எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

மெழுகு..

மெழுகு..:-
***********
முதுமையுற்றவரின் கண்கள்
நீரால் நிறைந்திருக்கின்றன.
கசியக் கசியத் துடைத்துக்
கொண்டேயிருக்கிறார்.
பழுதடைந்த கண்களின்
பலவீனத்தாலும் இருக்கலாம்.

இந்தியாவின் காலடியில்
கேட்பாரற்றுக் கிடக்கும்
ரத்தச்சொட்டாய்த் துளிர்த்துக்
கொண்டேயிருக்கிறது அது.
அதைப்போலச் சுண்டி
எறியமுடியவில்லை இதை.


தமிழை வளர்த்தவள்
தனியளாய் அமர்ந்து
மெழுகைச் செய்து
கொண்டிருக்கிறாள்.

வருமுன் காவாத
பெற்றவரின் கண்ணீரால்
செந்நிறமாக வடிந்து
கொண்டிருக்கிறது.,
சிறைக்குள் அந்த மெழுகு.

தானாடாவி்ட்டாலும்
தனை மறந்து
நீராய்ச் சிதறிக்
கொண்டிருக்கிறது..
சடசடப்போடு மெழுகு.

நீதி தேவதையோ
கண்கள் கட்டாமல்
நியாயத்தராசில்
எடையிட்டுக் கொண்டிருக்கிறது
மெழுகுகளின் உற்பத்தியை.

டிஸ்கி:- இந்தக் கவிதை 11.7.2011 உயிரோசையில் வெளிவந்தது. 


9 கருத்துகள்:

  1. நல்ல கவிதை..ரசித்தேன்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வருமுன் காவாத
    பெற்றவரின் கண்ணீரால்
    செந்நிறமாக வடிந்து
    கொண்டிருக்கிறது.,
    சிறைக்குள் அந்த மெழுகு.//அற்ப்புதமான வரிகள் .

    பதிலளிநீக்கு
  3. //தானாடாவி்ட்டாலும்
    தனை மறந்து
    நீராய்ச் சிதறிக்
    கொண்டிருக்கிறது..
    சடசடப்போடு மெழுகு.//

    வரிகளிலேயே சடசடப்பைக் கொண்டு வந்து காட்டியுள்ளது அருமையாக உள்ளது, பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பிரமிக்க வைத்தது கவிதை! அருமை!

    பதிலளிநீக்கு
  5. வருமுன் காவாத
    பெற்றவரின் கண்ணீரால்
    செந்நிறமாக வடிந்து
    கொண்டிருக்கிறது.,
    சிறைக்குள் அந்த மெழுகு

    - வெப்பத்தை உணர்த்தும் உயிர் உள்ள வரிகள்!

    பதிலளிநீக்கு
  6. நன்றி குமரன்

    நன்றி சசிகலா

    நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி கோபால் சார்

    நன்றி கணேஷ்

    நன்றி லெக்ஷி

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...