புதன், 25 ஏப்ரல், 2012

அந்த இரவு..

அந்த இரவு மிகவும்
நேசிப்புக்கு உரியதாய் இருந்தது.

அவள் ஆடைகளைக் கழற்றாமலேயே
நிர்வாணமாகிக் கொண்டிருந்தாள்.

பூட்டிய பொக்கிஷ அறையை
வார்த்தைச் சாவியால் திறந்திருந்தாள்.

சுமக்க முடியா லட்சம் பொன்னை
பாதாள அறைகளில் அடைத்து வைத்திருந்தாள்.


ஈர இடுக்கு மூலைகளில்
சிலந்தி வலைகள் படிந்து கிடந்தன.

வௌவால் முடை நாற்றமும்
எலிகளின் சிறுநீரும் கூட.

களிம்பு படாத கட்டிகளைக்
கைகள் நிறைய அள்ளி வைத்தாள்.

புஷ்பிக்காத பெண்மை பற்றி.,
கசிந்து பெருகாத முலைகள் பற்றி.,

தவறான ப்ரயோகங்களால்
காயப்பட்டது பற்றி.,

ரத்தம் பெருகி மூச்சிழந்து
சுருண்டு கிடந்தது பற்றி.,

உன்னை மட்டுமே எனக்குப் பிடிக்கும்
என்ற பொய்யான பசப்புகள் பற்றி

இழந்த சுயம் பற்றி., எதையோ
பற்றிக் கொள்ளத்தோன்றும் பயம் பற்றி

வீசப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள்
பாறைகளாய் சூழ்ந்திருக்கும் நிலை பற்றி

உடைத்து உடைத்து நீந்திக்
கொண்டிருந்தாள் நினைவு வெளியில்.

எல்லாம் உடைந்த விடியலில்
தலை கோதித் தூங்க வைத்தேன்.

உடைந்த சிற்கள் எல்லாம்
என் மனதிலும் கண்ணிலும் குத்திக் கிடந்தன.

இழந்த பணம் பற்றி சொத்து பற்றி மட்டும்
பேசவேயில்லை அவள்.

அவளை விடுவித்த அந்த விடியலில்
அந்த இரவு இன்னும் நேசிப்புக்கு உரியதாய் இருந்தது.

டிஸ்கி :- இந்தக் கவிதை ஆகஸ்ட் 1., 2011 உயிரோசையில் வெளிவந்தது.


7 கருத்துகள் :

வரலாற்று சுவடுகள் சொன்னது…

வார்த்தைகள் உபயோகம் பிரமிக்க வைக்கிறது.., அருமையான படைப்பு ..!

செய்தாலி சொன்னது…

மனதின்
கதவை திறந்தவள்

ஆழமாய்
வெளிப்படையாய் சொல்லிவிட்டீர்கள்
அதனுள் என்னவென்று

கணேஷ் சொன்னது…

ஆடைகள் அணிந்தும் நிர்வாணமாய் ஆனவள்... மனதைத் திறந்து கொட்டியதில் அமைதிப் பெற்றுத் தூங்கினாள். பளிச்சென்று, நறுக்கென்று வார்த்தைப் பிரயோகம் இந்தக் கவிதை‌யில்! நல்ல ரசனைக்கு விருந்தாய் அமைந்து மிகமிக மகிழ வைக்கிறது!

arrawinth yuwaraj சொன்னது…

சிறப்பாக அமைந்துள்ளது தேனம்மை...

மதுரை சரவணன் சொன்னது…

aruputhamaaka vanthirukkirathu kavithai... ilakkiya tharam ullaathu...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வரலாற்று சுவடுகள்

நன்றி செய்தாலி

நன்றி கணேஷ்

நன்றி அரவிந்த்

நன்றி சரவணன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...