் கிடையாது. 



இருந்தும் டிக்கெட் விலை பதினாலு யூரோ ஒரு ஆளுக்கு. ! 

பின்புறப் பாலத்தைப் பாருங்க கம்பிகளிலேயே வெகு வித்யாசமான அமைப்பு. 

ஸீன் நதிப் பயணத்தில் இங்கே அமைக்கப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலையைப் பக்கத்தில் போய்ப் பார்க்கலாம்னாங்க. ஏன்னா இதுதான் ஒரிஜினல் சுதந்திர தேவி சிலை . இதுக்கு அப்புறம்தான் அமெரிக்க சுதந்திர தேவி சிலை உருவாச்சாம். 

இங்கே அதுக்குப் போகுமுன்னாடி இறக்கி விட்டுட்டாங்க. அதுனால தூரத்துல இருந்து பார்த்தோம். அம்புட்டுத்தான். ஹ்ம்ம். அடுத்த போஸ்டில் ஈஃபிலைப் பார்த்துவிட்டு இறங்குவோம். 

2 கருத்துகள்:

  1. மகிழ்ச்சி. எங்களுக்கு இவற்றையெல்லாம் பார்க்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. சில படங்கள் சிவந்த மண் திரைப்படத்தை நினைவூட்டின.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஜம்பு சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...