எனது பதிமூன்று நூல்கள்

செவ்வாய், 3 டிசம்பர், 2013

அணிலே அணிலே. பெட் அனிமலே.

அணில் என்றதும் ராமர் பாலம்தான் ஞாபகம் வரும்.


எங்கள் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கே பக்கத்து வீட்டில் இருந்த குட்டிப் பெண்ணும் பாட்டியும் ஒரு அணிலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

அணிலைக் கவண்கல் வைத்து அடித்துச் சமைக்கும் மக்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன பெட் அனிமல்.. ஆச்சர்யமாக இருந்தது.

நாய், பூனை, மாடு, ஆடு, கோழி, புறா, முயல் எல்லாம் வளர்ப்பார்கள். இங்கே என்ன அணில். எப்படிக் கிடைத்தது.

அந்தப் பெண்ணின் பாட்டி சொன்னார். 20 நாட்களுக்கு முன் ஒரு நாள் இந்தப் பிஞ்சு அணில்   மரத்திலிருந்து பிறந்தவுடன் குஞ்சாகவே முற்றத்தில் விழுந்து கிடந்ததாகவும். அதைத் தூக்கி இங்க் பில்லரில் பால் கொடுத்து வளர்த்து வருவதாகவும். அதன் பின் தோட்டத்தில் கொண்டு விட்டாலும் அது மரத்தில் ஏறாமல் வீட்டிற்குள்ளேயே காலோடு ஓடி வந்து விடுவதாகக் கூறினார்.

பயமாக இருந்தது அது விளையாடியதைப் பார்த்தால். நடக்கும் வேகத்தில் காலில் பட்டு மிதித்து விட்டால் போச்சு. ஆனால் அவர்கள் மூவரும் ( பெண், பாட்டி, அணில் ) ஒரு மாதிரியான ஹார்மனியுடன் பழகிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் குட்டிப் பெண்ணும் பயப்படாமல் அதைப் பிடித்து விளையாடித் தோளில் தூக்கிப் போட்டு இங்க் பில்லரில் பால் ஊட்டிக் கொண்டிருந்தார்..!!

காக்கைக் குருவி எங்கள் சாதி என்றார் மகாகவி.. அணிலும்தான் ஐயா என்று சேர்ந்து பாடத் தோன்றியது. :)


12 கருத்துகள் :

கார்த்திக் சரவணன் சொன்னது…

அணில் பில்லரில் சாப்பிடுவது கொள்ளை அழகு...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வியப்பாக இருக்கிறது...!

pons frames photography சொன்னது…

nice

ADHI VENKAT சொன்னது…

அழகான பகிர்வு. இங்க் ஃபில்லரில் பால் குடிப்பது கொள்ளை அழகு..

Unknown சொன்னது…

அருமை.மனசு இருந்தால் பிள்ளையார் எறும்பும் நமக்கு பெட் அனிமல் தான்.

எஸ் சம்பத் சொன்னது…

என் மகளும் அணில் வளர்த்தாள், இதே போல் பிறந்து ஓரிரு நாட்களே ஆன அணில் மரத்திலிருந்து கீழே விழுந்ததை எடுத்து அதற்கு 1 எம்,எல் இன்ஜெக்சன் சிரிஞ்ச் வாங்கி அதிலுள்ள ஊசியை அகற்றிவிட்டு,அதன் வழியாக பால் கொடுத்து செல்லமாக வளர்த்தாள். நன்றாக வளர்ந்து இரு மாதங்களில் எனது இரண்டு மகள்களின் கைகளிலும் செல்லமாக ஏறி விளையாடும். ஒரு விடுமுறைநாளில் சில நிமிடங்கள் படுக்கை அறையில் உலாவட்டுமே என விட்டுவிட்டு கவனக் குறைவாக டி வி பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராமல் வந்த பூனை ஒன்று எடுத்துச் சென்றுவிட்டது. மிகப்பெரிய சோகம். என் மகளை தேற்றுவதற்கு 2 நாட்கள் ஆனது. ஒரு வீடியோ காட்சியும், சில புகைப்படங்களும் இருக்கிறது, மறுமொழியில் இணைக்க முடியுமா

Thenammai Lakshmanan சொன்னது…

அனுப்பி வைத்தால் இடுகையாகவே போடுகிறேன் சகோ. எனது ஈ மெயில் ஐடி thenukannan14@gmail.com. அதில் அனுப்பி விட்டு இதில் கமெண்ட் போட்டீர்கள் என்றால் எடுத்து இடுகையாகவே போட்டு விடுகிறேன். கருத்துக்கும் பகிர்வுக்கும் எஸ். சம்பத். :) ஆனால் பூனை எடுத்துச் சென்றது குறித்து வருத்தமாக இருக்கிறது. :(

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி சம்பத் சகோ. மறுமொழியில் இணைக்க முடியாது என்று நினைக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான படம்... அணில் வளர்க்கும் சிறுமி மனதைக் கவர்ந்து விட்டாள்.....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்கூல் பையன்

நன்றி தனபாலன் சகோ

நன்றி பொன்ஸ்

நன்றி ஆதிவெங்கட்

நன்றி செந்தில்குமார்

நன்றி சம்பத் சார்

நன்றி வெங்கட். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

kankaatchi.blogspot.com சொன்னது…

அதனால்தான் அது இராமபிரானுக்கு பிடித்த
ஜீவன்.அதன் முதுகில் தங்க நிறக் கோடுகளை அணிவித்துள்ளான்
படமும் தகவல்களும் அருமை.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...