ஒருவர் நமக்கு ஒரு உதவி செய்கிறார். நாம் அதை மூன்று பேருக்குத் திரும்பிச் செய்வோம். இதுதான் கான்செப்ட். அந்த உதவி பெருகிப்பல்கி பலருக்கும் நன்மை அளிக்கும். இதை வைத்து எம் எல் எம் , பொருள் விக்கிறதுன்னு ( பலரை ஏமாத்துறதுல்ல) மேலும் பலர் இதில் இறங்கி நஷ்டமடைஞ்சிருக்காங்க. இது அதுவல்ல. ரியல் உதவி. உடம்பாலோ மனதாலோ தேவை ஏற்படின் பொருளாலோ உதவுதல்.இதை 2000 இல் வெளிவந்த இந்தப் படம் எப்பிடி அழகா சித்தரிக்குதுன்னு பார்ப்போம். ஆனா முடிவுதான் கொஞ்சம் இல்ல ரொம்பவே அழ வைச்சிடுச்சு.
ஆக்சுவலா பே இட் ஃபார்வேர்டுன்னு இதே பெயரில் 1999 இல் வெளிவந்த ஒரு நாவல்தான் (கேதரின் ரையன் ஹைட் ) சினிமாவா எடுக்கப்பட்டிருக்கு. இந்தப் படத்தைப் பார்த்ததும் நமக்கே இன்னும் பலருக்கு ஹெல்ப் செய்யணும். ஏதோ ஒரு வகையில் உதவி செஞ்சே ஆகணும்கிற தூண்டுதலை ஏற்படுத்துச்சு.
லாஸ்வேகாஸின் நெவேடாவில் ஏழாவது க்ரேட் படிக்கும் சிறுவன் ட்ரெவர். அவனோட சமூக அறிவியல் பாட ஆசிரியர் யூஜீன் சைமோன் ஒரு அசைன்மெண்ட் கொடுக்கிறார். அது தன்னோட தொடர் சங்கிலியால இந்த உலகத்தையே புரட்டிப் போடுது. இந்த உலகத்துக்கு ஏதாவது வகையில் நல்லது செய்யணும் அதுக்கான திட்டத்தை வடிவமைங்கன்னு சொல்றாரு.
அப்போ ட்ரெவர் ஒரு திட்டத்தை வடிவமைக்கிறான். அது நம் உடம்பாலோ பொருளாலோ இல்ல சொற்களாலோ மூன்று பேருக்கு உதவணும். உதவி பெற்றவங்க உங்களுக்கு ஏதேனும் நன்றிக்கடனா பொருளைத் திருப்பிக் கொடுக்க வந்தா வேண்டாம்னு சொல்லிட்டு இதே போல உதவி தேவைப்படும் மூன்று பேருக்கு உதவச் சொல்லுங்க என்று வடிவமைக்கிறான். இதுதான் படம் முழுவதும் தொடருது.
இதைச் செயல்படுத்த சில இடங்களில் இடையூறும் ஏற்படுது. வீடு இல்லாத ஜெர்ரிங்கிற மனிதனுக்கு தங்கள் வீட்டு காரேஜில் தங்க ட்ரெவர் அம்மாகிட்டக் கேட்டுப் பர்மிஷன் வாங்கிக் கொடுக்கிறான். அதுக்குப் பிரதிபலனா ஜெர்ரி ட்ரெவரொட அம்மாவின் காரை ரிப்பேர் செய்து தரான். ஆனா ஜெர்ரி திரும்ப ட்ரெக் அடிக்ட் ஆனவுடனே அவன் யாருக்கும் உதவி செய்யல. ஆனா பாலத்துலேருந்து குதிச்சுத் தற்கொலைக்கு முயலும் ஒரு பெண்ணைத் தன் வார்த்தைகளால காப்பாத்தி அதை ஈடு செய்துடுறான்.
இந்தத் திட்டத்தை முன்மொழிந்த தன்னோட ஆசிரியரை வீட்டில் தன் அம்மா அர்லினோடு விருந்து உண்ண அழைக்கிறான் ட்ரெவர். அப்போ தன்னோட முன்னாள் குடிகாரக் கணவரான ரிக்கியப்பத்தி ட்ரெவர் ஏதோ சொல்ல அர்லின் அறைஞ்சிடுறாங்க. வீட்டை விட்டு ஓடிப்போகும் ட்ரெவரைத் தேடவேண்டி அர்லின் யூஜின் உதவியை நாடுறாங்க.
ட்ரெவர் கிடைச்சதும் இருவரும் இணைந்து வாழ அர்லின் விரும்ப யூஜின் பயப்படுவாரு. ஏன்னா அவருடை கழுத்துக்குக் கீழே பூரா தழும்பா காட்சி அளிக்கும். கொஞ்சம் பயமுறுத்தும் அளவு இருக்கும் அந்தத் தழும்புகளைப் பார்த்தும் அர்லின் தான் அவரை நேசிப்பதா சொல்ல இருவரும் இணைவாங்க. கண்ணுல & மனசுல அன்பிருந்தா பார்க்குறது எல்லாம் அழகாத்தெரியும்கிறது உண்மைதான் போல. நெகிழ்வான காட்சி அது.
அதுக்குள்ள இவங்க இணையறது பொறுக்காததுபோல் பழைய குடிகாரக் கணவனான ரிக்கி குடியை விட்டுட்டதா சொல்லி திரும்ப வராரு. அவர் வரவை அர்லின் ஏத்துக்கவும் யூஜின் கோபமாயிடுவாரு. தன் உடம்புல இருக்கும் தழும்பு எல்லாம் தன்னோட குடிகாரத் தகப்பன் தன் மேல் குடி வெறியில் தீயைப் பத்த வைச்சுக் கண்மண் தெரியாம ஏற்படுத்தினதுதான் அதுனால ரிக்கிகிட்ட எச்சரிக்கையா இருக்கணும் இல்லாட்டி ட்ரெவருக்கும் அதே கதிதான் ஏற்படும்னு சொல்லியும் அர்லின் ரிக்கியை சேர்த்துக்குவாங்க. ஆனால் நாளாக நாளாக ரிக்கியின் குடிகார நடத்தையும் செயலும் அதிகமாக அதை உணர்ந்து அவரை வெளியே போக சொல்லிடுவாங்க.
பே இட் ஃபார்வேர்ட் என்னும் திட்டம் மர வடிவில் வரையப்பட்டு அது மூன்று மூன்றா கிளை விட்டிருக்கும் காட்சியும் வெகு அழகா இருக்கும். படம் ஆரம்பிக்கும்போதே லாஸ் ஏஞ்சல்ஸோட ஒரு பத்ரிக்கையாளருக்குக் கார் பரிசா கிடைக்கும். இதோட வேர் என்னன்னு அவர் வியப்போடு செயினைப் பிடிச்சு ஒவ்வொருவராத் தேடி வரும்போது ட்ரெவரின் ஸ்கூல் ப்ராஜெக்ட்தான் மூல காரணம்னு தெரிய வரும்.
இது மட்டுமில்ல ஜெர்ரி உதவினதும் ஆர்லின் தன்னை சரியா வளர்க்கலைன்னு கோவிச்சுக்கிட்டு இருந்த தன்னோட தாயான க்ரேஸை மன்னிச்சிடுவாங்க. வீடு இல்லாத அவங்களை விட்டுக்கு அழைச்சுட்டு வருவாங்க. க்ரேஸ் இதுக்குப் பிரதிபலனா போலீஸ்கிட்டேயிருந்து ஒருத்தரைக் காப்பாத்துவாங்க. அவர் ஹாஸ்பிட்டலில் ஆஸ்த்மாவோடு போராடும் ஒரு பெண்ணைக் காப்பாத்துவாரு. அந்தப் பெண்ணோட தந்தைதான் பத்ரிக்கையாளர் க்றிஸுக்கு இந்தக் காரைப் பரிசளிப்பாரு.
இந்தத் திட்டத்தோட சூத்திரதாரி ட்ரெவர்னு கண்டுபிடிச்சி அவர் பேட்டி எல்லாம் எடுப்பாரு. அப்ப யூஜினும் ஆர்லினும் சேர்ந்து வாழணும்னு ட்ரெவர் ஆசைப்படுறான்னு புரிஞ்சிட்டு அவங்க இணைவாங்க. அதோட படம் முடிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.
ஆனா தன்னோட நண்பன் ஆடமை ஒரு முரட்டு மாணவன் கொடுமைப்படுத்துறதைப் பார்த்து அதைத் தடுக்கப் போவான். வேண்டாம்னு ஆர்லினும் யூஜினும் தடுக்க முன்னாடி அவன் ஓடிப் போய்த் தடுக்க அந்த முரட்டுப் பையன் தன் கையில் ஒரு ஆக்ஸா ப்ளேடு மாதிரி ஒண்ணை எடுத்து ட்ரெவரின் வயித்துல குத்திட்டுப் போயிடுவான். குடல் சரிஞ்சி ரத்தத்தோடு ஆஸ்பத்ரிக்கு எடுத்துட்டுப் போறதுக்குள்ள ட்ரெவர் இறந்துடுவான். ரொம்பக் கண்ணீர் வரவைத்த காட்சி அது. அதன் பின் செய்தி சானல்களில் ட்ரெவரின் பே இட் ஃபார்வேர்ட் திட்டம் பற்றி அறிந்து அனைவரும் அவனுக்கு அஞ்சலி செலுத்துவாங்க அந்த முரட்டுப் பையன்களும் கூட மனம் வருந்தி மாறி வந்து அஞ்சலி செலுத்துறமாதிரி காமிச்சிருப்பாங்க.
இதனாலே இத்திட்டம் உலகம் பூராவும் பரவிடும். ஆனா ட்ரெவர் இறந்தது என்பது நம்ப முடியாத அதிர்ச்சியாகவே இருக்கும்.அவ்ளோ குட்டியான க்யூட்டான நல்ல எண்ணங்கள் கொண்ட பையன் அவன். அவன் புன்னகையே கோடி பெறும். கெவின் ஸ்பேஸி ஆசிரியராவும், ஹெலன் ஹண்ட் அம்மாவாகவும், ஹெலே ஜோயல் ஆஸ்மெண்ட் ட்ரெவராவும் நடிச்சு மனசைக் கொள்ளை கொண்டிருப்பாங்க.
பாட்டி தனிச்சு ரோட்டில் வாழ்வது, பையனே அம்மாவுக்கு ஒரு துணையைத் தேடிக் கொடுப்பது என்பதெல்லாம் அப்ப ரொம்ப வித்யாசமான விஷயங்கள் எனக்கு. நாற்பது மில்லியன் முதல் போட்டு எடுத்த இந்தப் படத்துக்கு ஐம்பத்தி ஐந்தரை மில்லியன் கிடைச்சிருக்கு. இந்தப் படத்துக்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங் கொடுக்குறேன்.
என்னோட ரேட்டிங்
*****
இதோட 'தீமை' அப்புறம் பல வாட்ஸாப் பார்வேர்ட் கதைகளில் தானே எழுதியது போல வந்து பார்த்திருக்கிறேன்! நல்ல தீம். கதையை இங்கே படிச்சுட்டேனா, படம் பார்க்கவில்லை. ஓகேயா?!!
பதிலளிநீக்குநல்ல கருத்துள்ள படம். கதையை முழுவதும் இங்கு கொடுத்துட்டீங்களே!!! படம் புரிந்துவிட்டது!
பதிலளிநீக்குகீதா
ஓகே ஸ்ரீராம் :)
பதிலளிநீக்குஆமாம் கீத்ஸ் பழைய படம்தானே அதான் கொடுத்துட்டேன் முடிவை இங்கேயே. :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!