எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 டிசம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், ஸாதிகா ஹசானாவின் அம்மா அருமை அம்மா.

வலை உலகில் என் அன்புத் தோழிகளில் ஒருவர் ஸாதிகா. எல்லாப் புகழையும் இறைவனுக்கே அர்ப்பணித்தவர். அவருக்கு அம்மா மேல் அபரிமித ப்ரியம். முன்பு லேடீஸ் ஸ்பெஷலில் ப்லாகர் கட்டுரைக்காக கேட்ட போதும் அம்மா பற்றிய பகிர்வு ஒன்றையும் அனுப்பினார். நெய் மீனை அவர் அம்மா ஊட்டி விடுவதைப் படித்த போது சுவையாய் வறுத்த மீனைத் தின்ற அனுபவம் ஏற்பட்டது. அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.

////// உங்கள் அம்மா உங்களை திட்டியது உண்டா?///

திட்டியது உண்டாவா?இதோ பேரனும் பிறந்து விட்டான்.இன்னும் என் அம்மா என்னை திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.இதோ இன்று  காலையில் கூட டோஸ் வாங்கி விட்டேனாக்கும்.இப்படி அவர் வாயால் அர்ச்சனை வாங்க விட்டாலும் எனக்கு சாப்பிட்டது ஜீரணம் ஆகாது. 

மிக அருகில் உள்ள வீட்டில் இருந்தும் அவர்களை சென்று பார்க்க இடைவெளி அதிகமாகி விட்டால் ,என் குழந்தைகளை நான் திட்டினால்,வெளியில் சென்று விட்டு லேட்டாக வந்தால்,சாப்பாட்டில் உப்பு கூடினால் இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அம்மாவிடம் டோஸ் வாங்கி வாங்கி ஒரு வகையாக  பழகியும் போய் விட்டது.

சிறுமியாக இருந்த பொழுது அப்பா செல்லம் தான்  அதிகம்.நெய் விடாமல் சாப்பாடு இறங்காது.அம்மா நெய் பாட்டிலை தூக்கினாலே கத்துவார்.இருக்கிற வெயிட் போதாதா என்று.அப்பாவோ சாதத்தில் நெய்யை ஸ்பூன் ஸ்பூனாக விடுவார்.

டிசம்பர் மாதம் வஞ்சிரமீன் சீஸன் வந்து விட்டால் கொண்டாட்டம்.அப்போது அப்பா வந்ததும்தான் சாப்பிடுவேன்.இன்னும் அதிகம் எடுத்துக்கொள்ளலாம் என்று.அம்மாவோ வெயிட் போடும் என்று தடுப்பார்.அப்பா நன்றாக சாப்பிடும்மா வளருகிர பிள்ளை.”என்று ஊட்டி விடுவார்.அம்மா சொன்ன பேச்சு கேட்டு இருந்தால் இந்நேரம் பிப்டி கேஜி தாஜ் மஹால் ஆக இருந்து இருப்பேனோ என்னவோ.

இன்று காலை டிபனுக்கு  செய்த கிச்சடியை எடுத்துக்கொண்டு போய் கொடுத்த பொழுது டேஸ்ட் பண்ணி விட்டு “உனக்கு மளிகைக்கடைகாரன் உப்பு பக்கெட்டை ஃபிரீ ஆக தருகிறானா என்ன?கிள்ளிப்போடுவதை அள்ளிப்போடுகிறாய்.வாயில் வைக்க முடியலே.உன் பிரஷரை கொஞ்சம் நினைத்துப்பாரு”என்று கோபமாக டோஸ் விட்டார்.அம்மாவின் டோஸ் சுகமான அவஸ்தைதான்.என் அம்மா ஆரோக்கியமுடன் இன்னும் நீண்ட நாட்களுக்கு என்ன திட்டிக்கொண்டு இருக்க வாழ்த்துங்க மக்காஸ்....

சென்ற வருடம் நான் ஹஜ்ஜுக்கு (புனித யாத்திரை)சென்ற பொழுது  எங்களுக்காக மனதார பிரார்த்தனை செய்து உச்சி முகர்ந்து  engkaLai வழி அனுப்ப வந்திருந்த பொழுது எடுத்த புகைப்படம் அது.

---- மிக அருமை ஸாதிகா.. திட்டினாலும் கொஞ்சினாலும் நம் அம்மாதானே அதை முழுமையாகச் செய்ய முடியும். ஏன்னா அடிக்கிற கைதான் அணைக்கும். அந்த அணைப்பில் எவ்வளவு இனிமை இருக்கும். :)

தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது .. என்பதை நானும் முழுமையாக நம்புகிறேன்.  நன்றி உங்க அம்மாவைப் பத்தி இங்கே பகிர்ந்து கொண்டமைக்கும் முதன் முதலாக என் வலைத்தளத்தில் உங்க புகைப்படத்தை வெளியிட அனுமதித்தமைக்கும். :)


12 கருத்துகள்:

  1. தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது என்பதை ஸாதிகாவே சொல்லும்போது நெகிழ்ச்சியாய் இருக்கிறது.எனக்கும் என் அம்மாவின் ஞாபகம் வருகிறது

    பதிலளிநீக்கு
  3. தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. நல்வாழ்த்துக்கள் ஸாதிகா. நான் அம்மாவின் அன்பு எப்படியிருக்கும்னு தெரியாமல் வளர்ந்ததால், எல்லாரும் சேர்ந்து செல்லம் கொடுத்திட்டாங்கன்னு எங்க வீட்டில் என்னிடம் சொல்லுவாங்க, அது எத்தனை உண்மை,கண்டிக்கவும்,கண்போல் காக்கவும் அம்மாவால் மட்டுமே முடியும். ஜாலி கார்னரில் கூட பாசத்தை தான் பகிர்ந்திருக்கீங்க தோழி! நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. மீன் பிரியை ஸாதிகாவின் அம்மா அன்பு பாராட்டத்தக்கது. எனக்கும் எங்க அம்மா ஸ்பெஷல்தான். அதுசரி, முகநூலில் தொலைபேசினால் வகைவகையாக மீன்கள் வீட்டுக்கே டெலிவரி செய்யும் நிறுவம் குறித்து ஸ்டேட்டஸ் ஒன்று போட்டிருந்தார்களே... பார்த்தார்களோ!

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பேட்டி... அம்மாவின் காலடியில் தான் சொர்க்கம்.. வாழ்த்துகள்.. பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  7. \\என் அம்மா ஆரோக்கியமுடன் இன்னும் நீண்ட நாட்களுக்கு என்ன திட்டிக்கொண்டு இருக்க வாழ்த்துங்க மக்காஸ்....\\

    நெகிழவைத்துவிட்டீர்கள் ஸாதிகா. தங்கள் எண்ணம்போல் அம்மா நீண்டநெடுங்காலம் நலமுடன் வாழ என் பிரார்த்தனைகள். பகிர்வுக்கு நன்றி தோழி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப அருமையான பேட்டி ஸாதிகா அக்கா. உப்புமா , நெய் ஹிஹி

    பதிலளிநீக்கு
  9. ஸாதிகாக்காவை பார்த்தைல் சந்தோஷம்...சுவராஸ்யமான பகிர்வு!!

    பதிலளிநீக்கு
  10. பகிர்வுக்கும்,கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.ஸ்ரீராம் சார்,சிறிய வயதில் தான் எனக்கு மீன் என்றால் பிரியம்.இப்பொழுது டோட்டலாக மாறிவிட்டேன்.இதை பல தடவைகள் பல இடங்களில் பகிர்ந்துள்ளேன்.கடலுணவு என்று எடுத்துக்கொண்டால் எறா,கனவா(squied ),மாசி போன்றவை சாப்பிடுவதைப்போல் இப்பொழுது மீன் சாப்பிடுவதில்லை.மீன் சமையல் அன்று எனக்கு லஞ்ச் மாகி நூடுல்ஸ்தான்:)

    பதிலளிநீக்கு
  11. தாயின் காலடியே சொர்க்கம்தானே...
    வாழ்த்துக்கள் அக்கா அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  12. நன்றி தனபாலன் சகோ

    நன்றி கவியாழி

    நன்றி அப்துர் ரஹ்மான்

    நன்றி ஆசியா

    நன்றி ஸ்ரீராம்.

    நன்றி ஆதிவெங்கட்

    நன்றி கீதமஞ்சரி

    நன்றி ஜலீலா

    நன்றி மேனகா

    நன்றி ஸாதிகா. அருமையான பகிர்வும் பின்னூட்டமும்

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...