திங்கள், 1 அக்டோபர், 2012

நட்பு அழைப்பு

கோமாதாக்கள் கூட்டுறவு
சங்கங்களுக்கு பால் கறக்கின்றன.

கோவர்த்தனகிரிகள் கூறாகி
கிரைண்டர் கல்லும்., தரையுமாய்.

யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில்
கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு.


வெண்ணை தின்னும் ஒபீஸ்
கண்ணன்கள் கான்வெண்ட் பார்க்குகளில்

கோபர்களும் கோபிகைகளும்
கணினி மையங்களில் கருகும் கடலையில்.

கலியுகக் கண்ணன் முகநூல் ராதையுடன்
நட்புத் தேடி ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்டில்.

டிஸ்கி. 1.  :- இந்தக் கவிதை செப்டம்பர் 2011 குங்குமத்தில் வெளியானது.

டிஸ்கி 2. :- இந்தக் கவிதை 12 செப்டம்பர் 2011 திண்ணையில் வெளியானது.5 கருத்துகள் :

சுரேகா சொன்னது…

அபாரமான கவிதை...!!

கிரானைட் பிரச்னை வருவதற்கு முன்னரே எழுதியிருக்கிறீர்கள். அதுதான்..
கலைஞர்கள் , கவிஞர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறுகிறார்கள்.

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

நல்ல கவிதை...பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு வரியும் வெவ்வேறு சிந்தனைகள்... அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேகா.. உண்மை..:)

நன்றி பிரியா

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...