எனது பதிமூன்று நூல்கள்

வியாழன், 5 நவம்பர், 2020

யுத்தம் செய் - சில நினைவுகள்.

 யுத்தம் செய் படத்தின் ப்ரிவ்யூ ஷோவை எங்களுக்குத் தனியாக ( முகநூல் நண்பர்கள் ) போட்டுக்காட்டினார்கள் நண்பர் சேரனும் இயக்குநர் மிஷ்கினும். 

தன் மகளுக்குத் தீங்கு நேரும்போது மத்யதர வகுப்பைச் சேர்ந்த ஒரு சாத்வீகத் தாய் சீறியெழுந்து நியாயம் கேட்பதுதான் கதை. இதற்கு என ஒரு கலந்துரையாடலும் கலைஞர் டிவியில் நடைபெற்றது. அதிலும் பங்கேற்க அழைப்பு வந்தது. 

இயக்குநர் மிஷ்கினிடம் கறுப்பு உடை பற்றியும்,  மஞ்சள் உடைப் பெண்களின் நடனம் பற்றியும் கேட்டோம். அது பற்றி எல்லாம் முன்பே எழுதி இருக்கிறேன். 

டாக்டர் ஷர்மிளா, கயல், இயக்குநர் நந்தினி, ஐஸ்வர்யா ராகவ் ஆகியோர் பங்கு பெற்றோம். இந்த நிகழ்வு சத்யம் தியேட்டர் மாடியில் நடைபெற்றது. 
இந்தப்புகைப்படங்களை எனக்காக எடுத்து அனுப்பியவர் அன்புத் தோழி ராமலெக்ஷ்மி அவர்கள். அவங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 


சென்னை சிட்டி செண்டரில் ஐநாக்ஸ் தியேட்டரில் நாங்கள் இப்படத்தைப் பார்த்தோம். தமிழ், மது , கயலுடன். 
வசு, மதுமிதா, ஷீலா ஹெப்சிபாவுடன். 

காவேரி கணேஷ், நிக்கோலஸ், பிரின்ஸ், அன்பு, மில்லர், செல்வா, கிஷோர் இன்னு பலருடனும். 


இப்படத்திற்கு வசூலான நிதியை ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்கு அப்படியே வழங்கினார் சேரன். நல்ல மனம் வாழ்க.

இது ஐநாக்ஸில் கலைஞர் தொலைக்காட்சிக்காக கலந்துரையாடல் செய்தபோது எடுத்தது.இரண்டு இயக்குநர்களுடன் எடுத்த இந்தப் படம் எனக்கே ஆச்சர்யமளிக்கும் விதத்தில் நன்றாக அமைந்தது. ( எல்லா ஃபோட்டோவிலும் நாம் நன்றாக இல்லையோ என்ற கவலை எனக்கு இருக்கும். :) 
மிக அருமையான படத்தைக் கொடுத்த இயக்குநர், நண்பர் மிஷ்கினுக்கும் , நடிகர், இயக்குநர், நண்பர் சேரனுக்கும்  மனமார்ந்த வாழ்த்துகள். :) 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...