எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 டிசம்பர், 2012

கிளம்பவேண்டிய நேரம்

காலம் கடந்துவிட்டது
நீங்கள் கிளம்பவேண்டிய
நேரம் வந்துவிட்டது.
நொடிக்கணக்குடன் துல்லியமாய்.

ஒரு புத்தக வாசிப்பு
பாதிப்பக்கங்களில்
சுவாரசியம் தீர்க்காமல்
உங்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது.



உங்கள் புத்தகத்தையே
கடைசிப் பக்கம்வரை
வாசிக்க அனுமதிக்கப்
படுவதில்லை நீங்கள்.

நீங்கள் சேர்த்த மூட்டை
முடிச்சுக்கள் கட்டப்பட்டுவிட்டன.,
நீங்கள் உருவாக்கிய
எண்ணம் தவிர்த்து.

யாருக்கு சேர்க்கிறோம்
எதற்கு சேர்க்கிறோம்
யார் யாரோ எடுத்துக் கொண்டால்
என்ன செய்வது என பதட்டமடைகிறீர்கள்.

இது இன்னாருக்கு என
உயில் எழுத நினைக்கிறீர்கள்.
உங்கள் பேனாக்களில்
போதுமான மை இல்லை.

உங்கள் குழந்தைகளை நினைக்கிறீர்கள்.
கொள்கைகளை நினைக்கிறீர்கள்.
இயங்க முடியாமல் செய்த
இயக்கங்களை வெறுக்கிறீர்கள்.

கண்ணீரோடு கருணைமனு
அனுப்பிக் காத்திருக்கிறீர்கள்
மிச்சபக்கங்கள் முடிக்கும்வரையாவது
பொறுக்கச் சொல்லி..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 17,அக்டோபர் ,2011 திண்ணையில் வெளியானது.
 

7 கருத்துகள்:

  1. கண்ணீரோடு கருணைமனு
    அனுப்பிக் காத்திருக்கிறீர்கள்
    மிச்சபக்கங்கள் முடிக்கும்வரையாவது
    பொறுக்கச் சொல்லி..

    உங்கள் புத்தகத்தையே
    கடைசிப் பக்கம்வரை
    வாசிக்க அனுமதிக்கப்
    படுவதில்லை நீங்கள்..

    சுமையான பகிர்வு ..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி!

    அருமையான கவிதை! நெஞ்சத்தை தொட்டது.

    இன்று உங்களுடைய கவிதை வலைச்சரத்தில் பகிரப்பட்டுள்ளது. அங்கு பார்த்துவிட்டுதான் வந்தேன். அற்புதம் நிறைய எழுதி இருக்கீங்க, படிக்க நிறையவே இருக்கிறது.

    உங்களை பின்தொடர்கிறேன், முடிந்தவரை எல்லாவற்றையும் படிக்கிறேன்.

    உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது பக்கமும் வந்துபோகவும்.
    http://semmalai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. உலக வாழ்வின் தத்துவத்தை வெகுஅழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    இந்த தங்களின் படைப்பு இன்று 28.12.2012 வலைச்சரத்தில் ஏற்றி பாராட்டப்பட்டுள்ளது.

    அதற்கும் சேர்த்து என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள். அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  4. ஏ க்ளாஸ்.. பின்னிட்டீங்க தேனக்கா. மிகவும் ரசித்து வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராஜி

    நன்றி செம்மலை ஆகாஷ்

    நன்றி புதுகைத் தென்றல்

    நன்றி கோபால் சார்

    நன்றி சாந்தி

    நன்றி மணவாளன் சார்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...