எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 ஏப்ரல், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.


காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.

301. பெண் பார்த்தல் :- இது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. முக்கால் வாசி இது கோயில், வயது, படிப்பு, தகுதி எல்லாம் முன்பே பார்த்து முடிவு செய்யப்பட்டு மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்படுவது. இது சில சமயம் கோயில்களிலும் சில சமயம் உறவினர் வீடுகளிலும் ராசியான இல்லங்களிலும் நிகழ்வதுண்டு.

302. திருவிளக்கு ஏற்றுவது. :- இது பெரும்பாலும் அப்பத்தா அல்லது அய்த்தைகள் ஏற்றுவார்கள். மாப்பிள்ளை & பெண் இருவர் வீடுகளிலும். விசேஷத்தின் ஆரம்பத்தைக் குறிப்பது. 

303. கூடி ஆக்கி உண்ணுதல்: -  304. தாய பிள்ளைகள், பங்காளிகள்  அனைவரும் திருமணத்தன்று முதல் நாள் காலையிலேயே வந்திருந்து கலந்து கொள்வதைக் கூடி ஆக்கி உண்பது என்பார்கள்.




305. ஈடுபொன் கொடுத்தல் கழுத்துரு கோர்த்தல். :- மாப்பிள்ளை வீட்டிலிருந்து கழுத்துரு வாங்கச் செல்வார்கள் பெண் வீட்டுக்கு. அதன் பின் கழுத்துருவைக்கோர்ப்பார்கள். பெண்ணுக்கு அணிவிக்கப்படும் திருமாங்கல்யம் முன்பே பெண்வீட்டாரால் செய்யப்பட்டு விடுவதால் அதற்கு ஈடு பொன் கொடுப்பார்கள்.

சாமான் பரப்புதல்:-மாப்பிள்ளைக்கு, பெண்ணுக்கு வைக்கும் சீர் சாமான்களையும் மாமியாருக்கும் அளிக்கும் பொருட்களையும் பரப்புவார்கள். மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணுக்கு வைக்கும் பொருட்களை ஐந்து அல்லது ஏழு பெண்டிர் எடுத்துச் சென்று பரப்புவார்கள். முதல் சீர் மறு சீர் வேறு வைப்பார்கள்.

306. முதல் சீர் வைத்தல் :- பெண் வீட்டிலிருந்து பெண்கள் மஞ்சள்,உப்பு, புளி, குடம், செம்பு, விளக்கு, பச்சரிசி, பஞ்சு, விபூதி , பாக்கு ஆகியவற்றை சீராக வைக்கச் செல்வார்கள்.

307. மறு சீர் வைத்தல் :- பெண் வீட்டில் இருந்து தேங்காய்ச் சட்டி, சரிகை வேஷ்டி, துண்டு, சங்கிலி ,மோதிரம், கைக்கெடிகாரம், எலுமிச்சை, பூச்செண்டு, மாலை, ஆகியவற்றைக் கொண்டு செல்வார்கள்.

 308. வள்ளுவப் பை தயாரித்தல்.  :- வள்ளுவப் பையில் சில்வர் அல்லது வெள்ளியில் ஏடு எழுத்தாணி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு ஆகியன இருக்கும். இது டபிள் நிட்டட் துண்டியால் தயாரிக்கப்பட்டு வலைத் துணியும் தைக்கபட்டிருக்கும். வாயில் முடிந்து கொள்வது போல முடிச்சுடன் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக்காலத்தில் ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் படித்ததனால் இந்த வள்ளுவப் பை தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்பது என் கணிப்பு. இதை மாப்பிள்ளைத் தோழன் மாப்பிள்ளையுடன் அமர்ந்து கையில் திருமணம் முடியும் வரை வைத்திருப்பான்.

309. முளைப்பாரி தயாரித்தல்:- நவதானியங்களை திருமணத்துக்கு இரு நாட்கள் முன்பே ஒரு செம்புத் தவலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறப் போடுவார்கள். இது மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் சடங்கு. இதற்கு சாமி வீட்டின் எதிரில் மாப்பிள்ளை வீட்டிலுள்ள பெண்டிர்  செம்புத்தவலையில் உள்ள நீரில் இரு கைகளாலும் நவதானியத்தை நிரம்ப அள்ளி இதில் மும்முறைபோடுவார்கள். பின்னர் இது வேடு கட்டி வைக்கப்படும். மறுநாள் காலையும் மாலையும் நீரை மாற்றுவார்கள். திருமணத்தன்று முளைப்பாலிகைக் கிண்ணங்களில் பூமணம் இடும்போது சடங்கு செய்ய இதை மாப்பிள்ளை வீட்டார் கொண்டு செல்ல வேண்டும்.

310. கோட்டை கட்டுதல்.  :- நெல்லை ஒரு பையில் கட்டி அதன் மேல் வைக்கல் பிரியால் நன்கு பெரிய புட்பாலைப் போல சுற்றுவார்கள். இதைப் பெரும்பாலும் சமையல் கலைஞர் யாரிடமாவது கொடுத்துக் கட்டித் தரச் சொல்வதுண்டு. திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையும் பெண்ணும் மாமக்காரர்களுடன் கை கோர்த்து மணவறையை வலம் வந்து சாமி வீட்டில் நுழையும்போது இதைத் தாண்டிச் செல்லவேண்டும்.

311. விதை நெல் கொடுத்தல். :- திருமணம் முடிவானதும் கோயில்களுக்கு விதைப்பு நெல் வாங்கிக் கொடுப்பார்கள்.

312. ஆலாத்தித் தட்டு:- திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு அழைக்கும் போது நிலையில் உள்ள கோலத்தின் முன் நிற்க வைத்து மூன்று உள்ள கூம்பு ஆலாத்தியும் சதுர ஆலாத்தியும் எடுப்பார்கள். இந்த ஆலாத்தி சாதம் அல்லது இட்லியை விளக்கெண்ணெய், மஞ்சள், சுண்ணாம்பு, நெய் கொண்டு பிசைந்து அதில் திரியைப் பதித்து உருவாக்கப்படுவது. 

313. கைப்பெட்டி :- இது இன்றியமையாதது. இதில்தான் திருமண சம்பந்தமான பணப் பரிவர்த்தனை நடைபெறும். பெட்டியடி பார்த்துக் கொள்ள என்றே உறவினர் ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் வசம் பொறுப்பு அளிக்கப்படும் பெட்டியில் மேலே பல கிண்ணங்கள் கொண்ட அமைப்பும் உள்ளே ஒரு பெரிய பெட்டியும் இருக்கும். இதில் திருமணச் செலவுக்கான பணம், முறைச்சிட்டை, பணச் சிட்டை நோட்டு, கணக்கு வழக்குகள், திருப்பூட்ட நூற்கண்டு, மாமப் பட்டு, மாமப் பட்டில் முடியும் காசு, மஞ்சள், பாக்கு, பேனா, வெள்ளை கவர்கள், இன்னபிற சமாசாரங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

314. மாற்றுக் கட்டுதல். :- திருமணத்தன்று சலவைத் தொழிலாளி மண மேடையின் மேல் நீல மாத்தைக் கட்டுவது வழக்கம். சிலப்பதிகாரத்தில் சொல்லியது போல நீல விதானத்தின் கீழ் திருமணம் நிகழ்வதாக ஒரு ஐதீகம். பொதுவாக பல்லி போன்றவையும் தூசு தும்பும் மணமக்கள் மேல் விழாமல் இருப்பதற்காகக் கட்டப்படுவது.
 
315. பூரம் கழித்தல் - பெண்ணுக்கு திருமணநாள் அதிகாலை பூரம் கழித்தல் சடங்கை அத்தை செய்வார். கர் இனிக் கண்பக் காப்பார் என்றஅதுவரை பெண்ணைக் காவலாகக் காத்து நின்ற பூரம் என்ற தேவதைின் காவலில் இருந்து பெண்ணவிடுவிப்பது.

316.  பகவத் தியானம் & காப்புக்கட்டுதல் - திருமணத்தன்று பெண்ணுக்கும் ஆணுக்கும் அவரவர் தாய் மாமா காப்புக் கட்டுவர்.  சிவப்புப் பட்டுத் துணியில் மஞ்சள் கோர்த்து அதில் காசு முடிந்து பெண் மாப்பிள்ளை ஆகியோருக்கு புரோகிதர் தனித்தனியாக சங்கல்பம் செய்து வைத்து விக்னேஸ்வர பூஜை செய்த பின் அவர்கள் மணிக்கட்டில் அவரவர் தாய்மாமன்கள் காப்புக் கட்டுவார்கள்.  புரோகிதர் அதன் பின் திருமாங்கல்யத்துக்கு லெக்ஷ்மி பூஜை செய்வார்.

ஊர்த்திருவிழாக்களிலும் காப்புக் கட்டுவார்கள். 

317. மாப்பிள்ளை அழைப்பு - திருமணத்துக்கு  மாப்பிள்ளையை கோயில் அல்லது மண்டபத்திலிருந்து அழைத்தல்.மறு சீரில் வைத்த மோதிரம், வாட்ச், சங்கிலி மாலை ஆகியன அணிவித்து தோளில் பட்டுத் துண்டு அணிவித்து கையில் பூச்செண்டு கொடுத்து மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் நகரச் சிவன் கோயிலிலிருந்தோ அல்லது பிள்ளையார் கோயிலிலிருந்தோ அழைப்பார்கள்.

318. . பெண் எடுக்கிக் காட்டுதல் -  பெண்ணை மாப்பிள்ளை அழைத்து வரும்போது கூட்டி வந்து காட்டுதல், முகத்தை ஏந்திக் காட்டுதல். அந்தக் காலத்தில் பெண் குழந்தைத் திருமணம் நடைபெற்றதால் பெண்ணை இடுப்பில் எடுக்கிக் காட்டுவார்களாம் :) 

319.  . திருப்பூட்டுதல் - மங்கல நாணை அணிவித்தல்.. தாலி கட்டுதல்.அப்போது பெண்ணின் கரத்தில் பச்சரிசியும் தேங்காயும் கொடுக்கப்பட்டிருக்கும். பெண் கிழக்குப் பார்த்து மணையில் ஏறி நிற்க மாப்பிள்ளை பெண்ணிற்கு முதலில் தங்கள் கோயில் மாலையை அணிவித்து அதன் பின் விபூதி குங்குமம் இட்டு கழுத்திருவைத் திருப்பூட்டி, அதன் பின் தாலிச் சங்கிலிகளை அணிவிப்பார்.

 320. அரிமணம், பூமணம் இடுதல் - பகவத் தியானம் செய்த பின் மாப்பிள்ளை பெண்ணுக்குத் தனித்தனியாகவும், திருமணம் முடிந்தபின் மாப்பிள்ளை பெண்ணைச் சேர்த்தும் அரிமணம் பூமணம் இட்டு வாழ்த்துவார்கள். ஐந்து முளைப்பாலிகைக் கிண்ணங்களில் முளைவிட்ட நவதானியங்களை மும்முறை எடுத்துப் போடுவார்கள். இு அரிமம்.  அதன் பின் பாலில் நனைத்த பூவில் கை, முழங்கை, தோள் தொட்டு மும்முறை வாழ்த்திப் பின்னே போடுவார்கள். இு பூ மம். இச்சடங்கை இரு வீட்டு ஆண்கள் மட்டுமே செய்வார்கள். 


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்
 .

3 கருத்துகள்:

  1. அடேயப்பா... எவ்வளவு சடங்கு சம்பிரதாயங்கள்.. இப்போதும் இவை யாவும் தொடர்கிறதா என்று அறிய ஆவல் தேனம்மை.. திருமண வைபவங்கள் என்றாலே மனத்தில் மகிழ்ச்சி பொங்கும். அதில் உறவுகளோடு இத்தனை சிறப்புகளும் சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமா? அழகானதொரு ஆவணப்பெட்டகமாய் மிளிர்கிறது உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் கீத்ஸ். எல்லாவற்றையும் ஆவணப்படுத்தவே எழுதி வருகிறேன். இன்று இவை அருகிவருகின்றன. எனவே பதிவு செய்கிறேன். நன்றிடா

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...