எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 நவம்பர், 2020

சென்னை சங்கமம் சில நினைவுகள்.

 சென்னை சங்கமம் சில நினைவுகள். 

ஆதி மூர்க்கம் 
விலா கொய்து செய்த 
பாதி மூர்க்கம் நான்.

என்றும் இருக்கும்
சாதிச் சண்டையில் 
சமரசப் பெண்சாதி நான். 

என்று ஆரம்பித்துக் கவிதை வாசித்தேன். 
இது நிகழ்ந்த இடம் தேவநேயப் பாவாணர் அரங்கு. 


கலாப்ரியா , சக்தி ஜோதி, ஈரோடு தமிழன்பன் ஆகியோர் தலைமையில் ஒரு நூறுகவிஞர்கள் கவிதை வாசித்தோம். 




நிகழ்வு முடிந்ததும் கலைஞர் தொலைக்காட்சியில் சங்கமம் பற்றிக் கருத்துக் கேட்டார்கள். அப்போது அது பற்றிக் கூறியது யூ ட்யூபிலும் பதிவாகி உள்ளது. 

உடன் தோழிகள் (எங்கள் பெயர்களை சங்கமத்துக்கு முன்மொழிந்த ) பத்மா, தமிழரசி, சக்திசெல்வி, கார்த்திகா வாசுதேவன். 


இன்னும் இரு ஆண்பதிவர்கள் அகநாழிகை வாசுதேவன் & தண்டோரா மணிஜி. 




மதியம் சைவம் அசைவம் என்று பிரியாணி வகைகள். உண்டுமுடித்தும் கலந்து கொண்டோம். மாலையில் பொன்முடிப்பும் கொடுத்தார்கள். 

ஜிகுபுகு ஜிகுபுகு ரயிலே.. :)

மதியம் கனிமொழி அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார். மிக அருமையான பொழுதாக அமைந்தது. நன்றி பத்மா, கலைஞர் டிவி, தோழர் கனிமொழி & சக வலைப்பதிவர்கள் . :) 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...