எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 23 நவம்பர், 2020

எண்ட்லெஸ் லவ் - சினிமா ஒரு பார்வை.

எண்ட்லஸ் லவ்


1981 இல் வெளிவந்த இந்த சினிமாவை நாங்கள் 1986 இல் கோவையில் பார்த்தோம். ஃப்ரான்கோ ஸெஃப்ரெலி இயக்கிய படம். 1979 இல் ஸ்காட் ஸ்பென்ஸர் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையா வைச்சு எடுக்கப்பட்ட படம். 

கதையை சும்மா ரெண்டு வரில எழுதிடலாம். ப்ரூக் ஷீல்ட்ஸ், மார்டின் ஹெவிட் நடித்த ரொமான்ஸ் படம். காதல்னா சாதாரணக் காதல் இல்ல. பயங்கர லவ். அவ்ளோதான். அதையே ரெண்டுமணி நேரப் படமா சுவாரசியமா கொடுத்திருக்காங்க.

இதுல எனக்குப் பிடிச்சது எண்ட்லஸ் லவ் என்ற தீம் சாங். டயானா ராஸ் & லியோனல் ரிச்சி பாடியது. பில்போர்ட் ஹார்ட் 10 இல் நம்பர் ஒன்னாகவும், அகாடமி அவார்ட், கோல்டன் க்ளோப் அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கு. 

https://www.youtube.com/watch?v=JM_R1R28kLM

நிறைய நல்ல அவார்டுக்கு மட்டுமில்ல வொர்ஸ்ட் அவார்டுக்கும் ஃப்ரான்கோ செஃப்ரெலி, ப்ரூக் ஷீல்ட்ஸ், மார்டின் ஹெவிட் ஆகியோரைப் பரிந்துரைச்சுருக்காங்க பொதுஜனம் !

சிகாகோவில் வசிக்கும் ஜேட் பட்டர்ஃபீல்டும் (ப்ரூக் ஷீல்ட்ஸ்), டேவிட் ஆக்ஸல்ராடும் ( மார்டின் ஹெவிட்)  ஜேடின் சகோதரன் கெய்த் மூலமா அறிமுகமாறாங்க. அதன்பின் காதல் காதல் காதல்தான் எண்ட்லெஸ் லவ். 

இந்தக் காதலுக்கு நடுவுல நிறையப் ப்ரச்சனைகள் வருது. டீனேஜ் காதல் , பையனுக்குப் பதினேழு வயசு, பொண்ணுக்குப் பதினைந்து வயசு. அதுனால அவள் படிப்புப் பாதிக்கப்படுதுன்னு ஜேடோட அப்பா ஹக் தடுக்குறார். இதுனால அவள் மன வருத்தப்பட்டு அப்பாவோட தூக்கமாத்திரைக்கான ப்ரிஸ்க்ரிப்ஷனைத் திருடப் பார்ப்பா. 

இதுக்கு நடுவுல டேவிடோட ஸ்கூல் ஃப்ரெண்ட் பில்லி தன் சின்ன வயசுல ந்யூஸ்பேப்பரை தீயில போடுறான். அது பெரிசா எரிய ஆரம்பிச்சோடவுடனே பயந்து தீயை அணைக்கிறான். அவன் வீட்டுல பத்த இருந்த தீயை அணைச்சதாக் கருதும் அவன் பெற்றோர் அவனைப் பாராட்டுறாங்க. இதை அவன் டேவிட் கிட்ட சொல்றான்.

டேவிட் இதக் கேட்டுத் தன் காதலி ஜேடோட வீட்டுல தீயைப் பத்த வைச்சிட்டுப் போறான். அது லேசா வந்தவுடனே அணைச்சிட்டு தான் தான் அவங்க வீட்டைக் காப்பாத்தினமாதிரி காட்ட நினைக்கிறான். ஆனால் அது பெரிசாகி மொத்த வீடும் தீயில் அழிஞ்சிடுது.

டேவிட்தான் வீட்டைப் பத்தவச்சான்னு தெரிஞ்சதும் அவனை 5 வருடம் மெண்டல் ஹாஸ்பிட்டல்ல கைதியா அடைச்சு வைக்கிறாங்க. அந்த ஐந்து வருடமும் அவன் ஜேடுக்கு லெட்டர் எழுதி அனுப்பிக்கிட்டே இருக்கான். ஆனா அவகிட்டேயிருந்து பதிலே வரல. 

அவனோட அப்பா அம்மா தங்களோட அரசியல் தொடர்பினால அவனை வெளியே கொண்டு வர்றாங்க. அப்பத்தான் தெரியுது அவன் போட்ட லெட்டர் எதுவுமே அவளுக்குப் போகாம அவனுக்கே திரும்பி வந்திருக்குன்னு. 

ஜேடோட குடும்பம் மன்ஹாட்டனுக்குப் போயிட்டாங்கங்கிற விவரம் கிடைக்குது. அவனால ஜேடைப் பார்க்காம இருக்க முடியல. அதுனால அவன் அவ பர்லிங்டன்ல இருக்கான்னு தெரிஞ்சு அங்கே போறான். (அதுக்குள்ள அவங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் விவாகரத்து வாங்கிப் பிரிஞ்சிட்டு அவளோட அப்பா இரண்டாம் திருமணம் செய்துக்குறாரு.)அவளோட அப்பா ஹக்கை ரோட்டில் பார்க்கிறான். அவர் அவனைத் துரத்தும் போது கார் மோதி இறந்துடுறாரு. இதுவும் டேவிட் மேலே பழியா சுமத்தப்படுது.

கடைசியா அவன் ஜேடை சந்திக்கிறான். அவளைக் கட்டாயப்படுத்திக் கேக்கும்போது தான் அவனைத்தான் நேசிக்கிறதா சொல்றா. அப்போ அவளோட சகோதரன் கெய்த் வந்து தங்களோட தந்தையின் சாவுக்கு அவந்தான் காரணம்னு சொல்றான். டேவிட் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் கெய்த் பயங்கரமா சண்டைபோடும்போது போலீஸ் வந்து திரும்ப டேவிட்டைக் கைது செய்து ஜெயில்ல அடைச்சிடுது.

தன்னோட அப்பாவின் தகனத்தின் போது அம்மா ஆனிடம் தன்னை டேவிட்டைப் போல மனமார நேசிப்பவர் யாருமே இந்த உலகத்துல இல்லைன்னு சொல்றா. தானும் அவனை அதேபோல் நேசிக்கிறதா சொல்லி ஜெயிலுக்கு அவனைப் பார்க்கப் போறா. அதோட படம் முடிஞ்சிடும்.

தமிழ்ப் படம் மாதிரி அதுக்குப் பின்னாடியும் ரெண்டு பேரும் கூடிக் குலவி பாரா பாராவா வசனம் பேசி கல்யாண மோதிரம் எல்லாம் மாத்திப்பாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஹாஹா. 

எதுக்கு எண்ட்லெஸ் லவ்னா, தன்னோட காதலன் மேலே எவ்ளோதான் பழி பாவம் வந்தாலும் அவன் உண்மையான அன்பைப் புரிஞ்சிக்கிட்டதால காதலி திரும்பப் போய் அவனை உண்மையாக் காதலிக்கிறா. ரெண்டுபேரும் திரும்ப இணையுறாங்க. அதான்பா எண்ட்லெஸ் லவ். நம்ம தமிழ்ப்படம் ஜாடைல இருக்குல்ல. :) அதுவும் தென்றலே என்னைத் தொடு ஸ்ரீதர் பாணில. ;)

இந்தப் படத்துக்கு என்னோட ரேட்டிங் மூணு ஸ்டார்.

***

3 கருத்துகள்:

 1. திரைப்படத்தின் தலைப்பு வித்தியாசமாக உள்ளது. மதிப்புரை சிறப்பு.

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஜம்பு சார்

  நன்றி ஸ்ரீராம். !!!

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...