எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 மார்ச், 2013

ஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில்

ஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில் :-

முகநூல் நண்பர் சதீஷ் பல்லாவரம் லயன்ஸ் க்ளப்பில் செயலாளராக இருக்கிறார். முகநூலில் என்னுடைய இலக்கியப் பங்களிப்பைப் பார்த்துவிட்டு ஆசிரியர் தினத்தன்று  உரையாற்ற அழைத்திருந்தார்.


 குரோம்பேட்டை ஸ்ரீமதி ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயாவில் ஆசிரியர் தினத்தில்  (செப்டம்பர் 5 )கிட்டத்தட்ட 110 ஆசிரியைகளுக்கு TEACHERS ROLE IN TODAYS ATMOSPHERE  - இன்றைய சூழலில் ஆசிரியர்களின் பங்கு -- என்ற தலைப்பில் உரையாற்றினேன்.
இந்தப் பள்ளியில் சிபிஎஸ்சி திட்டத்தின் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.  மிக நேர்த்தியாக இருந்தது பள்ளிக்கூடம். அதன் தலைமை ஆசிரியை சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.
அன்புத் தங்கை கயலுடன் சென்று வந்தேன்.  நிகழ்வில் பேசும்போது இயற்கையாய் எனக்கு கொஞ்சம் சபைக்கூச்சம் நடுவில் ஏற்பட்டுவிடும். அதைக் களையவே கயலுடன் சென்றேன். எப்போதும் ஒரு மாரல் சப்போர்ட் என்று கூட கூறலாம்.
நான் சென்னையில் பங்கேற்ற அனைத்து
நிகழ்வுகளிலும் கயலும் உடன் இருப்பார். அதற்காக கயலுக்கும் நன்றி.
மிகச் சிறப்பான உரையாக அது அமைந்தது. தலைமை ஆசிரியையும், சதீஷும் , லயன்ஸ் க்ளப் அங்கத்தினர்களும் பாராட்டினார்கள்.  ஏசி கார் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்று வீட்டில் கொண்டுவந்து விட்டார்கள். பொன்னாடையோடும்  ஒடிசியின் பெருமாளோடும்  வீடு வந்து சேர்ந்தேன்.
இன்றைய மாணவர்களுக்கான இணையப் பங்களிப்பு, இணையப் பயன்பாடு, நீதி நெறிகள், விளையாட்டு , கைத்தொழில் வகுப்புகள், யோகா, தியானம், சுற்றுச் சூழல் கல்வி , மாணவர்களுடனான ஆரோக்கியமான உறவு முறை, மாணவர்களைப் பண்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் பணி சம்பந்தமாக ஆசிரியர்களோடு நிறையப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பல்லாவரம் லயன்ஸ் க்ளப்புக்கு நன்றி.

4 கருத்துகள்:

  1. கலக்குறீங்க
    வாழ்த்துக்கள்
    கருணாகரன்
    சென்னை

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபால்

    நன்றி கருணாகரன். :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...