எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

2013 சில சிந்தனைகள்.

கொஞ்சம் குழப்பம்.. கொஞ்சம் நெகிழ்ச்சி ரெண்டும் சேர்த்த கலவை நாம்.

////எல்லா நாளையும் போலத்தான் இந்த நாளும்..

ஆனாலும் நாம் அனைவரும் ஏதோ ஒரு நெகிழ்வோடு இருக்கிறோம்..

ஒரு வருடத்தை வழியனுப்பும் பிரிவுத் துயர்..

அனைவரையும் மன்னிக்கிறோம்..

அனைத்தையும் அரவணைத்துச் செல்ல விழைகிறோம்.

எண்களின் மாஜிக்தான் இது. டீன்களின் குழப்பம் போல.. 13 லிருந்து 14 க்கு.. ////



/////உறவுகள் மட்டுமல்ல.. நட்புகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்திய வருடம் 2013. அனைவரையும் ஒரு கூட்டில் இணைக்கச் செய்த வருடம்..
சில இழப்புக்களையும் சில ஞானத் தெளிவையும் கொடுத்த வருடம். பொறுமையைப் போதித்த போதி மரம்.. ஏனோ ஒரு வலி இருக்கிறது என் நடுத்தம்பியில்லாமல் அடுத்த வருடத்தை எதிர்நோக்க.. அனைவரின் ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை செய்யத் தூண்டிய வருடம்.. வருடங்கள் மாறலாம். சில வருடங்கள் மட்டும் வடுக்களாய்..  ////

/////2014 டைரியெல்லாம் வேண்டாம்.. காலண்டர் இருந்தா யாராவது அனுப்புங்க..

விதம் விதமா ஐ மீன் நடிகை, கிரிக்கெட்டர், மல்லையா குரூப் மாடல்ஸோட கிங்ஃபிஷர் காலண்டர் எல்லாம் வேண்டாம். சாமி படம் போட்ட டேஷீட் காலண்டர்தான் வேணும்.

சென்டர்ல நல்ல சாமி படம் இருக்கணும் அதுல.. (கோயில் பக்கம் வண்டில போனா கன்னத்துல போட்டுக்குறமாதிரி ) அப்போ அப்போ வீட்ல உக்கார்ந்த இடத்திலேயே பார்த்துக் காப்பாத்துன்னு கும்பிட்டுக்கலாம்.

தினம் ராசிபலன் இருக்கணும் அதுல..பலன் நல்லதாயிருந்தா பார்த்துட்டு நடக்குதான்னு காத்திருக்கலாம். ( பாராட்டு, பெருமை, புகழ் நு வந்தா அன்னிக்குன்னு பார்த்து யாரும் திட்டலாம். )

கோயிலுக்குப் போனா விபூதி குங்குமம் மடிக்கலாம்.

விசிறி போல மடிச்சு அலங்காரப் பொருள் பண்ணலாம்.

வெறகடுப்பு இருந்த காலத்துல கலர் கலரா எரியிறத பார்க்கலாம்.

அதுக்கு முன்னே வெளியூர் போனா பல்பொடி பொட்டலம் கட்டுவாங்க.

உ - உத்தமம்
ம - மத்திமம்
அ- அதமம் இதெல்லாம் படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்.

,
,
,அட பொழுது போகலைன்னா...

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து எந்தக் குளிகை, எந்த நாழிகையில இன்னிக்கு சூரியன் உதிச்சுதுன்னு கொழம்பலாம்.

இன்னிலேருந்து என்னிக்கு ஊருக்குப் போறோம்னு உக்கார்ந்து சினிமா மாதிரி தேதியைக் கிழிச்சுக்கிட்டு இருக்கலாம். ( ரங்க்ஸ் வீட்டுல உக்கார்ந்து நீ என்ன பண்ணேன்னு கேக்க முடியாது .

சாப்பிடும்போது டிவி, கம்ப்யூட்டர், அல்லது படிக்க புத்தகம் இல்லாட்டி இதை எடுத்துப் பார்த்துக்கிட்டு சாப்பிடலாம்.

யார் கல்யாணம் என்னிக்கு, எந்த விசேஷம் என்னிக்கு, எந்தத் திருவிழா என்னிக்கு அன்னிக்கு ஹாலிடேயா இல்லையான்னு கரண்ட் இல்லாத சமயம் ( ஐ மீன் கம்ப்யூட்டர், லாப்டாப் பாட்டரி தீர்ந்து போன சமயம் ) உக்கார்ந்து வெட்டி சண்டை போட்டுக்கலாம்.

ஹிஹிஹி இதை எல்லாம் யாரும் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு என்னத் திட்ட வரவேண்டாம்.. இந்த வருஷம் முடியுது.

அடுத்த வருஷம் -- 2014 உங்க எல்லாருக்கும் -- நம்ம எல்லாருக்கும் நல்ல வருஷமா அமைய வாழ்த்துக்கள் நட்புகளே, சகோதரர்களே, சகோதரிகளே, உறவுகளே. !!!////


இதுக்கு இன்னிக்கு கரூர் வைஸ்யா வங்கிக்குப் போனபோது கன்னட காலண்டர் கிடைச்சது. நாட்காட்டி இல்ல, மாதம் காட்டி.. நான் எப்ப கன்னடம் கத்துக்கிட்டு பல்லி விழும் பலன் எல்லாம் படிக்கிறது.. :)

டிஸ்கி :- இவை இன்று முகநூலில் நான் போட்ட ஸ்டேடஸ்கள். 


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...