எனது நூல்கள்.

திங்கள், 15 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் விமர்சனம் திருச்சி தினமலர் பதிப்பில்..

திருச்சி தினமலர் பதிப்பில் சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் 2012 மார்ச் 8 மகளிர் தினத்தன்று வெளியாகி உள்ளது. அதில் சுபா என்பவர் மிக அழகான விமர்சனம் அளித்துள்ளார். அதைப் படித்துத்தான் சிதம்பரம் மகளிர் கல்லூரியில் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டிருந்தார்கள். நான் அப்போது சென்னையில் இருந்ததால் விமர்சனம் வந்தது தெரியவில்லை.
எனவே சிதம்பரம் மகளிர் கல்லூரியின் தாளாளருக்கு ( அவர் யார் என்றே தெரியாமல் ) அந்தக் கடிதத்தின் நகலை அனுப்பி வைக்கக் கோரினேன். அவர் அனுப்பி வைத்த நகல் இது. பின் அலுவலகத்தில் விசாரித்தபோது லோகநாதன் என்பவர் எங்கள் கல்லூரியின் தாளாளர் என்றார்கள். தன் பணிகளுக்கிடையிலும் மிகப் பெரிய பதவி பொறுப்புக்களில் இருந்தும் என் வேண்டுகோளுக்கிணங்க அதை அனுப்பி வைத்த தாளாளர் லோகநாதன் அவர்களுக்கு நன்றி. திருச்சி தினமலருக்கும் விமர்சகர் சுபாவுக்கும் நன்றி.5 கருத்துகள் :

அமைதிச்சாரல் சொன்னது…

இன்னும் பல சிகரங்களை எட்ட வாழ்த்துகள் தேனக்கா..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் சந்தோசம்... வாழ்த்துக்கள்...

சே. குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சாரல்

நன்றி தனபால்

நன்றி குமார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...