எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 மார்ச், 2013

ஜெ ஜெ கல்லூரிகளில் மகளிர் தின விழா(2013) வில் சிறப்பு விருந்தினராக. .

சுமார் 1200 மாணவிகள், 300 ஆசிரியைகள் கொண்ட ஜெ ஜெ குழுமக் கல்லூரிகள் அமைப்பில் ( புதுக்கோட்டை) விமன்ஸ் எம்பவர்மெண்ட் விங் ( WOMEN EMPOWERMENT WING) கின் அழைப்பின் பேரில் 102 வது சர்வதேச மகளிர் தின உரை வழங்க அழைப்பு வந்தது. என் கருத்துக்களைப் பல்வேறு தரப்பட்ட மகளிருடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. கற்பக விநாயகர் ட்ரஸ்டுக்கு நன்றி. 

கிட்டத்தட்ட எல்லாக் கல்லூரிகளிலும் 50 %, 60 % . ஏன் 90 % பெண்கள் பயில்கிறார்கள். பெண் சக்திக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்தக் கல்லூரிகளின் கூட்டமைப்பில் பேச வாய்ப்புக் கிடைத்தது மிகவும் சந்தோஷம் அளித்தது. நிர்வாகத்தில் கூட 50:50 தான். சிவம் பாதி சக்தி பாதி என்பது போல சுப்பிரமணியன் அவர்களும், கவிதா அவர்களும் இணைந்து செயல்படுகிறார்கள்.


இந்த விழாவில் நான் பேசுவதைக் கேட்க விருப்பம் கொண்டு என் அம்மாவும் அப்பாவும் அங்கே வந்திருந்தார்கள். அவர்களுக்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. நன்றி தாளாளர்களுக்கு. :)பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற அனுராதா. இவர்  நேற்று கௌரவிக்கப்பட்டார். இவ்வாறு தனித் திறன் பெற்ற பெண்களுக்கு ஜெ ஜெ கல்லூரிகளில் இலவசமாகக் கல்வியும் , ஹாஸ்டல் வசதியும் வழங்கப்படுகிறது. பாராட்டுக்கள் அனுராதாவுக்கு. 
அந்தப் பெண்ணுக்கு நான் என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தை வழங்கினேன். 


இதில்  5 கல்லூரிகளின் முதல்வர்களும் ( துணை முதல்வர் திருமதி சுதா, திருமதி அபிராம சுந்தரி, திருமதி சுமித்திரா, திருமதி அழகம்மை ) அறங்காவலர் திருமதி கவிதா சுப்பிரமணியன் அவர்களும் உரையாற்றினார்கள்.
நான் மகளிர்தினம் தோன்றிய விதம், புராண, இதிகாச காலத்திலிருந்து தற்காலம் வரை மகளிர் நிலை, யுத்தங்களில் பெண்களுக்கு நேரும் நிலைகள், பிறப்பிலிருந்து இறப்பு வரையான போராட்டங்கள், பதின்பருவப் பிரச்சனைகள், செல்போன், இணையப் பயன்பாடு, பெற்றோருடனான உறவுகள் , பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் முன்னேற்றம், பெண்ணியம் என்ற கண்ணியம், ரோல் மாடல்கள் ஏன் தேவை.என்பது  பற்றி உரையாற்றினேன். மிகச் சிறப்பான அனுபவமாக அது அமைந்தது. நல்ல ஃப்ளோ இருக்கிறது. அருமையான கருத்துக்களை சொன்னீங்க என்றார் கவிதா சுப்பிரமணியன். 

போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கினேன். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உங்க பேச்சு ஒரு புத்தகம் படித்ததற்கு ஒப்பாக சிறப்பாக இருந்தது என்று கூறினார் ஒரு முதல்வர். உங்க ரோல் மாடலா உங்க ஆசிரியை திருமதி எம். ஏ. சுசீலாம்மாவை குறிப்பிட்டீங்க. அது போல என்னுடைய ரோல் மாடலும் அவங்கதான் என்றார் அழகம்மை என்ற முதல்வர் ( ஜெ ஜெ காலேஜ் ஆஃப் எஜுகேஷன் ).
விமன் எம்பவர்மெண்ட் விங்கின் செயலாளர் திருமதி பரண்யா நன்றி கூறினார். 

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் மிக அதிகமாக கல்லூரிகள் இல்லாத புதுக்கோட்டையில் உருவான ஜெ ஜெ ஆர்ட்ஸ் & ஸயின்ஸ் காலேஜ் இன்று 5 கல்லூரிகளாகவும், ஒரு பள்ளிக்கூடமாகவும் பெருகி உள்ளது. இதில் தாளாளர் சுப்பிரமணியன் மற்றும் கவிதா சுப்பிரமணியனின் உழைப்பால் உருவானது என்றாலும் இதன் விதையை ஊன்றியவர் திருமதி கவிதா அவர்களின் தாயார் திருமதி சரோஜா ஆச்சி அவர்கள். 

அடிப்படையில் ஆசிரியை ஆன அவர்களின் பெருமுயற்சியாலேயே இந்தக் கல்வி நிறுவனங்கள் இப்படிப் பல்கிப் பெருகி உள்ளன. ஒரு பாவை விளக்குப் போல தன்னிடம் இருந்த கல்வி என்னும் ஒளி கொடுத்து நிறையப் பெண் குழந்தைகளுடைய வாழ்வெனும் தீபத்தை ஒளிவிடச் செய்த சரோஜா ஆச்சிக்கு இந்த மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்கள். 

வாழ்க வளமுடன் நலமுடன். !


”இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என் அனைத்து சகோதரிகளுக்கும். “

3 கருத்துகள்:

  1. அருமை:). மகிழ்ச்சி தேனம்மை.

    மகளிர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...