எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 9 மே, 2021

அமேஸானில் என் மின்னூல்கள் 30 - 37.

1. எனது முப்பதாவது மின்னூல்,” தனிமையில் ததும்பும் இதயம் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 60/- மட்டுமே


https://www.amazon.in/dp/B08WHBVPFP

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

///குழந்தையின்

பொம்மைத்தேராய்

இழுத்துச் செல்கிறேன்

உன் நினைவுகளை ...


இடறும் சமயம்

நடைவண்டியாய்

அவை என்னை

முன்னிழுத்துச் செல்கின்றன..///


2. எனது முப்பத்தி ஒன்றாவது மின்னூல்,” பெண்ணின் மரபு “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 150/- மட்டுமே


https://www.amazon.in/dp/B08ZJYKMSB

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

இன்றைக்கும் பெண் வீரமிக்க வளாக, விவேகம் நிறைந்தவளாக, நிர்வாகத்தினைச் செம்மையுற நடத்தும் ஆற்றல் பெற்றவளாக, பாசமும் அக்கறையும் நிறைந்தவளாக, விருந்தோம்பலில் இணையற்றவளாகத் திகழ்கிறாள். இவையெல்லாம் பண்டைய மரபின் நீட்சியாகும்."பழையோன் குழவி" என்ற முருகனைக் குறிக்கும் (திருமுருகாற்றுப்படை) தொடரில் "பழையோன்" என்ற சொல் தொன்மையான இறைவியாகக் கொற்றவையைக் குறிக்கும். தாய் தெய்வம் நன்மைகளை வளர்க்கவும் தீமைகளை அழிக்கவும் ஆற்றல் பெற்றிருந்தது. 

எகிப்து, மெசப்பொடேமியா போன்ற நாடுகளில் காணப்படும் தாய்க்கடவுளின், சிற்பங்கள் தமிழ்நாட்டுக் கொற்றவை போன்று ஆயுதம் தாங்கிக் சிங்க வாகனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளன. இவையனைத்தும் வேளாண் சமுதாயத்தில், பெண் பெற்றிருந்த சிறப்பிடத்தைக் காட்டக் கூடியன.

 பெண்களுக்கு மந்திர ஆற்றல் இருந்ததாகச் சைபீரியர்கள் நம்பி வந்தனர். மங்கோலியப் புராணங்கள், பெண்களே நோய் தீர்க்கும் மந்திரங்களை ஓதி வந்ததாகக் காட்டுகின்றன. ஆன்மிகம் வீரம் நிறைந்தவர்களாகப் பண்டைக்காலத்தில் பெண்களும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 இன்றைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்பவர்களாகப் பெண்கள் பரிணமிப்பதும் புராதன மரபின் நீட்சியே. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் வரவு செலவு திட்டத்தினை ஒரு பெண் அமைச்சர் தாக்கல் செய்கிறார் என்றால் அது பெருமைக்குரியது அல்லவா? நம்நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் இது போல, பல நம்பிக்கைதரும் எடுத்துக்காட்டுகள் உள்ளன.

 அத்தகைய பெண்ணினம் பெற்ற பெருமைகளை மட்டுமல்ல, பல்வேறு சூழல் சார்ந்த இடர்களையும் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டி இந்த நூற்றாண்டில் அவர்களோடு கரம்கோர்க்கவும் இந்தச் சமுதாயம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும் வேண்டியே இக்கட்டுரைகளைப் படைத்துள்ளேன்.

 பெண்களுக்கெனவும் பெண்களின் அகநிலை புறநிலை சமூகநிலை பற்றியும் எழுதப்பட்ட என்னுடைய நான்கு நூல்களை வெளியிட்டு பெண்சக்திக்கு என்னுடைய பங்களிப்பை அளிக்க உதவிய தானம் அறக்கட்டளைக்கும் நமதுமண்வாசம் இதழுக்கும் ஆசிரியர் திரு திருமலை அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

இது எனது பதிநான்காவது நூல். என்றைக்கும் என் உயர்வில் கரம் கொடுக்கும் என் கணவருக்கும், குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் அன்பு நன்றிகள். இந்நூலை களஞ்சியம் அமைப்புக்கும், சுய உதவிப் பெண்கள் குழுமத்துக்கும், வளர் இளம் பெண்கள் குழுவுக்கும், தானம் அறக்கட்டளைக்கும் நமது மண்வாசம் இதழுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். அன்பு நன்றிகள். வாழ்க வளமுடன்.

3.எனது முப்பத்தி இரண்டாவது மின்னூல்,” செட்டிநாட்டு சமையல் வகை - 200 (CHETTINAD CUISINE - 200) “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 150/- மட்டுமே


https://www.amazon.in/dp/B09165ZMKN

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

செட்டிநாட்டு உணவுகளின் முக்கியத்துவம்

செட்டிநாடு என்றாலே கட்டுக் கோப்பான வீடுகளுக்கு அடுத்தபடியாக அவர்களின் விருந்தோம்பல்தான் ஞாபகம் வரும். செட்டிநாட்டு உணவுகள் கண்ணுக்கும் நாவுக்கும் ஒரு சேர விருந்தளிப்பவை.

வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே மிகச் சிறப்பான சமையலைச் செய்ய முடியும் என்பது அதன் சிறப்பு. மிகக் குறைவான பொருட்களே தேவை. சிறிது எண்ணெய் மட்டுமே அதிகம் சேர்ப்பார்கள்.

செட்டிநாட்டு உணவுகளில் மசாலை என்பது சிறப்பு. அம்மியில் மிளகாய் சோம்பு அரைத்துச் செய்வார்கள். கிட்டத்தட்ட தினமும் ஒரு மசாலை இருக்கும்.

ஒரு நாள் சமையலிலேயே பொருத்தமாக சமைப்பார்கள். சாம்பார் என்றால் மசாலை, பிரட்டல், மண்டி, வடை , துவையல் போன்ற பக்க பதார்த்தங்களும், கெட்டிக் குழம்பு என்றால் பொரியல், துவட்டல் போன்ற பக்க பதார்த்தங்களும் ( வெஞ்சனங்களும் ) சூப்பு, இளங்குழம்பு என்றால் காரமான பக்கபதார்த்தங்களும் செய்வார்கள்.

ஒன்றில் தேங்காய் போட்டால் இன்னொன்றில் பருப்பு போடுவார்கள். இன்னொன்றைக் காரமாக சமைப்பார்கள். காய்கறி தோதுபார்த்துத்தான் தொட்டுக்கொள்ள வைப்பார்கள்.

இட்லிக்குத் தொட்டுக் கொள்ளவே 20 க்கும் மேலான சட்னி, சாம்பார்,துவையல் வகைகள் வைப்பார்கள், கெட்டிக் குழம்பு, இளங்குழம்பு, தண்ணிக் குழம்பு, சூப்பி, விதம் விதமான சட்னி, ரசம் வகைகள் செட்டிநாட்டின் சிறப்பாகும்.

இடைப் பலகாரம் என்பது ( மாலைப் பலகாரம்) இங்கே வழங்கப்படும் விருந்தின் சிறப்பாகும். இன்னும் திருமணங்களிலும் ஒவ்வொரு வேளையிலும் 10 , 10 விதமான பலகாரங்களை 4 நாட்களுக்குச் செய்வார்கள்.

படைப்பு, பூசை, விளையாட்டுப் பொட்டி வேவு, பிள்ளையார் நோம்பு, புதுமை, சூப்டி, திருவாதிரை, சுவீகாரம் ஆகியவற்றில் செய்யப்படும் பலகாரங்களும், திருமணப் பலகாரம், சடங்குப் பலகாரம் ஆகியனவும் சிறப்பானவை.

உடலுக்கு ஒரு கேடும் செய்யாத உணவு வகைகள் இவை என்பதே இவற்றின் சிறப்பும் கூட.

4.எனது முப்பத்தி மூன்றாவது மின்னூல்,” 25 நூல்கள் - ஒரு பார்வை  “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே


https://www.amazon.in/dp/B0922CN7NC

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 

நான் வாசித்த நூல்களை எனது பார்வையில் தருவதில் மகிழ்கிறேன். எண்ணம் போல் வாழ்வு என்ற சொல்போல என்னவாக விரும்புகிறீர்களோ அந்த நிலைக்கு மனம் உங்களை எடுத்துச் செல்லும். நம்மையும் சுற்றி இருப்போரையும் முழுமையாக நம்ப வேண்டும்.. நம் திறமைகளை எடுத்துக்கூறி நம்மை முன்னேற்றுவதில் நம் நலம் விரும்பிகளும் அன்பானவர்களும் பெரும்பங்கு வகிக்கிறார்கள்..அதேபோல் நம்மை மிக நல்ல உயரங்களுக்கு இட்டுச் செல்கின்றன இந்தப் புத்தகங்கள்..

5.எனது முப்பத்தி நான்காவது மின்னூல்,” 25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு)  “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே


https://www.amazon.in/dp/B0924LFRFY

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 

என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் மொழிபெயர்ப்பில் அந்த மொழி சிதைவுறாமல்., சொல்லவந்த கருத்துக்கள் பிழைபடாமல் சொல்வது கடினம். ஒரு மொழிபெயர்ப்பாளன் வாசகர்க்கும், அந்த நூலை எழுதிய எழுத்தாளனுக்கும் உண்மையாய் இருக்க வேண்டும். தன் கருத்து. ஒர் சார்பு நிலை எந்த இடத்திலும் வெளிப்பட்டுவிடாமல் காக்க வேண்டும். ஒரு சிருஷ்டிகர்த்தாவை விட கடினமான பணி அதைப் போன்ற குறைவில்லாத உயிர் சிற்பம் செய்வதே. அசலின் எல்லா குணங்களும் நகலிடமும் இருக்கவேண்டும்., எந்தச் செதுக்கலும் இல்லாமல். இதை சிறப்புறச் செய்திருப்பதால் இந்த நூல் பலவருடம் கழித்தும் என் கவனத்தை மிக ஈர்த்தது.

பொதுவாக பல நாடுகளைச் சேர்ந்த சிறுகதைகளை மொழிபெயர்க்கும்போது பரந்துபட்ட அனுபவங்களோடு அந்தந்த நாட்டின் வாழ்வுமுறைகள், சீதோஷ்ணம், அரசியல், வரலாறு, இலக்கியம், இலக்கிய ஆசிரியர்கள் எல்லாருமே கொஞ்சமாவது பரிச்சயமாய் இருந்தால்தான் சிறப்பாக புரிந்துணர்வோடு சரியாக மொழிபெயர்க்க முடியும். ஒவ்வொரு மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களும் எனக்கு பாரதியை நினைவூட்டுகிறார்கள். சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்ப்பீர் என்பதைப் போல நம் மொழி மட்டுமே அறிந்த நன்கு வாசிக்கும் ஆசையுள்ள ஒவ்வொரு வாசகனையும் இம்மாதிரி நூல்கள் சென்றடைகின்றன. கலாசாரங்களையும் நாடுகளையும் மக்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.

சிறுவயதில் என் அம்மா புத்தகத் திருவிழாக்களில் வாங்கிக் கொடுத்த மீகயில் கோர்பசேவ் சிறுகதைகள், ரஷ்யச் சிறுகதைகள், அப்படியே மனதில் பதிந்து போயிருக்கின்றன. இம்மாதிரி புத்தகங்களையும் தமிழ் வாசகர் வட்டம் படித்து தங்கள் மொழியை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழ் அவ்வளவு இனிமையாக இருக்கிறது. கொஞ்சம் வார்த்தைகள் , ஊர் பெயர்கள் படிக்க சிறிது சிரமப்பட்டாலும் படிக்கப்படிக்கச் சரளமாகி ஒன்றிவிடுகிறோம். அந்தந்த இடங்களுக்கே நம்மை அழைத்துச் செல்லும் இந்தக் கதைகள் சிறுகதைவடிவங்கள், எழுத்துக்கள் அறுகிவரும் இந்நாளில் அனைவருமே படிக்க வேண்டியவை.

6.எனது முப்பத்தி ஐந்தாவது மின்னூல்,” 25 நூல்கள் - ஒரு பார்வை (மூன்றாம் தொகுப்பு)  “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே


https://www.amazon.in/dp/B092SSZTWS

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 

இயற்கையை அளவுக்கு மீறியும் முறையற்ற வழியிலும் பயன்படுத்தி நாசப்படுத்துவதும், சகமனிதர்களையும் ( பெண்களையும்) அவ்வாறே நடத்தித் துன்புறுத்துவதும் மனிதர்களின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது. இது ஆதிக்க சாதி மனப்பான்மை என்பது ஒருபுறமிருக்க இன்றைய காலகட்டத்தில் இது எல்லா இடத்திலும் விரவி இருக்கும் ஆதிக்க மனிதர்களின் மனப்பான்மை என்று கொள்ளலாம்.

ஆதிக்க உலகில் வேட்டையாடப் படும் சாதாரணப் பெண்களின் பல்வேறு வாழ்வியல் நிலை பற்றியும் துயரம் பற்றியும் அதிகம் சொல்லிச் சென்றாலும் சாயப் பட்டறை ஊரினாலும் மேலும் ஆண்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களினாலும் வேட்டையாடப்படுவதையும் சொல்லிச் செல்கின்றன என்பது இதன் தனித்துவம்.

7.எனது முப்பத்தி ஆறாவது மின்னூல்,” 25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு)  “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே


https://www.amazon.in/dp/B092W56C5M

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 

புலம்பெயர் வாழ்வின் இருப்பையும் இருப்பின்மையையும் ஈழத்து எழுத்தாளர்கள் வலிமையுடன் பதிவு செய்திருப்பார்கள். நம் தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரிவு ஏற்படும்போது வர்க்கபேதம் ஜாதிபேதமின்றி மக்களுக்குள்ளே ஏற்படும் பிரிவையும் வேறுவழியின்றி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் வலியையும் அப்படியே தன்னுடைய எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்

ஒவ்வொரு பெண்ணின் வெற்றியிலும் ஒரு ஆண் இருக்கிறார். அவர் தந்தையாகவும் இருக்கலாம். கணவராகவும் இருக்கலாம்

நாம் வியந்து படிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள எதார்த்தத்தை பகிர்கிறது. வாழ்வியல் இடையூறுகளையும் நோய்க்கூறுகளையும் கடந்து அவர்கள் எவ்வாறு சாதித்தார்கள் என்பதைப் படிக்கும்போது பிரமிப்பாய் இருக்கிறது.

சிறப்பு என்னவென்றால் இவர்கள் அனைவருமே விளிம்பு நிலை மக்களின், எளிய மக்களின் கதைகளைப் பதிவு செய்தவர்கள். எல்லாருமே புரட்டிப் போடும் எழுத்துக்கும் கருத்துக்கும் சொந்தக்காரர்கள். சமுதாயத்தை நிமிர்ந்த சிந்தையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு சாடியவர்கள். அதை வலிமையாகப் பதிவு செய்தவர்களும் கூட. எனவே பேட்டிகளும் கார சாரமாய் இருக்கின்றன. எழுத்துக்களைப் படித்த நாம் இதில் எழுத்தாளர்களைப் படிக்கமுடிவதால் இது மிகச் சிறந்த ஆவணப் புத்தகமாக உள்ளது

8.எனது முப்பத்தி ஏழாவது மின்னூல்,” 25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு)  “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே


https://www.amazon.in/dp/B09314CQ26

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 

*தமிழின் முதல் புலம்பெயர் நாவல்கள், புதிய வாசிப்பனுபவத்தை உண்டாக்கிய நாவல்கள், தென்கிழக்கு ஆசியாவின் இன்னொரு முகத்தையும் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகள் பற்றியும், இந்திய தேசிய ராணுவத்தைப் பற்றியும் ( போஸ் பற்றி சிறிது ) விரிவாகச் சொல்லிய நாவல்கள், ஏகாதிபத்திய நாடுகளின் காலனி ஆதிக்க அரசியல் பின்புலத்தில் அமைந்தது என பல்வேறு சிறப்புகள் உண்டு

*மனதோடு பேசும் கவிதைகள், மகளோடு பேசும் கவிதைகள், படிப்பவரையே மகளாக உணரவைக்கும் கவிதைகள் என பிரியம் பேசும் கவிதைகள் அனைத்துமே. நமக்கொரு பெண்ணில்லையே என்று படிப்பவரை ஏங்கவைத்துவிடும் கவி வரிகள் அற்புதம். உணர்வுகளாலும் பாசத்தாலும் நெய்யப்பட்ட கவிதைகள்.

*சமண மதத்தின் குறிப்புகள் வளையாபதியிலும் , பௌத்த மதத்தின் குறிப்புகள் குண்டலகேசியிலும் காணப்படுகின்றன. அறிவன் அடி - அருகக்கடவுள் அடி போற்றி என்ற இறைவணக்கப்பாடல் சமணத்தைக் குறிப்பதாகவும், இறைவன் அவன் தாள் சரண் நாங்களே - புத்தபகவான் திருவடி சரணம் என்பதாக வரும்பாடல் பௌத்தத்தைக் குறிப்பதாகவும் சுட்டுகிறார்கள்.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...