சொர்க்கவாசி;-
****************
கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து
கீழிமைவழி கசிந்தன.
புத்தக வாசத்தோடே
பலகனவுகளும்.
அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும்
ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது
இன்னும் பேர்காணும்
பேரின்பம் வேண்டி.
பெரிய விதையாயிருந்தும்
கிளைப்பது சின்னச்செடி
தலை சுற்றிப் பார்க்கிறது
சிறு விதை விருட்சங்களை.
வீரியம் அடக்கின செடிகளுக்கு
வெடித்தபின் வாய்க்கிறது
எட்ட நினைத்த உயரம்
அளந்து வைத்த அளவு.
ரோஜாக்கள் மரமாவதில்லை
மாட்சிமை விருது பெறுவதில்லை
எனினும் கிடைக்கிறது
விருதளிப்பவரின் இதயத்தில் இடம்
புத்தக அடுக்குகளூடே
ஒரு சோடா புட்டிக் கண்ணாடியும்
ஒரு புதைகல்லறையும்
கிடைக்கப்பெற்றவர் சொர்க்கவாசி.
டிஸ்கி:- இந்தக் கவிதை மே 29.2011 திண்ணையில் வெளியானது.
****************
கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து
கீழிமைவழி கசிந்தன.
புத்தக வாசத்தோடே
பலகனவுகளும்.
அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும்
ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது
இன்னும் பேர்காணும்
பேரின்பம் வேண்டி.
பெரிய விதையாயிருந்தும்
கிளைப்பது சின்னச்செடி
தலை சுற்றிப் பார்க்கிறது
சிறு விதை விருட்சங்களை.
வீரியம் அடக்கின செடிகளுக்கு
வெடித்தபின் வாய்க்கிறது
எட்ட நினைத்த உயரம்
அளந்து வைத்த அளவு.
ரோஜாக்கள் மரமாவதில்லை
மாட்சிமை விருது பெறுவதில்லை
எனினும் கிடைக்கிறது
விருதளிப்பவரின் இதயத்தில் இடம்
புத்தக அடுக்குகளூடே
ஒரு சோடா புட்டிக் கண்ணாடியும்
ஒரு புதைகல்லறையும்
கிடைக்கப்பெற்றவர் சொர்க்கவாசி.
டிஸ்கி:- இந்தக் கவிதை மே 29.2011 திண்ணையில் வெளியானது.
வார்த்தைகள் பிரமாதம்.., தேடிப்பிடிப்பீர்களா அக்கா...?
பதிலளிநீக்குஒரு கவிதையை எழுதி முடித்ததும் எத்தனை முறை அதை திருத்தம் செய்து முழுமையாக்குவீர்கள்..? திருத்தம் செய்வீர்களா அல்லது முதல் முறையிலேயே இத்தனை அழகாக வடித்துவிடுவீர்களா ..?
//ரோஜாக்கள் மரமாவதில்லை
பதிலளிநீக்குமாட்சிமை விருது பெறுவதில்லை
எனினும் கிடைக்கிறது
விருதளிப்பவரின் இதயத்தில் இடம்//
சூப்பராகச் சொல்லி விட்டீர்கள். ;)))))
கவிதை மிகவும் அருமை அக்கா.
பதிலளிநீக்குகவிதையின் கடைசி நான்கு வரிகளை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறேன்க்கா. எவ்வளவு நிஜமான, உயிர்ப்பான வரிகள். எக்ஸலண்ட்!
பதிலளிநீக்குநன்றி வரலாற்று சுவடுகள்
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்
நன்றி குமார்
நன்றி கணேஷ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!