எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 அக்டோபர், 2014

உணர்வுகள் தொடர்கதை.



எப்பக் கேட்டாலும் இனம்புரியாத ஒரு உணர்வுல ஆழ்த்தும் பாட்டு இது. சாஃப்ட் ராக். ப்ரேசிலைச் சேர்ந்த பாடகர் மோரிஸ் அல்பர்ட் பாடியது.70 களில் மக்களை ஆட்டிப் படைத்த பாடல்.பார்ட்டி கில்லர்ஸ் என்று சொல்வார்கள் அந்த ரகம்.



உணர்வுகளைக் கொய்து போடும் தன்மை இந்தப் பாடலுக்கு உண்டு. நினைவுகளும் கனவுகளும் தனிமையும் நிரம்பிய ஒரு மாய வெளிக்குள் இட்டுச் செல்லும் இசை. லூயிஸ் காஸ்டே எழுதியது. 1974 இல் வெளிவந்த இது 40 வருடங்களுக்குப் பின்னும் கோலோச்சிக்கொண்டிருக்கிறது. 20 மொழிகளில் பல்வேறு பாடகர்களால் பாடப்பட்ட பெருமையும் கொண்டது.

தொடர்புடைய ஆனால் தொடர்பில் இல்லாத இருவேறு மனநிலைகளையும் ., ஏதோ ஒரு விதத்தில் பாதித்த- என்னவோ ஒரு நெருக்கம் விழையும் மனதுடன்., ஒரு பெண்ணுடன் கொண்ட உணர்வுகளையும். ,அதே நேரம் இருவருக்குமான இடைவெளியை உணர்ந்தும் ரோஷார்ஷ் சித்திரங்கள்போலச் சிதறிச் செல்லும் பாடல் இது.

இசை ஒரு பக்கம் சுற்றிச் சுழலும் நீருக்குள் ஆழ்த்த, பாடல்வரிகள் துடுப்புபோல் மெல்ல அசைக்க, மோரிஸ் அல்பர்ட்டின் குரல் படகைப் போலத் தாலாட்ட .. இன்னுமென்ன சொல்ல. எல்லாமே உணர்வுகள்தானே.

அலையடிக்கும், பொங்கும் மனநிலையில் கண்ணீர்தானே வரும். காதல் உணர்வுகளை மறக்கவோ மறைக்கவோ முடியுமா. தொலைக்கத்தான் முடியுமா.

தனிமையும் பொங்கும் காதலும் தவிர்க்கவே இயலாத & ஒன்று கூடவே முடியாத  விஷயங்கள் . இருவரும் சந்திக்கவுமில்லை பிரியவுமில்லை. சேர்ந்திருக்கவும் இல்லை பிரிந்திருக்கவும் இல்லை. எல்லாம் காதலில் மட்டுமே சாத்தியம். அவ்வப்போது மனசை ஆட்டிப் படைக்கும்பாடல் என்பதால் பகிர்ந்துள்ளேன்.

எல்லார் வாழ்விலும் ஏதேனும் ஒரு தருணத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய ஒரு விதமான பிரியமும் பிரிவும் இந்தப் பாடலைக் கேட்கும்போது நினைவுக்கு வரும். அதுவே இதன் இத்தனை வருட நீடித்தலுக்கும் வெற்றிக்கும் காரணம்.

முன்பே கேட்டிருந்தாலும் இன்னும் ஒரு முறை இசைக்காகவும், பாடல் வரிகளுக்காகவும் மோரிஸின் குரலுக்காகவும் கேட்டுப் பாருங்கள். அற்புதம்.



4 கருத்துகள்:

  1. நன்றி காரிகன். உங்கள் பதிவைப் பார்த்தேன் பிரமித்தேன்.

    ///மிகவும் அருமையான ஆராய்ச்சிக்கட்டுரை போல் இருக்கிறது. எல்லாப் பாடல்களிலும் தேன் உண்ணும் வண்டு போல் மாந்தி மாந்தி எழுந்தேன். :)

    எனக்கும் எம் எஸ் வியின் பல பாடல்கள் பிடிக்கும். இங்கே அநேகமாக சிவாஜி சம்பந்தப்பட்டதுதான் வந்திருக்கிறது.

    விஸ்வநாதன் வேலை வேண்டும். அனுபவம் புதுமை, ஹேய் நாடோடி, உத்தமபுத்திரனில் “அன்பே என் அன்பே நீ வா” என்று டான்ஸோடு கைதட்டிஆடும் பாட்டு இதெல்லாம் பிடிக்கும்.

    இதெல்லாம் விஸ்வநாதன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ( ரொம்ப கவனித்து நோக்குதல் குறைவு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ) :)

    இன்னும் பல பாடல்கள் உண்டு. விஸ்வநாதன் பேரரசர், அடுத்து இளையராஜா, அடுத்து இளவரசர் போல் ரஹ்மான் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள்.

    இப்படித்தான் என் கண்ணோட்டம். ஆனால் பேரரசராக இனி யாரும் ஆகமுடியாது என்பதும் உண்மை.நன்றி பகிர்வுக்கு :)///

    முதல் வரவுக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி :)

    பதிலளிநீக்கு
  2. மயிலிறகால் வருடி விடுவது போன்ற ஒரு உணர்வு அம்மணி. என் கைபேசியில் பதிவிறக்கப் போகிறேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...