எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 3 ஏப்ரல், 2021

சில்வர்ஃபிஷ் வள்ளியம்மை அருணாச்சலத்துடன் ஸ்டார்ட் அப் & பிஸினஸ் நியூஸுக்காக ஒரு பேட்டி.

திருமிகு. வள்ளியம்மை அருணாச்சலம் பதிப்பக உலகின் புதிய விடிவெள்ளி. அவர் அடிப்படையில் மென்பொறியியல் துறையில் டீம் லீடராகப் பணிபுரிகிறார். வாசிப்பினால் ஈர்க்கப்பட்ட அவர் 40 ப்ளஸ் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். இந்த வருடப் புத்தகத் திருவிழாவில் சில்வர்ஃபிஷ் என்றொரு ஸ்டாலை அமைத்து அதில் புத்தக விற்பனையிலும் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார். சில்வர் ஃபிஷ் பதிப்பகத்தின் மூலம் மாதாந்திரியும் இன்னும் பல நூல்களை பதிப்பித்தும் வெளியிட உள்ள அவரிடம் திரு. சேதுராமன் சாத்தப்பன், திரு.ஹுமாயூன் ஆகியோர் நடத்திவரும் ஸ்டார்ட் அப் & பிஸினஸ் நியூஸ் என்னும் மின்னிதழுக்காகப் பேட்டி ஒன்று எடுத்தேன். அதை இங்கே தருகிறேன். 

///1.உங்கள் சுயவிபரம், குடும்பம் பற்றிக் கூறுங்கள்
2. கிண்டில் அமேஸான் ஆகிய ஆன்லைன் வாசிப்புத் தளங்கள் பெருகிவிட்டபோது அச்சுப் புத்தகங்களுக்கான தளம் இருக்கிறதா.
3. உங்களை வாசிப்பிற்கும் எழுத்துக்கும் பதிப்புத் தொழிலுக்கும் கொண்டு வந்தது எது
4. சில்வர் ஃபிஷ் என்று உங்கள் புக் ஸ்டாலுக்குப் பெயரிட்டுள்ளீர்கள். அது பற்றி
5. மென்பொறியியல் துறையிலிருந்து கொண்டே புக்ஃபேரில் புத்தக விற்பனை செய்த அனுபவம் எப்படி இருந்தது.
6. என்னன்ன நூல்கள் அதிகம் விற்பனை ஆயின
7. உங்கள் முதல் நூல் பற்றியும் அதை எழுதத் தூண்டியது எது என்பது பற்றியும்
8. இந்தியச் சந்தையில் அச்சு புத்தகங்களுக்கான எதிர்காலம் என்ன
9. இந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் நூல்களுக்கான வரவேற்பு எப்படி
10. பதிப்புத்துறையில் இன்னும் என்னென்ன சாதிக்கலாமென்று திட்டமிட்டுள்ளீர்கள்.
11. பதிப்புத் துறைக்குப் புதிதாய் வர விரும்புபவர்களுக்கு உங்கள் அட்வைஸ்.

இது போக நீங்கள் சொல்ல நினைப்பனவற்றையும் எழுதி அனுப்புங்கள். 
அன்புடன் 
தேனம்மைலெக்ஷ்மணன்///


 1.உங்கள் சுயவிபரம்குடும்ப பற்றிக் கூறுங்கள்

 


எனது பெயர் வள்ளியம்மை அருணாச்சலம். மென்பொறியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என் கணவர் திரு. நாராயணன் அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் பெண் கல்லூரியில் இரண்டாமாண்டும்இரண்டாவது பெண் எட்டாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். 

 

2. கிண்டில் அமேஸான் ஆகிய ஆன்லைன் வாசிப்புத் தளங்கள் பெருகிவிட்டபோது அச்சுப் புத்தகங்களுக்கான தளம் இருக்கிறதா.

 

இளைய தலைமுறையினரின் வாசிக்கும் தளம் மாறி இருக்கிறது என்பது உண்மைதான். எளிதாக ஒரு சில விஷயங்கள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்வது என்பது வரவேற்கத்தக்க விஷயம்தானேஇதனால் வாசிக்கும் மக்கள் அதிகமாகி இருக்கின்றனர். அச்சுப் புத்தகங்களை வாசிக்கும் வாசகர்களும் கணிசமான அளவில் இருக்கவே செய்கிறார்கள். ஆன்லைன் புத்தகங்களை ஆரம்பத்தில் வாசித்துப் பழகினாலும்பின்னர் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வீட்டில் வைத்துக் கொள்வதுதேவையானபோது குறிப்பெடுத்துக் கொள்வதுபுத்தகங்களை பரிசளிப்பது இது போன்ற தேவைகளுக்காக புத்தகங்களை வாங்குகிறார்கள். எனவேஅச்சுப் புத்தகங்களுக்கான தளம் என்பது இருக்கவே செய்கிறது.

 


3. 
உங்களை வாசிப்பிற்கும் எழுத்துக்கும் பதிப்புத் தொழிலுக்கும் கொண்டு வந்தது எது

 

வாசிக்க ஆரம்பித்தது ஓஷோவின் புத்தகத்தை எதார்த்தமாக. ஓஷோவின் கருத்துக்களை வாசிக்க ஆரம்பித்ததால் அது அப்படியே தொடர்ந்தது. என்னுடைய வாசிக்கும் ஆர்வம்என் கருத்துகளையும்உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தும் ஒரு பழக்கத்தை எனக்கு ஏற்படுத்தியது. இந்தப் பழக்கமேஎனக்கு எழுதும் ஆர்வத்தையும் தூண்டியது. பின்னர்ஒரு கட்டத்தில் நான் சிறு வயதில் இருந்தபோதுவாசிப்பது என்பது தினசரிப் பழக்கமாக இருந்தது என்பதும்இந்தத் தலைமுறைக்கு அந்தப் பழக்கம் இல்லாது போனதும் புரிந்தது. வாசிக்கும் பழக்கத்தை அடுத்த தலைமுறையினரிடம்பரவலாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பதிப்புத் துறையில் நுழைந்து இருக்கிறேன்.

 

4. சில்வர்ஃபிஷ் என்று உங்கள் புக் ஸ்டாலுக்குப் பெயரிட்டுள்ளீர்கள். அது பற்றி


சில்வர்ஃபிஷ் என்பது ஒரு சிறு பூச்சி. இது புத்தகங்களை வைக்கும் அடுக்குகளிலும்பெட்டிகளிலும் அவற்றின் ஓரங்களிலும் இருக்கும் பசையை உண்பதற்காக காணப்படும். புத்தங்களுடன் நெருக்கமான தொடர்புடைய ஒரு உயிரினம் என்பதால் அந்தப் பெயரை எங்கள் பதிப்பகத்துக்கு வைத்தோம்.

 

 


5. மென்பொறியியல் துறையிலிருந்து கொண்டே புக்ஃபேரில் புத்தக விற்பனை செய்த அனுபவம் எப்படி இருந்தது.

 

எப்போதும் கணினியுடன் வேலை செய்து கொண்டிருந்த எனக்குவாசிக்கும் பழக்கம் நிறைந்த மக்கள்பதிப்பக நண்பர்கள் என்று பலதரப்பட்ட மக்களை சந்தித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. இந்தத் துறையில் மேலும் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு புரிதலும் கிடைத்தது.

 

 

6. என்னன்ன நூல்கள் அதிகம் விற்பனை ஆயின.

 

இளைஞர்கள் யுவால் நோவா ஹராரிநம்மாழ்வார் அய்யா போன்றவர்களின் புத்தகத்தை தேடி வந்து வாங்கினர். மேலும்சுய முன்னேற்ற புத்தகங்களும்குழந்தைகளுக்கான பயிற்சி புத்தங்கங்களும்ஆன்மீக புத்தகங்களும்உடல் ஆரோக்கியம் குறித்த புத்தகங்களும்ஆண் பெண் உறவு குறித்த புத்தகங்களும் அதிகமாக விற்பனை ஆகின.

 

7. உங்கள் முதல் நூல் பற்றியும் அதை எழுதத் தூண்டியது எது என்பது பற்றியும்

 

என்னுடைய முதல் மற்றும் வெளிவந்து இருக்கின்ற ஒரே புத்தகம் 40 + மாற்றம் என்பது. என் வாழ்வில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை 40 வயதில்திரும்பிப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட புரிதல்கள் எனக்கு ஒரு சிலிர்ப்பையும்நன்றி உணர்ச்சியையும் ஏற்படுத்தின. எனவேஎன்னுடைய அனுபவங்களையும்புரிதல்களையும் புத்தகமாக எழுதினால்அது மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. அதன் வெளிப்பாடுதான் "40 + மாற்றம்" வெளியீடு.

 

8. இந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் நூல்களுக்கான வரவேற்பு எப்படி


குழந்தைகள் இப்போது விளையாடுவது குறைந்து அதிகமான நேரத்தை தொலைக்காட்சி பெட்டியிலும்அலைபேசியிலும் செலவிடுவதால் அவர்களின் கவனத்தை திருப்ப வேண்டியுள்ளது. இன்றைய பெற்றோர்கள் இதை நன்கு உணர்ந்து விட்டனர். எனவேகுழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பதற்காக தாங்களும் புத்தகங்களை வாங்கி வாசிக்கின்றனர். குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இது அடுத்த தலைமுறைக்கான ஒரு நல்ல அறிகுறி. வருங்காலத்தில் குழந்தைகள் நூல்களுக்கான வரவேற்பு மட்டுமல்லாதுஅனைத்து புத்தகங்களுக்கான வரவேற்பும் அதிகரிக்கவே செய்யும்.

 

 

9. பதிப்புத்துறையில் இன்னும் என்னென்ன சாதிக்கலாமென்று திட்டமிட்டுள்ளீர்கள்.


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயிற்சி புத்தகங்கள்இலக்கண புத்தகங்கள்குழந்தை வளர்க்கும்போது கொடுக்க வேண்டிய உணவுகள்வீட்டு வைத்தியங்கள் போன்ற புத்தகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்துமே நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி எழுத வைத்து இருக்கிறேன். மேலும்குடும்பத்தில் அனைவரும் படிப்பதற்கு ஏற்ற விஷயங்களைக் கொண்டு ஒரு மாத இதழ் வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறோம். இவற்றுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

 

 

10. இந்தியச் சந்தையில் அச்சு புத்தகங்களுக்கான எதிர்காலம் என்ன

 

நான் ஏற்கனவே சொன்னபடிமீண்டும் அனைவரும் அச்சுப் புத்தகங்களுக்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். சமூக வலைத்தளங்கள் மற்றும் அலைபேசி போன்ற பிற சாதனங்களின் ஆதிக்கத்திலிருந்து நாமும்நம் அடுத்த தலைமுறையினரும் சற்று விடுபட புத்தங்களே உதவும். எனவேஇனி வரும் காலங்களில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகும் என்று நம்புகிறேன்.

 

 

11. பதிப்புத் துறைக்குப் புதிதாய் வர விரும்புபவர்களுக்கு உங்கள் அட்வைஸ்.

 

அறிவுரை சொல்லும் அளவுக்கு இந்தத் துறையில் அனுபவம் அடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால்நல்ல நோக்கத்துடனும்ஆழ்ந்த விருப்பத்துடனும்உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடனும்ஒருவர் எந்தத் துறையில் நுழைந்தாலும் சாதிக்க முடியும். எனவேபுதியதாக இந்தத் துறைக்கு வருபவர்களை பூங்கொத்துடன் வரவேற்கிறேன். வாருங்கள்இணைந்து பணியாற்றலாம்வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்கலாம் என்று இருகரம் நீட்டிபுன்னகையுடன் அழைக்கிறேன்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...