எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஐந்தாவது வர்ணத்தின் முன்னேற்றம்..

அம்பேத்கார் மற்றும் பெரியார் இந்த இரு பெயர்கள் இல்லாமல் நாம் பெண்களின் விடுதலை பற்றிப் பேச முடியாது. வர்ணாசிர தர்மங்களை இறுக்கிப் பிடித்திருந்த நம் நாட்டில் (ஐந்தாவது வர்ணமாக குறிப்பிடப்படாவிட்டாலும்) பெண் இனம் என்ற ஒன்றுதான் அந்த ஐந்தாவது வர்ணம் என்று சொல்லலாம்.

மிக முன்னேறிய நாடுகளில் கூட மனைவி அடிமை மாதிரி நடத்தப்படுவதைக் காண்கிறோம். பெண்கள் மீது வன்முறை, பாலியல் துஷ்பிரயோகங்கள், குடும்ப வன்முறை, குழந்தைத் தொழிலாளிகள், கொத்தடிமைகள், பாலியல் தொழிலாளிகள் என்று பலவிதத்திலும் இன்னல்படும் இனம் பெண்ணினம். சொல்லப்போனால் எல்லா வர்ணத்தின் ஆண்களும் தங்களின் கீழானதாகக் கருதும் இனம் பெண்ணினம்தான். அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆண்கள் கூட தங்கள் மனைவி தங்களுக்கு அடங்கி ஒடுங்கிப் போக வேண்டும் என எண்ணுகிறார்கள். சீதை கண்ணகி, நளாயினி இப்படித்தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது சமூகம்.



அடக்கி வைக்கப்பட்டும் அடங்கிக் கிடந்தும் இருந்த இந்தச் சூழலில் பெரியார் மற்றும் அம்பேத்கார் ஆகியோரின் பெருமுயற்சியில் பெண்களுக்கு சிறிது சுதந்திரமாக சுவாசிக்கவும் முடிந்தது.

அம்பேத்காரின் 120 ஆவது பிறந்த நாளில் ஏப்ரல் 14 அன்று சென்னை அரும்பாக்கம் பள்ளியில் அட்சயா ஃஃபவுண்டேஷன் சார்பாக உரையாற்ற அழைப்பு வந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்காரைப் பற்றி நிறைய சொல்லலாம். மகர் இனத்தில் பிறந்தவர். சதுர் வர்ணத்தை எதிர்த்துப் போராடியவர். மிகக் குறிப்பாக பெண்களுக்காகப் பரிந்து பேசியவர். பெண் கல்வி, பெண் விடுதலைக்காகப் போராடியவர்.

கூடு என்ற அமைப்பு மதுரையில் பெண்கள் வாசிப்பு அரங்கம் ஒன்றை 20, 30 பெண்களோடு நடத்துகிறது. பெண்கள் தங்களைப் பற்றிய விழிப்புணர்வு பெற தங்கள் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டம் அது. அந்த அமைப்பைச் சேர்ந்த (புதுக்கோட்டை பக்கத்தில் மெய்வழிச்சாலை என்ற இடத்தைச் சேர்ந்த ) சாலை செல்வம் என்ற பெண்மணி “அம்பேத்காரும் பெண் விடுதலையும்” என்ற தலைப்பில் தங்கள் வாசிப்பு அரங்கத்தில் நடைபெற்ற விரிவான அலசல்களைப் பகிர்ந்து கொண்டார்.

”இந்துமதம் எப்படித் தலித்துக்களைப் பார்க்கின்றதோ அது போல பெண்களையும் பார்க்கின்றது. பெண்களையும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கின்றது. சம உரிமை கொடுப்பதேயில்லை. தீட்டு என்றும் கற்பு என்றும் கண்ணுக்குத் தெரியாத கோடுகளைப் போட்டுப் பிரித்து வைக்கின்றது. ஆண் உயர்ந்தவன் என்றும் பெண் தாழ்ந்தவள் என்றும் பிறப்பிலிருந்தே கற்பிக்கப்படுகின்றது. ஆணுக்குப் பெண் அடிமை என்று போதிக்கப்படுகின்றது.

பெண் கல்வி இன்றும் சில இடங்களில் மறுக்கப்படுகின்றது. இவற்றை எதிர்க்க இணைந்து போராடுதல் வேண்டும். ஜாதியைப் போலக் கற்பு, தீட்டு என்பதெல்லாம் அடிமைப்படுத்தவே உருவானது. பெண் பேச்சுரிமை, பெண் கல்வி, பெண் விடுதலை என்பதெல்லாம் இன்னும் தேவையாய்த்தானிருக்கிறது.”  என்று கூறினார்.

”ஆண்களும் பெண்களும் வார்த்தைகளும்” என்று ஒரு கவிதையை என் வலைத்தளத்தில் பகிர்ந்தபோது மாறுபட்ட கருத்துக்களும் முன் வந்தன. அதில் ஆண்கள் சந்திக்கும்போது ஒன்றாகக் குடித்துவிட்டு நடந்து கொள்ளும் முறைகளும் பெண்கள் ஒன்றாக சந்திக்கும் போது நடந்து கொள்ளும் முறைகளும் பற்றிக் கவிதையாய் எழுதி இருந்தேன். அதைப் பற்றிய பின்னூட்டத்தில் ஒருவர் ”நீங்கள் பெண்களைத் தேவதையாய் விவரிக்கின்றீர்கள். ஆண்களைக் குடிகாரர்களாகச் சித்தரிக்கின்றீர்கள். குடிக்காத நல்ல ஆண்களை எனக்குத் தெரியும். அதேபோல் சிகரெட் பிடிக்கும் குடிக்கும் பெண்களையும் எனக்குத்தெரியும்.. பெண்களைப் பற்றிய கனவுலகத்திலேயே இருக்காமல் நீங்கள் யதார்த்தத்துக்கு வந்தால் நல்லது ”என விமர்சித்து இருந்தார்.

ஒரு கேள்விக்கு வைத்துக் கொள்வோம். இன்று டாஸ்மாக்கில் அல்லது மற்ற தனியார் ஸ்டார் ஹோட்டல்களில் குடிப்பதில் யாரை நீங்கள் அதிகம் காண முடியும். ஆண்களைத்தானே. ஒரு சாதாரண கிராமத்தில் கூட குடித்துவிட்டு மனைவியைப் பொது இடத்தில் அடிக்கும் ஆணை இன்றும் காணமுடியும்தானே.

ஆனால் நான் கண்களைக் கட்டிக் கொண்ட காந்தாரி இல்லை. பெண்களும் குறிப்பாக சாஃப்ட்வேரில் பணிபுரியும் பெண்களும் குடிப்பதையும் சிகரெட் புகைப்பதையும் கேள்வியுறுகிறேன்.அது அவர்கள் உடல்நலனுக்குப் பெருங்கேடு. குழந்தைப் பேற்றையும், குழந்தையையும் பாதிக்கும். கருவுறுதல் சிரமம்.

ஆண்கள் குடித்தால் சரி, பெண்கள் குடித்தால் தப்பு என பாரபட்சமாகப் பார்க்கும் சமூகத்தின் போக்கைத்தான் எதிர்க்கிறேன். கெடுதல் என்றால் இரு பாலினருக்கும்தான். நாங்கள் மட்டும் எந்தக் கெடுதலையும் செய்ய அனுமதி பெற்றவர்கள். பெண்களுக்கு அந்த உரிமை இல்லை என்ற ஆண்களின் எண்ணத்துக்கு எதிர்ப்புரட்சி செய்யவே பெண்கள் இவ்வாறு செய்கின்றார்களோ என்று கேட்டுத்தான் பார்க்கவேண்டும். ஆண் குடித்தால் மன அழுத்தம் தீரக் குடிக்கிறான் என்ற சால்ஜாப்பையும் கொஞ்சம் ஆராய வேண்டும்.

என் மேல் வந்த அடுத்த குற்றச்சாட்டு , பெண்களை ஆண்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்கின்றீர்களே.. இன்றைக்கு குடும்ப நலக் கோர்ட்டில் இருக்கும் அநேக வழக்குகள் குடும்ப வன்முறை என்று சொல்லி தனக்குப் பிடிக்காத கணவனைப் பழி வாங்க பெண்கள் போட்ட வழக்குகள் என்று சொல்லி அதிரடித்தார் ஒரு முகநூல் நண்பர். ’இன்றைக்குப் பெண்கள் கொடுமைதான் தாங்க முடியவில்லை.சின்ன சலசலப்பு என்றாலும் பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கோ அல்லது குடும்ப நல கோர்ட்டுக்கோ போய்விடுகிறார்கள். சின்னப் பிரச்சனைகளைப் பெரிதாக்கி கணவனை வரதட்சணை வழக்கிலோ அல்லது குடும்ப வன்கொடுமைச் சட்டத்திலோ ( அடித்தார் என்று கூறி) வழக்குப் பதிவு செய்து ரொம்பக் கொடுமைப் படுத்துகிறார்கள். இந்த மாதிரி ஒரு பெண் வழக்கு கொடுத்தால் அந்தப் பெண்ணின் மாமனார், மாமியார், கணவர், அவர் கூடப்பிறந்தவர்க்ளையும் அந்த வழக்கில் கைது செய்து ஜாமீனில் வெளிவரமுடியாத அளவு சிறையில் அடைக்கலாம். பெண்கள் கொடுமைப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும் என்று கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் பெண்கள் ஆண்களைக் கொடுமைப்படுத்தப் பயன்படுகின்றது. இன்னும் குடும்ப நலக் கோர்ட்டுகளில் பதியப்படும் வழக்குகளில் ஆணின் பங்கு கேட்கப்படுவதேயில்லை.பெண் சொல்வதுதான் பதியப்பட்டு உண்மை எனக் கருதப்படுகின்றது. அதன்படியே வழக்குகளும் செல்கின்றன. ஒரு ஆணுக்கு தன் பக்கத்து நியாயத்தைச் சொல்லக் கூட இடமில்லை. நன்றாக இருந்த என் குடும்பம் இப்படிப் பிரிந்து விட்டது. என் மனைவிக்கு யாரோ இந்த மாதிரி தூண்டி செயல்படச் செய்கின்றார்கள்.இந்தக்கொடுமைகளையும் உங்கள் எழுத்துக்களில் பதிவு செய்யுங்கள்’ எனப் புலம்பித் தீர்த்தார் அந்த முகநூல் நண்பர்.

அவரின் பங்கு நியாயத்தைக் கேட்ட அதே சமயம் ஒன்று உணர்ந்து கொண்டேன் அவர் இன்னும் தன் மனைவி என்பவள் தன்னுடைய அடிமை என்று எண்ணிக் கொண்டிருப்பதை. அவள் ஒரு உயிர் , ஜீவன் என்று கருதியிருந்தாரேயானால் இந்தச் சண்டை, சச்சரவுகள் வந்தே இருக்காது.

ஒரு பெண் தன் கணவனிடம் மிக முக்கியமாக பொருளாதாரப் பாதுகாப்பை எதிர்பார்ப்பாள். கணவன் அழகாக இருக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். தன் சொல்லைக் கேட்டு குடும்பத்துக்காக சேமிக்க வேண்டும். என்றைக்கும் பொருளாதாரத் தன்னிறைவுடன் குடும்பம் திகழ வேண்டும் என்பதுதான் ஒரு மனைவியின் சாதாரண எதிர்பார்ப்பு.

அந்த எதிர்பார்ப்பு தரை மட்டமாகும்போதும் மேலும் குழப்பங்களாலும் வேண்டாத நடவடிக்கைகளாலும், குடிப்பழக்கத்தாலும், அடுத்து அடுத்து வியாபார நஷ்டங்களை கணவர் ஏற்படுத்துவதாலும் , சண்டை சச்சரவுகளாலும் தாங்கமுடியாத பெண் குடும்ப நல கோர்ட்டை அணுகுகிறாள்.

சில கேஸ்களில் திருமணம் ஆனவுடனே பிரிவு ஏற்படுகின்றது. அந்த ஆணின் மேல், ஆண் தன்மையின் மேல் அவளுக்கு நம்பிக்கையின்மை ஏற்படும்போது. தற்போது நிறைய விவாகரத்து கேஸ்கள் இந்த விஷயமாக நடைபெறுகின்றன.

முன்பெல்லாம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று பொறுத்துப் போன மாதிரி இன்றைய பெண்கள் இருக்கத் தயாரில்லை. அவர்கள் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கின்றார்கள், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கின்றார்கள். அவர்களுக்கென்றும் வாழும் முறையிலும், பாலியல் இன்பங்களிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் கையாளும் ஆண் கணவனாகக் கிடைக்காவிட்டால் அவர்கள் உடனடியாக அந்த பந்தத்தை விட்டு வெளியேற விவாகரத்துக் கோருகிறார்கள்.

சில கேஸ்களில் ஆண்மகனே அல்ல என்று விவாகரத்து செய்யப்பட்ட ஆண் அடுத்த திருமணம் ஆகி சில குழந்தைகளைப் பெறுகிறார். அந்தப் பெண்ணும் அடுத்த திருமணத்தில் சில குழந்தைகளைப் பெறுகிறார். பொதுவாக நோக்கினால் இந்த விஷயத்தில் மன ஒப்புமை அற்றதே காரணம் என யூகிக்க முடியும்.

சம்பாதிக்கும் பெண்களுக்கு இன்றைய அப்பா அம்மாக்களும், கணவர்களும் கொஞ்சம் பயப்படச் செய்கின்றார்கள்.திருமணம் செய்து கொள்ளத் தயங்கும் பெண்கள் அந்த திருமண பந்தத்திலிருந்து வெளியேறத் துளியும் தயங்குவதே இல்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

அடக்கப்பட்ட வர்ணத்து மக்களின் எழுச்சி எப்படி ஒரு அதிர்ச்சியைத் தோற்றுவித்திருக்கிறதோ அதே போல பெண்களின் எழுச்சியும் ஒரு அதிர்ச்சியைத் தோற்றுவித்திருக்கிறது. அவர்கள் தங்கள் உரிமைகள் என்று பேசும்போதெல்லாம் அவர்களின் கடமைகள் பற்றிப் பேசி அடக்கி விடுகின்றோம்.

நிச்சயமாய் ஒரு நாள் அவர்கள் தன்னிறைவு பெற்று தங்கள் சுதந்திரம் யாராலும் நிர்ணயிக்கப்படாது என்ற தெளிவு பெறும் போது இந்தச் சமுதாயத்தின் மிக நல்ல மாற்றமாக அது அமையும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.


8 கருத்துகள்:

  1. //நிச்சயமாய் ஒரு நாள் அவர்கள் தன்னிறைவு பெற்று தங்கள் சுதந்திரம் யாராலும் நிர்ணயிக்கப்படாது என்ற தெளிவு பெறும் போது இந்தச் சமுதாயத்தின் மிக நல்ல மாற்றமாக அது அமையும்.//

    ரொம்ப நல்லாச் சொன்னீங்க தேனக்கா. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. யார் தவறு செய்தாலும், தவறு தவறு தான்...
    நீங்கள் யூகித்த கருத்துகளுக்கேற்ப நல்ல சமுதாயம் மலரட்டும்...

    பதிலளிநீக்கு
  3. The person who is self made will never think of bowing to anybody whenever he is asked to surrender his self respect including his wife rather he will definitely think of going along to face the world and live independently leaving everything including the wife who only married him for his degrees and jobs without caring him and his health.

    Kodithu, ellavaritrulum Kodiyathu anbu illa pendir, athaninum kodiyathu avar kaiyal unbathu thane entru munbe padalaga iruppathai marakka vendame Thenammai. Appadi anbu illa pendirai neengal eppadi avar thanakku adimai akka parpathu therikirathu entru solkireergal. Avalukku adimaiyagal viduvithu kollathan ninaipar.

    ஒரு பெண் தன் கணவனிடம் மிக முக்கியமாக பொருளாதாரப் பாதுகாப்பை எதிர்பார்ப்பாள். கணவன் அழகாக இருக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். தன் சொல்லைக் கேட்டு குடும்பத்துக்காக சேமிக்க வேண்டும். என்றைக்கும் பொருளாதாரத் தன்னிறைவுடன் குடும்பம் திகழ வேண்டும் என்பதுதான் ஒரு மனைவியின் சாதாரண எதிர்பார்ப்பு. (Ippothu pengalukkum sotthurimai vanthaki vittathu. Athanal anakku nigaraga avargalin thai veetilum sotthu kidaikkum. kanavan pidikkavillai entral than izhtam pola vazhalaam, eppadi venumalum than izhtapadi irukkalam anaal kanavanai thavaraka solla entha urimaiyum illai ethuvaraikkum pennin udalukkum uyirukkum vazhvirkum theengu erpadatha varai).

    Athai antha pennum seiya mudiyume kanavanidam en ethirparka vendum. Inguthan aval innum thannai thane allathu oru aanai pola oru kudumba sumaiyai sumakka virumbamal kanavanidame avanathu vayathu 50 anaan pirakum ethirparka vendum thaan sambathikkum pothum avanukku velai illai entra pirakum. Adimaiyaga parthu irunthal veliyurukku sentru kudumpathirgaga entha aanum uzhaikka mattan. Anbu irunthal mattume uyiraiyum koduthu antha anbana uyirai nalla padiyaga vazha vaikka ninaipan. Panam koduthal adimaiyaga intha ulagil innum pengal iruppathaithan uzhaikkamal vazha ninaikkum Thina Tanthi paperil varunkira "Hotel " " Azhakikal Pidipattargal " enpathu.

    பதிலளிநீக்கு
  4. There are many ladies lives without marriage even today. Thee is no binding for the ladies to marry a man. If they decide to live alone without marriage no one can compel them to get married and face the difficulties. The men also live like that so that the mother earth's burden will get reduced. One man in every five person in the world is Indian. What does it shows ?. Even the films which are made on love stories only get succeeded in India, other films made on other themes are mostly face loss. So there is an urgent need to bring the population also. Ladies economic freedom is seems to be only way to make them live freely and get the population reduced. Let it happen in the near future.

    பதிலளிநீக்கு
  5. //அவரின் பங்கு நியாயத்தைக் கேட்ட அதே சமயம் ஒன்று உணர்ந்து கொண்டேன் அவர் இன்னும் தன் மனைவி என்பவள் தன்னுடைய அடிமை என்று எண்ணிக் கொண்டிருப்பதை. அவள் ஒரு உயிர் , ஜீவன் என்று கருதியிருந்தாரேயானால் இந்தச் சண்டை, சச்சரவுகள் வந்தே இருக்காது.//

    அப்ப அவருக்கு இது தேவை தான் என்கிறீர்கள் தவிற, பிரசினையை பற்றி நீங்கள் கவலைப்படவில்லை.

    //ஒரு பெண் தன் கணவனிடம் மிக முக்கியமாக பொருளாதாரப் பாதுகாப்பை எதிர்பார்ப்பாள். கணவன் அழகாக இருக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். தன் சொல்லைக் கேட்டு குடும்பத்துக்காக சேமிக்க வேண்டும். என்றைக்கும் பொருளாதாரத் தன்னிறைவுடன் குடும்பம் திகழ வேண்டும் என்பதுதான் ஒரு மனைவியின் சாதாரண எதிர்பார்ப்பு.//

    எல்லா மனைவிகளுல் இப்படித்தான் எதிர்பார்ப்பார்கள் என்பது சாத்தியமில்லாதது. என் நண்பன் ஒருவன் வெளிநாட்டில் சம்பாதித்து மனைவிக்கு அனுப்பி வைத்தான். அவளை ஒரு வீட்டு மனை வாங்கி அவள் பெயரில் பதியசொல்ல சொன்னான். ஆனால் அவன் மனைவியோ, மனையை வாங்கி தன் தம்பி பெயரில் பதிந்தாள். என்ன செய்ய சொல்லுங்கள்?

    ஆனால் ஒன்று. இன்று பெரும்பாலும் பெண்ணுரிமை என்பது குடும்பங்களை சிதைப்பதில் தான் 'அதிகம்' வெற்றி பெருகின்றன.

    பதிலளிநீக்கு
  6. //பெண்களின் எழுச்சியும் ஒரு அதிர்ச்சியைத் தோற்றுவித்திருக்கிறது. அவர்கள் தங்கள் உரிமைகள் என்று பேசும்போதெல்லாம் அவர்களின் கடமைகள் பற்றிப் பேசி அடக்கி விடுகின்றோம்.//

    மிக உண்மை.

    பதிலளிநீக்கு
  7. நன்றி சாரல்

    நன்றி தனபாலன்

    மணவாளன்..????

    நன்றி சீனு...ஹ்ம்ம்

    நன்றி ஹுசைனம்மா..

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...