திருமிகு. வள்ளியம்மை அருணாச்சலம் பதிப்பக உலகின் புதிய விடிவெள்ளி. அவர் அடிப்படையில் மென்பொறியியல் துறையில் டீம் லீடராகப் பணிபுரிகிறார். வாசிப்பினால் ஈர்க்கப்பட்ட அவர் 40 ப்ளஸ் என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். இந்த வருடப் புத்தகத் திருவிழாவில் சில்வர்ஃபிஷ் என்றொரு ஸ்டாலை அமைத்து அதில் புத்தக விற்பனையிலும் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார். சில்வர் ஃபிஷ் பதிப்பகத்தின் மூலம் மாதாந்திரியும் இன்னும் பல நூல்களை பதிப்பித்தும் வெளியிட உள்ள அவரிடம் திரு. சேதுராமன் சாத்தப்பன், திரு.ஹுமாயூன் ஆகியோர் நடத்திவரும் ஸ்டார்ட் அப் & பிஸினஸ் நியூஸ் என்னும் மின்னிதழுக்காகப் பேட்டி ஒன்று எடுத்தேன். அதை இங்கே தருகிறேன்.
///1.உங்கள் சுயவிபரம், குடும்பம் பற்றிக் கூறுங்கள்
2. கிண்டில் அமேஸான் ஆகிய ஆன்லைன் வாசிப்புத் தளங்கள் பெருகிவிட்டபோது அச்சுப் புத்தகங்களுக்கான தளம் இருக்கிறதா.
3. உங்களை வாசிப்பிற்கும் எழுத்துக்கும் பதிப்புத் தொழிலுக்கும் கொண்டு வந்தது எது
4. சில்வர் ஃபிஷ் என்று உங்கள் புக் ஸ்டாலுக்குப் பெயரிட்டுள்ளீர்கள். அது பற்றி
5. மென்பொறியியல் துறையிலிருந்து கொண்டே புக்ஃபேரில் புத்தக விற்பனை செய்த அனுபவம் எப்படி இருந்தது.
6. என்னன்ன நூல்கள் அதிகம் விற்பனை ஆயின
7. உங்கள் முதல் நூல் பற்றியும் அதை எழுதத் தூண்டியது எது என்பது பற்றியும்
8. இந்தியச் சந்தையில் அச்சு புத்தகங்களுக்கான எதிர்காலம் என்ன
9. இந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் நூல்களுக்கான வரவேற்பு எப்படி
10. பதிப்புத்துறையில் இன்னும் என்னென்ன சாதிக்கலாமென்று திட்டமிட்டுள்ளீர்கள்.
11. பதிப்புத் துறைக்குப் புதிதாய் வர விரும்புபவர்களுக்கு உங்கள் அட்வைஸ்.
இது போக நீங்கள் சொல்ல நினைப்பனவற்றையும் எழுதி அனுப்புங்கள்.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்///
1.உங்கள் சுயவிபரம், குடும்ப பற்றிக் கூறுங்கள்
எனது பெயர் வள்ளியம்மை அருணாச்சலம். மென்பொறியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என் கணவர் திரு. நாராயணன் அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் பெண் கல்லூரியில் இரண்டாமாண்டும், இரண்டாவது பெண் எட்டாம் வகுப்பிலும் படிக்கிறார்கள்.
2. கிண்டில் அமேஸான் ஆகிய ஆன்லைன் வாசிப்புத் தளங்கள் பெருகிவிட்டபோது அச்சுப் புத்தகங்களுக்கான தளம் இருக்கிறதா.
இளைய தலைமுறையினரின் வாசிக்கும் தளம் மாறி இருக்கிறது என்பது உண்மைதான். எளிதாக ஒரு சில விஷயங்கள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்வது என்பது வரவேற்கத்தக்க விஷயம்தானே? இதனால் வாசிக்கும் மக்கள் அதிகமாகி இருக்கின்றனர். அச்சுப் புத்தகங்களை வாசிக்கும் வாசகர்களும் கணிசமான அளவில் இருக்கவே செய்கிறார்கள். ஆன்லைன் புத்தகங்களை ஆரம்பத்தில் வாசித்துப் பழகினாலும், பின்னர் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வீட்டில் வைத்துக் கொள்வது, தேவையானபோது குறிப்பெடுத்துக் கொள்வது, புத்தகங்களை பரிசளிப்பது இது போன்ற தேவைகளுக்காக புத்தகங்களை வாங்குகிறார்கள். எனவே, அச்சுப் புத்தகங்களுக்கான தளம் என்பது இருக்கவே செய்கிறது.