எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 நவம்பர், 2012

குங்குமம் தோழியில் குட்டி ராஜாக்களும் சுட்டி தேவதைகளும்.

1. வளர்ந்து கொண்டே
போகிறாள் மகள்
குழந்தையாகிறேன் நான்.

2. அட்டைப் பெட்டியில் நீ
விளையாடிய பொம்மைகளை
அடுக்குகிறேன்.
நீ எழுந்ததும் உயிர்பெறும்
ஆசையில் காத்திருக்கின்றன அவை.


3.குழந்தையைப்
பலர் கொஞ்சுகிறார்கள்.
தனியாக அது
கொஞ்சிக் கொண்டிருக்கிறது
தன் பொம்மையை.

4.வண்டிச் சத்தம்
கேட்கும்போதெல்லாம்
அழுதாயாமே என்னைத்தேடி
தூங்கும் உன் கன்னத்தில்
உப்பு ரோடுகள்.

5. அழகு இறக்கை விரித்தபடி
என் கைப்பூவில் தொற்றி அமர்கிறது
எதிர்வீட்டுக் குழந்தை
வண்ணத்துப் பூச்சியாய்.

டிஸ்கி:- இந்தக் குழந்தைக் கவிதைகள் 2012 குங்குமம் தோழியில்  வெளியானவை.


10 கருத்துகள்:

  1. அழகான குட்டிக் குட்டி கவிதைகள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள்


    குழந்தைகளுக்கான ஓவிய போட்டி எனது வலைப்பூவில் kids-drawing-contest-win-cash-prizes more details:

    http://en-iniyaillam.blogspot.com/2012/11/kids-drawing-contest-win-cash-prizes.html

    பதிலளிநீக்கு
  3. குழந்தைகள் என்றாலே அழகு அதுவும் குழந்தை கவிதை அதைவிட அழகு

    பதிலளிநீக்கு
  4. தோழியில் ஏற்கனவே பார்த்து ரசித்தவை:)! அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. குழந்தையைப்
    பலர் கொஞ்சுகிறார்கள்.
    தனியாக அது
    கொஞ்சிக் கொண்டிருக்கிறது
    தன் பொம்மையை.
    - Kuzhanthai ullam enbathu athuthaanoo ? Athanaal thaan, thaan ninaithathaiyo allathu mattravar mun susagam intri pesubavarai kuzhanthai pola pesaatheergal engiraangaloo ?

    Arumai ellame.

    பதிலளிநீக்கு
  6. நன்றி சாரல்

    நன்றி தனபால்

    நன்றி கோவை2தில்லி

    நன்றி சிநேகிதி

    நன்றி தொழிற்களம்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி மணவாளன்

    நன்றி விஜி

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...