****************
மடிப்புகள் கொண்ட
முகுளமாய்
பசியரேகைப்
எண்ண அலைகள்
எல்லாக் கரைகளையும்
தொட்டு திரும்பிக்
கொண்டேயிருக்கின்றன.
குளத்தை அகலாக்கி
சந்திரனும் சூரியனும்
மின்னும் சுடரை
ஏற்றியபடியே இருக்கின்றார்கள்.
பாவை விளக்காய்
கசடுகளோடு
செதில் செதிலாய்
மின்னுகிறது குளம்.
நீந்திக்கொண்டே இருக்கின்றன
மீன்கள்.,
நாராசங்களும் நன்னீரும்
செலுத்தும் கசங்களை
எண்ணச் சுத்தப்படுத்தியபடி.
சுருங்கச் சுருங்க
ஈசான மூலையில்
பதிந்த கிணற்றுள்
நிர்மலமாய்
தவத்துள் உறைகிறது குளம்.
பெருகப் பெருக
கரைகளை மூழ்கியபடி
ததும்பிக் கிடக்கிறது
பெருங்கருணையாய் குளம்.
டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 15 - 30 , 2013 புதிய தரிசனம் இதழில் வெளிவந்தது.
அட்டைப்படத்திலும் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நன்றி புதிய தரிசனம். :)
டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 15 - 30 , 2013 புதிய தரிசனம் இதழில் வெளிவந்தது.
அட்டைப்படத்திலும் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நன்றி புதிய தரிசனம். :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)