எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 பிப்ரவரி, 2018

காரைக்குடி மரப்பாச்சியில் எனது நூல்கள்.

காரைக்குடி புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அய்க்கண், லயன் வெங்கடாசலம் ஆகியோரின் முன்னெடுப்பில் வருடாவருடம் இத்திருவிழா களைகட்டிவிடுகிறது. இன்னும் சில இலக்கிய ஆர்வலர்களின் பங்களிப்பும் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதோடு புத்தகம் வெளியிட கிரியா ஊக்கியாகவும் அமைகிறது.

அரிமழம் வைத்திய சாலையின் ஆயுர்வேத டாக்டர் சுனில் கிருஷ்ணன் காந்திய காலத்துக்கொரு பாலம் என்ற நூலில் ஆசிரியர். அவர் காரைக்குடி புத்தகத் திருவிழாக்களின் போது தன்னார்வலராக புத்தக ஸ்டால்களை நிறுவி இலக்கிய புத்தகங்களை வெகுஜன வாசிப்புக்குக் கொண்டு செல்வது வருடா வருடம் காணும் காட்சி. இந்த வருடம் மரப்பாச்சி என்ற அவருடைய ஸ்டாலுக்குச் சென்றிருந்தேன்.

காந்திய நூல்கள் அதிகம்,நவீன இலக்கிய நூல்களின் புது வெளியீடுகளும் அதிகம் உள்ளன. இன்பாவின் வையாசி படித்தீர்களா எனக் கேட்டார். ( பாதி படித்திருக்கிறேன். மீதி படிக்கவேண்டும் என்றேன் . :)

பல்லாண்டுகளுக்கு முன்பே வலைப்பதிவு மூலம் அவர் அறிமுகமாகி இருந்தாலும் ( 2009 ) இன்றுதான் நேரில் சந்தித்தேன். அவரது ஸ்டாலில் எனது புத்தகங்களைக் கொடுத்து விட்டு எனது வாசிப்புக்காக ஹாருகி முரகாமியின் கினோ, மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாள், மிரோஸ்லாவ் ஹோலுபின் கவிதைகள், காஃப்காவின் உருமாற்றம், தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் ஆகியன வாங்கி வந்தேன். 
எனது அன்னபட்சியை அங்கே வந்தவுடன் எடுத்து உடனே வாசிக்கத் தொடங்கிய ஒரு புத்தகப் பிரியையை அவர் அனுமதியோடு படம் எடுத்தேன் :)

பல்லாண்டுகள் தெரிந்திருந்தும் ஒரே ஊரில் இருந்தும் இன்றுதான் காணும் சந்தர்ப்பம் நேரிட்டதை இருவருமே கூறி வியப்படைந்தோம். அடுத்து என்ன புத்தகம் வருகிறது என விசாரித்தார் டாக்டர். இன்னும் சில வரப்போகின்றன. ஒரு கட்டுரைத் தொகுப்பும் , ஒரு சிறுகதைத் தொகுப்பும், சில கவிதைத் தொகுதிகளும் கைவசம் அச்சுக்குத் தயாராக இருப்பதைச் சொன்னேன்.

மரப்பாச்சி என்ற பெயர் ஏனோ எனக்கு உமா மகேஸ்வரியின் ஒரு கதையை ஞாபகப்படுத்தியது.
காரைக்குடியில் புத்தக வெளியீடு யாரும் செய்வதில்லை. அடுத்த ஆண்டு நான் வெளியிடலாமா என்ற எண்ணத்தில் வெளிவந்தேன். அங்கங்கே சில புத்தக ஆர்வலர்கள் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். ஆழ்ந்த வாசிப்பு உடையவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

காரைக்குடி புத்தகத் திருவிழா இன்றும் நாளையும் இன்னும் பல கலை நிகழ்ச்சிகளோடு களை கட்டிக் கொண்டிருக்கிறது. எனது நூல்களையும் மரப்பாச்சியில் வாங்கி வாசிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். :) 

6 கருத்துகள்:

  1. வாழ்த்துகள். மேலும் புதிய புத்தகங்கள் வெளியிட எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அய்க்கண் அவர்களின் பெயரைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அந்தக் காலத்தில் கோவையிலிருந்து 'வான்மதி' என்ற பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. 'பாதிக் கதை இது, மீதிக் கதை என்ன?' என்கிற மாதிரி ஒரு போட்டி. முதல் பாதிக்கதையை நான் எழுத மீதிப் பாதிக்கதையை எழுதி முதற் பரிசைப் பெற்றார் அய்க்கண். கதையின் பெயர்: 'சத்தியம்'. அய்க்கண் அவர்களுக்கு இதெல்லாம் நினைவிருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. //அடுத்த ஆண்டு நான் வெளியிடலாமா என்ற எண்ணத்தில் வெளிவந்தேன். //

    நல்ல முயற்சி. வெற்றி பெறட்டும். 'காரைக்குடி கம்பன் விழா' போது ஸ்டால் போட்டு விற்பனை செய்ய முடியுமா? தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. ஊரில் இருந்தால் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்....
    ம்... அதுதான் கிட்டுவதில்லையே....
    வாழ்த்துக்கள் அக்கா....

    பதிலளிநீக்கு
  5. காரைக்குடி புத்தகத்திருவிழா பற்றிய சிறப்பான அறிமுகக் கட்டுரை. மரப்பாச்சி நல்ல முயற்சி. சென்னையிலும் இது போல முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?

    பதிலளிநீக்கு
  6. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜிவி சார். எனக்கும் தெரியலை ஜிவி சார். விசாரிக்கணும்.

    நன்றி ஆம்குமார் சகோ.

    நன்றி முத்துசாமி சகோ. கேட்டு சொல்கிறேன் சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...