எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2020

வூபர்டால் வோஹ்விங்கல் சஸ்பென்ஷன் மோனோரயில்

 தொங்கு தோட்டம் கேள்விப்பட்டிருப்பீங்க. தொங்கும் ரயில் கேள்விப்பட்டிருக்கீங்களா. வாங்க பார்ப்போம். ஜெர்மனியின் வூபர்டால் வோஹ்விங்கல் சஸ்பென்ஷன் மோனோ ரயில்தான் அது. 

இரும்பு விளைச்சல் அதிகம் (!) என்பதால் ஜெர்மனியில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே மாங்ஸ்டன் ரயில்வே பாலம், வூபர்டால் சஸ்பென்ஷன் ரயில் என இரும்பைக் கொட்டி இருப்புப் பாதையை மேலே கீழேன்னு கட்டி ரயில் ஓட்டி இருக்காங்க.

பதினெட்டாம் நூற்றாண்டில் அவங்க தொங்கு ரயில் என்னும் புதிய முயற்சியில் இருந்தபோது இங்கே நாம் அப்போதான் போர்பந்தரில் இருந்து தானே வரை இருப்புப்பாதை அமைச்சு முதன் முதலா ரயில் ஓட்டி இருக்கோம். 



கௌசியும் அவர் கணவரும் அவர்கள் வீட்டில் விருந்தளித்தபின் மாங்க்ஸ்டன் ரயில்வே பாலம், ஷோலாஸ் கேஸில் எல்லாம் காண்பிச்ச பின்னாடி இங்கே கொண்டு வந்து இறக்கி விட்டாங்க. 



பறக்கும் ரயிலின் பக்கவாட்டுத் தோற்றம். 


என்ன வேகமா ஓடுது.. 

இதுதான் ஸ்டேஷன். 

20 படிகளுக்கு மேலே இருக்கு ஸ்டேஷன். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் லிஃப்ட் இருக்கு. சில ஸ்டேஷன்களில் எக்ஸலேட்டரும் இருக்கு படிகள் இருந்தாலும். அதுவே வேகமாப் போகுது. அதுலயும் சிலர் வேகமா ஏறிப் போறாங்க ! 

வோஹ்விங்கல் ஸ்டேஷனில் வந்து திரும்பும் மோனோ ரயில். வூபர்டால் வோஹ்விங்கல் ரயில்வேஸ்டேஷன். ட்ரெயின் இப்படி வளைந்து திரும்புவதற்கு  லூப் என்று பெயர். 

ஒவ்வொரு லூப் முடியும்போதும் அங்கே சர்வீஸ் டிபார்ட்மெண்ட் , வளைந்து திரும்ப லூப் பாதை இருக்கும். 


எடுத்தவுடனே வேகம் வேகம்தான். கீழே நகரமும் சாலையும். 





சாலையின் மேல், நதியின்மேல் மற்றும் இன்னொரு ரயில் ட்ராக்கின்மேல் என நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மானியர்கள் இந்தத் தொங்கு ரயில் பாலத்தை அமைத்திருக்கிறார்கள்


வூபர்டால் வோஹ்விங்கலில் இருந்து வெர்தர் ப்ரூக் ஸ்டேஷன், ஸூ/ஸ்டேடியன் ஸ்டேஷன், ஸோன்பார்னர் ஸ்ட்ராஸே ஸ்டேஷன் ஆகிய ஸ்டேஷன்களை இது கடந்து செல்லுது. டுசில்டார்ஃபும் இதுல பத்தாவது ஸ்டேஷன். கடைசி ஸ்டேஷன் பேரு ஓபர்பார்மன்.



கார்ல் யூஜின் லாங்கன் என்ற பொறியாளர் 1897இல் வடிவமைத்தது இந்தத் தொங்கும் ரயில். கிட்டத்தட்டப் பதிமூன்று கிலோமீட்டர்கள் தூரத்துக்கு இந்தத் தொங்கும் ரயில்பாதை அமைக்கப்பட்டிருக்கு. 

பத்து நிமிஷத்துல பயணம் செய்து இறங்கியாச்சு. அவ்ளோ ஃபாஸ்ட். இதுபத்தி இன்னும் நிறைய விபரங்கள் சொல்லவேண்டி இருக்கு, இதன் கன்ஸ்ட்ரக்‌ஷன், தடைகள், பயன்பாடு, வித்யாசத் தகவல்கள்னு. 

நாம பயணம் செய்து இறங்கினபின்னாடிதான் இதுல நடந்த விபத்துப் பத்தி எல்லாம் படிச்சேன். அது போக வூபர் நதியின் மேல செய்த அட்வென்ஸரஸ் & த்ரில்லிங் சவாரி பத்தியெல்லாம் இன்னும் இரு இடுகைகளில் சொல்வேன் :) 

4 கருத்துகள்:

  1. அருமையான பயணம். தொடர்ந்து, த்ரில்லிங் உள்ளிட்ட சவாரிக்காக காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. தகவல்கள் வியக்க வைக்கிறது. இங்கேயும் மோனோ ரயில் திட்டங்கள் இருக்கின்றன. எப்போது வருமென்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    பதிலளிநீக்கு
  3. இப்படி இருந்தும் விபத்து நடக்கிறது...(!)

    பதிலளிநீக்கு
  4. அடுத்தவாரம் வரும் ஜம்பு சார்

    ஆமாம் வெங்கட் சகோ, வழிமொழிகிறேன்

    ஆம் டிடி சகோ வருந்தத்தக்க செய்தி. :(

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...