எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 ஏப்ரல், 2012

சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்..

சிகண்டியாய் இருப்பது
எளிதல்ல..
கொஞ்சம் குத்தும்
பார்வைகள் சேமிக்க வேண்டும்.
ஊசிகளில் உறைந்து
கிடப்பவனிடம் திரும்ப செலுத்த.

வெளுப்புக் கிரீமும்
வெண்மைப் பல்லும்
மயக்கம் தருகிறது
விடிந்ததும் விலகி
வெருண்டு செல்பவனுக்கு.


உடலைப் பெண்ணாய்
உணர்வை ஆணாய்ப்
படைத்தவனுக்கும் இருக்கிறது
ஹார்மோனல் இம்பாலன்ஸ்.

வணக்கத்திற்குரிய
கோலங்களில் நின்றுகொண்டு
பிறப்பவைகளை
அலங்கோலப்படுத்துவதில் தீர்கிறது
அவனது கலியுகம்.

கோபத்தை எல்லாம்
சேமித்து சூரியனாய்
எரிவதில் தீர்வதில்லை
சடையனின் வெண்சாம்பலும்.,
மோஹினி அமிர்தமும்..

வாழ்ந்தே கிடப்பது.,
எல்லா வினைகளையும்
அனுபவித்தே தீர்ப்பது
இதுவே ஆயுதம்தான்
இந்த ஜென்மம் முழுமைக்கும்.

யாரையும் தாக்காமல்
இடப்பட்டவைகளைக்
கடந்து வெற்றிக்கொடி
கட்டுவதிலே இருக்கிறது
வாழ்விற்குண்டான பலன்..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 1, 2011 உயிரோசையில் வெளிவந்தது. 

9 கருத்துகள்:

  1. நல்ல கவிதை, ரசித்தேன்..நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  2. KAVITHAI NANDRAGA IRUKKIRATHU

    VARTHAIGAL ARUVAIPOLA VIZUGIRATHU

    CONGRATS
    KARUNAKARAN

    பதிலளிநீக்கு
  3. //உடலைப் பெண்ணாய்
    உணர்வை ஆணாய்ப்
    படைத்தவனுக்கும் இருக்கிறது
    ஹார்மோனல் இம்பாலன்ஸ்//

    கோபத்தைக் கொப்பளிக்கும் வரிகள்!

    பதிலளிநீக்கு
  4. //////வாழ்ந்தே கிடப்பது.,
    எல்லா வினைகளையும்
    அனுபவித்தே தீர்ப்பது
    இதுவே ஆயுதம்தான்
    இந்த ஜென்மம் முழுமைக்கும்//////

    அருமையான, ஆழமான வரிகள் அக்கா ..!

    பதிலளிநீக்கு
  5. தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

    http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  6. நன்றி குமரன்

    நன்றி கருணாகரன்

    நன்றி அப்பாதுரை

    நன்றி கோபால் சார்

    நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி அப்பாதுரை

    நன்றி கணேஷ்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...