எனது நூல்கள்.

செவ்வாய், 31 டிசம்பர், 2013

3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..

பொன்னு விளையும் பூமி துபாய். அங்கே பொன்னுச்சாமி என்ற ஒரு தன்னம்பிக்கை மனிதரைச் சந்தித்தேன்.

உறவினர் ஒருவரின் வீட்டில் வீடு துடைத்து பாத்திரம் துலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் அவர். அங்கே அவருக்கு மாதச் சம்பளம் 350 திர்ஹாம்.

அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்பவர்களுக்கும் நம் தென்னிந்திய சமையல் கலைஞர்களுக்கும் டிமாண்ட் அதிகம்.பொன்னுச்சாமி தினம் பத்ரிக்கைபோடும் வேலை செய்கிறார். அதற்குச் சம்பளம் 3500 திர்ஹாம். ஆனால் அதோடு இருந்து விடாமல் வீட்டு வேலை செய்ய வேண்டும் என அழைப்பவர்களுக்கும் தனது ஓய்வு நேரத்தில் சென்று பணிபுரிந்து வருகிறார்.

வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமல்ல. இல்லத்தரசிகளும் கூட இது போன்ற வேலைகளுக்காக பொன்னுச்சாமி போன்ற நல்ல மனிதர்களை நம்பியுள்ளார்கள்.

பொன்னுச்சாமி திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 17வயதிலேயே துபாய்க்கு வேலை செய்யும் விசாவில் வந்து விட்டார். 17 வயதிலேயே திருமணமாகிவிட்டதால் தற்போது 47வயதாகும் அவருக்கு இரு பையன்களும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்கள். பசங்கதான் இந்தியாவில் வேலை செய்து சம்பாதிக்கின்றார்களே என்று  அக்கடாவென்று ஓய்வெடுக்கவில்லை அவர்.

பேப்பர் போடும் வேலையிலும் , வீட்டு வேலையிலும் தன் செலவுக்குப் போக ஒவ்வொரு வருடமும் தான் சேமிக்கும் பணத்தை இந்தியா செல்லும்போது தங்கமாக வாங்கிச் செல்லும் அவர் கிட்டத்தட்ட 100 பவுன் வரை சேர்த்திருப்பதாகச் சொன்னார். நிஜமான பொன்னுசாமிதான். :)

மேலும் இரு மாடி வீடுகள் கட்டி இருப்பதாகவும். இன்னும் மனைகள் வாங்கிப் போட்டிருப்பதாகவும் கூறினார்.

பணி நிமித்தம் செல்லும் பொறியாளர்கள், மேல் தட்டு உத்யோகத்தினருக்கு பொன்னுச்சாமி போன்றோரின் சேவை அத்யாவசியம்.  ஏதோ ஒரு அலுவலகத்தில் கடை நிலை ஊழியராகப் பணியாற்றும் இவ்வகை மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த ஆஃபீசர்களின் குடும்பங்களுக்கும் அதன் மூலம் அவர்களின் நண்பர்களின் குடும்பங்களுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் வீட்டு வேலை செய்ய வருகிறார்கள். மேல் வரும்படி வருமே அதைக் கொண்டு ஊரில் உள்ள குடும்பத்துக்கு இன்னும் அதிகம் பணம் அனுப்ப இயலுமே என்று.

இவ்வளவு இருந்தும் அவர் தமிழகம் செல்லும்போது புருஷன் கொண்டு வந்ததை வைத்து செலவழித்துக் கொண்டிராமல் அவரின் மனைவியும் அவருக்குச் சமைத்து வைத்துவிட்டு காட்டு வேலை , கழனி வேலைக்குச் சென்று சம்பாதிப்பதாகவும் கூறினார். உழைப்பின் உயர்வு புரிந்தது. 

ஒரு பையன் ஆட்டோ ஓட்டுவதாகவும் இன்னொருவன் மிகப் பெரும் கம்பெனி ஒன்றில் ஊழியராகவும் இருப்பதாகக் கூறிய பொன்னுச்சாமி இன்னும் சில வருடங்கள் அங்கே பணி செய்துவிட்டு அதன் பின் தமிழகம் வந்து ஒரு ட்ராவல் ஏஜென்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருப்பதாகக் கூறினார்.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செட்டிலாகும் எண்ணத்தோடேதான் தொடர்ந்து உழைக்கின்றார்கள் என்றாலும் எந்த அங்கீகாரமும் இல்லாத பணி வீட்டு வேலைக்காரர்கள் பணிதான். அதிலும் நல்ல பெயர்வாங்கி நல்ல மனிதர்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கும் பொன்னுசாமியின் ஆசை நிறைவேற வாழ்த்தி வந்தேன்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


10 கருத்துகள் :

Thaneermalai Sathappan சொன்னது…

vazhga valarga valamudan

Thaneermalai Sathappan சொன்னது…

vazhga valarga valamudan

Asiya Omar சொன்னது…

துபாய் பொன்னுசாமி அவர்களைப் போன்று இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். வெயிலிலும் பனியிலும் வேலைப் பார்த்து கஷ்டப் பட்டு சம்பாத்தித்து வாழவில் முன்னுக்கு வந்தவர்களை நிச்ச்யம் நாம் பாராட்டத்தான் வேண்டும்.மேல்தட்டில் வேலை செய்பவர்களிடம் கூட சேமிப்பு இருக்காது, ஏனெனில் அவர்கள் குடும்பத்தோடு இங்கு இருப்பதால், திர்ஹமில் சம்பாதித்து திர்ஹமில் செலவழித்தாக வேண்டும்.பொன்னுசாமி போன்றவர்கள் குடும்பம் ஊரில் இருப்பதால் சிந்தாமல் சிதறாமல் அப்படியே அனுப்ப முடிகிறது.சேமிப்பும் இருக்கும்.ஆனால் அவர்களுக்கு ஒரே மனக்குறை குடும்பத் தோடு இருக்க இயலாது இருப்பது தான்.விரைவில் அவர் நினைத்தது போல் ஊரில் போய் செட்டிலாகி வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அயராத தளராத உழைப்பிற்கு பொன்னுசாமி அவர்கள் ஒரு உதாரணம்... அவருக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி...

ADHI VENKAT சொன்னது…

உழைப்பின் பெருமையை உணர்த்திய பொன்னுசாமி அவர்களுக்கு பாராட்டுகள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தண்ணீர்மலை சாத்தப்பன்

நன்றி ஆசியா.. உண்மைதான்.. உங்க வாக்கு பலிக்கட்டும் :)

நன்றி தனபாலன் சகோ

நன்றி ஆதி வெங்கட்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

நிறையப் பொன்னுசாமிகள் இதுபோல் சிங்கபூரிலும் உண்டு... வேலைகள்தான் வித்தியாசம்...

கடின உழைப்பாளிகள்...!!

minnal nagaraj சொன்னது…

அங்கீகாரமில்லை இல்லாத வேலை என்றாலும் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை அதற்காக தன் குடும்பத்தை விட்டு தனியாக ....கிரேட் இவரை போல் எத்தனை பேர் ??அவர்களின் குடும்பம் இந்த தியாகத்தை புரிந்து கொள்ளுமா??

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தெம்மாங்குப் பாட்டு

நன்றி மின்னல் நாகராஜ்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...