எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 நவம்பர், 2020

பணிவிலும் கனிவிலும் உயர்ந்த கௌதமி வேம்புநாதன்.

 ராஜிக்கா சென்னை வந்தபோது அவங்களைப் பார்க்க எங்க வீட்டுக்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட் கௌதமி வேம்புநாதன். தொலைக்காட்சித் தொடர்களில் சூப்பர் வில்லியாகக் காட்சிதரும் இவர் நேரில் வெகு கனிவு, பாந்தம்.

எல்லாரும் கெஸ்டுக்கு ஐஸ்க்ரீம் கொடுப்பாங்க. எங்களுக்கு க்ரீமி இன்னின் ப்ளாக் கரண்ட் ஐஸ்க்ரீம் மெகா சைஸ் கப்போட வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் இவர். இது பற்றி முன்னேயே எழுதி இருக்கேன்.  





அன்றைக்கும் தான் ஒரு செலிபிரிட்டி என்ற எந்த பந்தாவுமில்லாமல் மிக எளிமையாகத் தரையில் எங்கள் இருவருடனும் அமர்ந்து உரையாடினார்.


அவர் கணவர் வாங்கி வந்த ஐஸ்க்ரீம்தான் இது.குளிர்ப் புன்னகைகள்.

எந்த சமயம் உரையாடினாலும் மிகத் தன்மையாக உரையாடுவார்.

யார் பற்றியும் எதுபற்றியும் கமெண்ட் அடிக்கவும் மாட்டார். எந்த கம்ளெயிண்டும் கிடையாது. 
தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை ( வில்லி ரோலானாலும் )சிறப்பாக செய்து முடிப்பார்.

ஒரு நாடகத்தில் நடித்தமைக்காக பெஸ்ட் ஃபீமேல் ஆர்டிஸ்ட் அவார்டு வாங்கிய இவர் அவார்டை வாங்கியதும் ஸ்டேஜிலிருந்து ரசிகமகா ஜனங்களைப் பார்த்துத்தன் உடலைப் பாதியாக வளைத்து ஒரு வணக்கம் கொடுத்திருந்தார். அந்தப் புகைப்படத்தைப்பார்த்ததும் அசந்து போனேன். 


அந்தப் பணிவுதான் இவரின் உயர்வுக்குக் காரணம். அதுமட்டுமல்ல கனிவும் கூட. 

ஏனேனில் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ராஜிக்காவிடம் அவர் திரும்பிப் போகும்போது தன் நாடகத்தின் ரசிகரும் , நண்பருமான சிங்கப்பூரைச் சேர்ந்த திரு ஸ்ரீகாந்த் என்பவருக்கு ஒரு பை நிறைய இங்கேயிருந்து உணவுப் பொருட்களையும் இன்னபிற பொருட்களையும் கொடுத்து அனுப்பினார்.

எல்லாருக்கும் ரசிகர்கள் பொருட்களைக் கொடுப்பார்கள். ஆனால் இவரோ தன் ரசிகருக்குப் பொருட்களை அனுப்புகிறார். அதன் பின்னும் இவரோடு உரையாடி இருக்கிறேன். தன் நேரத்தை ஒதுக்கி என்னுடன் எப்போதுமே கனிவோடு உரையாடி இருக்கிறார். இவர் மட்டுமல்ல இவரது கணவரும் தன்மையான மனிதர். மனைவியின் கண் பார்வையிலேயே அனைத்தையும் படித்து விடுகிறார், செயலாற்றுகிறார், இருவரும் காதலொருமித்த, கருத்தொருமித்த தம்பதிகள். வாழ்க வளமுடன் கௌதமி வேம்புநாதன். 

இவரைச் சந்தித்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் இப்போது பார்த்தது போலவே தன் பணிவிலும் கனிவிலும் என்னை இனிப்பாக உணரவைத்துக் கொண்டிருக்கிறார். நன்றி ராஜிக்கா இப்படி ஒரு மனுஷியை அறிமுகம் செய்ததுக்கு. நன்றி கௌதமி வேம்புநாதன். 

6 கருத்துகள்:


  1. மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அன்பின் இனிய
    தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி மனோ மேம்.உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    நன்றி டிடி சகோ.

    நன்றி துரை செல்வராஜு சார். உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    நன்றி முகம்மது நிஜாமுத்தீன் சார். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    நன்றி ஜம்பு சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...