எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கோவை இலக்கிய சந்திப்பில் அன்ன பட்சி பற்றி கவிஞர் அகிலா புகழின் மதிப்புரை.

கோவையில் நடந்த 45 ஆவது கோவை இலக்கிய சந்திப்பில் கவிஞர் அகிலா புகழின்  அன்னபட்சி  பற்றிய மதிப்புரையை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.  இவர் சொல்லிவிட்டுச் செல், சின்ன சின்ன சிதறல்கள் என்னும் இரு கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். கவிஞரின் மதிப்புரை பெற்றமையால் அன்ன பட்சியும் சிறப்புற்றது. நன்றி அகிலா புகழ். :)
கவிஞர் அகிலா புகழ் .
 நூல் : அன்னபட்சி
ஆசிரியர் : தேனம்மை லக்ஷ்மணன்
அகநாழிகை பதிப்பகம்
ஜனவரி 2014

(கோவை இலக்கிய சந்திப்பில் 
31 ஆகஸ்ட் 2014 
என்னால் மதிப்புரை வழங்கப்பட்டது..)
தேனம்மை அவர்கள் சிறந்த கவிஞர், எழுத்தாளர், திறமையான படைப்பாளி. பத்திரிகைகளில் கட்டுரை, சிறுகதை என எழுதியுள்ளார். இந்த நூலுக்கு எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான எம் ஏ சுசீலாம்மாதான் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்

இந்த கவிதை தொகுப்பின் தலைப்பு 'அன்னபட்சி' மிக அருமையானது. தலைப்பிற்குரிய கவிதையில் தேனம்மை அவர்கள், அன்னபட்சியின் தன்மையை அழகாய் இயம்புகிறார். அன்னபட்சி எப்படி நீர் தவிர்த்து பால் மட்டும் கொள்ளுமோ அதையே சற்று மாற்றி,
உன் அல்லதை எல்லாம் நல்லதாக்கி அருந்தும் அன்னபட்சி நான்’ ன்னு
எழுதியிருக்காங்க கவிதையில்.
இது மிகவும் வித்தியாசமான சிந்தனை. மற்றவர்களின் நல்லவை அல்லாதவற்றைக் கூட நல்லதாக்கிப் பார்க்கும் அவரின் இந்த குணம் நம்மை வியக்க வைக்கிறது.

கோவை இலக்கிய சந்திப்பில் என்னுரை 

மேலே நான் கொடுத்திருக்கும் இந்த இணைப்பில் "அன்னபட்சி “ பற்றிய அவங்களோட மதிப்புரை இருக்கு. அது அவங்களோட வலைத்தளம். சின்னச் சின்னச் சிதறல்கள்.  படித்துப் பாருங்கள். மிக்க மிக்க நன்றி அகிலா & கோவை இலக்கிய சந்திப்பு :)

2 கருத்துகள்:

  1. கவிஞர் அகிலா புகழ் அவர்களின் மதிப்புரை வாசித்தோம். தங்கள் கவிதைகளின் சில துளிகள் மிகவும் அருமை....

    வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...