எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 17 மே, 2021

பிரியமான பிரியாணியே..! குமுதம் சிநேகிதிக்காக

பிரியமான பிரியாணியே.. ! குமுதம் சிநேகிதிக்காகத் தேனம்மை லெக்ஷ்மணன்.

 பெர்ஸியாவிலிருந்து
 பிரியமுடன் வந்த பிரியாணி :-

 

பிரிஞ்ச் என்றால் பெர்ஸிய மொழியில் அரிசி என்று அர்த்தம்பிரியான் என்றால் அரிசியை வறுத்துச் சமைப்பது என்றும் பொருள்பெர்ஸியாவிலிருந்து இந்தியாவுக்கு இந்த பிரியானை பதினாறாம் நூற்றாண்டிலேயே கொண்டுவந்து பிரியாணியாக வளர்த்தெடுத்த பெருமை முகலாய மன்னர்களையே சாரும்அரேபிய வணிகர்களும் இந்தியாவுக்கு இவ்வுணவைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.  ஹைதை நிஜாம் ( முதலாம் ஆஸஃப் ஜா ) அரண்மனைகளில்தான் இவ்வுணவு மிகப் பிரசித்தியடைந்தது.  நவாபுகளின் சிறப்புணவான இது இன்று இந்தியாவின் தெருக்கள்தோறும் கிடைக்கிறது

 

ஆசிய அரேபிய மக்களின் விருந்துணவுகளில் பிரியாணிக்கு என்றுமே முக்கிய இடம் உண்டுபிரியாணியில் சேர்க்கப்படும் பொருட்கள் உடல்நலம் பேணுவதிலும் முக்கியத்துவம் வகிக்கின்றனஅரிசி உடலுக்கும் மூளைக்கும் எரிபொருளாகும் கார்போஹைட்ரேட்டைத் தருகிறதுநெய்தயிர்எலுமிச்சை உடலைக் குளிர்ச்சியாக்குகின்றன.  


 இஞ்சிபூண்டுமிளகுஜாதிக்காய்ஜாதிபத்திரி ஜீரணத்துக்கும்இறைச்சியில் கிடைக்கும் ப்ரோட்டீன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகின்றனபட்டைகிராம்புஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்ப்பதால் உடல்வலி நீங்கி புத்துணர்வு ஏற்படுகிறதுஇவை பித்தத்தை நீக்கிக் கல்லீரலையும் சுத்தப்படுத்துகின்றனமஞ்சள் குடல்புண்ணை ஆற்றுவதோடு வீக்கத்தையும் நீக்குகிறதுஇறைச்சியில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் நம்ம ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதோடு எலும்புக்கு வளர்ச்சி கொடுத்து , விட்டமின் குறைபாட்டையும் ( செலினியம்விட்டமின் பிபி 6, நியசின்நீக்குதுநெய்யும் இறைச்சியிலிருந்து கிடைக்கும் கொழுப்புகளும் உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றனகொழுப்புச் சத்துநெய்,வெண்ணெய் இருக்குதேஉடல் பருமனாயிடுமோன்னு கவலைப்பட வேண்டாம்.  ஏன்னா பாசுமதி அரிசி உண்பதால் உடல் எடைகுறையும் என்பதே உண்மைஎனவே பிரியாணி செய்து அனைவருக்கும் ஈந்து பிரியமுடன் உண்போம்.


2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...