வெள்ளி, 30 நவம்பர், 2012

மழை.

புலிக்குட்டிகளாய்
உருண்டு புரள்கிறது
மாநகரச் சாலைப்பள்ளத்தில்
மழைநீர்.

குளித்த எருமைகளாய்
அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில்
கட்டிக்கிடக்கின்றன வண்டிகள்.

சிறிதாய்ப் பெய்த மழையில்
மிதக்கும் நகரம் ஆகிறது
மாநகரம்.


கார் வைத்திருப்பவர்களைக்
கப்பல் வைத்திருப்பவர்களாகவும்.,
வண்டி வைத்திருப்பவர்களை
ஓடக்காரர்களாகவும்
ஆக்குகிறது மழை.

அடித்து அடித்து
மாநகரத்தைச் சலவை
செய்துகொண்டிருக்கிறது மழை..

டிஸ்கி:- இந்தக் கவிதை 30, அக்டோபர் , 2011 திண்ணையில் வெளியானது.


11 கருத்துகள் :

வல்லிசிம்ஹன் சொன்னது…

வெகு அருமை. கப்பலும் படகுமானால் தூக்கிப் போடாது. பள்ளங்களில் நதி யும் நதிமேல் படகுகளும் மிதப்பதே சென்னைக்கு அழகு:(

தொழிற்களம் குழு சொன்னது…

உங்களின் மழை பற்றிய கவிதை அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லா இருக்குங்க...

Manavalan A. சொன்னது…

சிறிதாய்ப் பெய்த மழையில்
மிதக்கும் நகரம் ஆகிறது
மாநகரம்.

- Kasadugalaiyum, kazhivugalaiyum serthukkondu.

அடித்து அடித்து
மாநகரத்தைச் சலவை
செய்துகொண்டிருக்கிறது மழை..
Mika arumai.

Manavalan A. சொன்னது…

Congrats Thenammai ! for crossing the number of visitors to your blog above 90,000 now by the Tamil viewers from 113 countries of the world.
My best wishes to you to post the best articles in the coming days.

sury Siva சொன்னது…

பங்குச்சந்தையில் பெண்கள் அதுவும் குடும்பப்பெண்கள் பங்கெடுத்துக்கொள்வது பற்றிய உங்கள் பதிவினைப்பார்க்க இயலவில்லை.
மழை பதிவு தான் வருகிறது.
எனக்குத் தெரிந்த குடும்பப்பெண் பி.காம் படித்தவள், ஸி.ஏ. யில் இரண்டொரு பரீட்சைகள் தேறியிருக்கிறாள். அதற்குப்பிறகு
குடும்பப்பொறுப்பு காரணமாக சீ. ஏ வை த் தொடர இயலவில்லை.

பங்குச் சந்தை வணிகத்தில் போடு போடு என்று போடுகிறாள்.

ஒன்று . பேராசை கூடாது.
ஒரு ஸ்டாக் மேலே ஏன் போகிறது, கீழே ஏன் வருகிறது என்பதற்கு
பதினின்ரண்டு காமன் டினாமினேட்டர்கள் இருக்கின்றனர்.
இத்தனையும் மீறி சில பங்குகள் தடாலடியாக மேலே செல்கின்றன.
இதெல்லாம் இன்ஸைடர் கூத்துகளே.
இவைகளைக் கண்டுபிடித்து பி.எஸ்.ஏ. சந்தை யே இவர்களை தள்ளி வைத்திருக்கிறது.
பிரமிட் சாயிரா இவைகளில் ஒன்று.

பங்குச் சந்தையில் போட பணம் மட்டும் போதாது. நேரம் வேண்டும். நுண்ணிய அறிவு வேண்டும்.
டெக்னிகல் சார்டுகளை புரிந்துகொள்ளும் திறமை வேண்டும்.
அவ்வளவே.
அதிருஷ்டம் வேண்டும் என்பார்கள். எனக்கு அதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.

பங்குச்சந்தை ஆலோசனை கூறுவது அந்த ஏற்ற இறக்கங்களை அறிவு பூர்வமாக பல பெண்கள் அனலைஸ்
செய்வது குறித்து வியந்திருக்கிறேன்.

நீங்கள் எழுதியது என்ன என்று தெரியவில்லை.
இருந்தாலும், பெண்கள் குடும்பப்பெண்கள் பங்குச்சந்தையில் ஈடுபடவேண்டாம் என சொல்கிறீர்களோ என நினைத்தே
இதை எழுதுகிறேன்.

சுப்பு ரத்தினம்.

Seeni சொன்னது…

nalla irukku....

Pattu Raj சொன்னது…

இனிமேல் மழை பெய்தால் இந்த கவிதை தான் மனசில் ஓடும்.

மாதேவி சொன்னது…

கப்பல் ,ஓடம் எல்லாம் மிதக்கும் நகரம்... நன்றாகவே இருக்கின்றது.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வல்லிசிக்ஹன்

நன்றி தொழிற்களம் குழு

நன்றி தனபாலன்

நன்றி மணவாளன்

நன்றி சுப்பு சார்.. அந்த இடுகை பின்னாளில் வரும்.:) பெண்கள் ஈடுபடணும்னுதான் சொல்லி இருக்கேன். :0

நன்றி சீனி

நன்றி பட்டுராஜ்

நன்றி மாதேவி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...