எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 ஜனவரி, 2012

என் அன்பின் அம்மாவுக்கு..

எங்களுக்காய்
கடவுள் அனுப்பிய தேவதையே..
அன்பெனும் குடுவையான அழகியே..
உன் உதிரத்தைப்
பாலாக்கி உரமூட்டியவளே..

வீட்டினுள் இருக்கும்
விளையாட்டுத் தோழி நீ..
வேதனையில் சாயும் போது
போதி மரம் நீ..


ஆப்ரா கா டாப்ரா
சொல்லாமலேயே
உன் அன்பெனும்
மந்திரத்தால்
எங்களை வண்ணமயமாக
உருமாற்றுகிறாய்..

கலாசாலைகளும்
கற்பிக்க இயலாததெல்லாம்
கற்றுக் கொடுத்த
உயிர் கல்விக்கூடம் நீ..

உன் பார்வை பார்த்தே
நல்லது கெட்டது கண்டு
ஒதுங்குகிறோம் நாங்கள்..

உத்யோகம் புருஷ லட்சணம்
மட்டுமல்ல..
பெண்ணுக்கும்தான் என
புகட்டியவள் நீ..

மனத்தடைகளையும்
உடல் தடைகளையும்.,
உத்யோகத்தடைகளையும்
எளிதாய்த்தாண்டக்
கற்பித்தவள் நீ..

எந்த இரவுகளிலும்.,
எந்த இடங்களிலும்
நான் என் சுயத்தை
இழந்ததேயில்லை..

என் சுயத்தின்
ஆழ வேர் நீ..
அதன் கிளை நான்..
அதுதான் அசையாமலிருக்கிறேன்..

நீ எவ்வளவு இட்டாலும்
எங்களுக்குக் கொள்ளும்தான்..
உன் அன்பை மட்டுமே புசிக்கும்
காயசண்டிகைகள் நாங்கள்..

டிஸ்கி:- என் முதல் புத்தகம் சாதனை அரசிகளை என் அம்மா , அப்பா பெயரில்தான் ”முத்துசபா பதிப்பகம்” வெளியிட்டேன். இந்தக் கவிதை அவர்கள் இருவருக்கும் சமர்ப்பணம்.


12 கருத்துகள்:

  1. அம்மாவைப் பற்றிய கவிதை ரொம்பவே அழகாருக்கு தேனக்கா..

    பதிலளிநீக்கு
  2. என் சுயத்தின் ஆழவேர் நீ... எக்ஸலண்ட் அக்கா... பெற்றோருக்கு நீங்கள் சமர்ப்பித்த கவிப்பூவில் நல்வாசம். மனதில் நெகிழ்ச்சி ஏற்படுத்திய கவிதை. வெகு பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  3. அம்மாவுக்கு நன்றி சொன்ன விதம் அழகு .... அக்கா...

    பதிலளிநீக்கு
  4. அம்மாவைப் பற்றிய கவிதை அருமை சகோதரி!

    உண்மைவிரும்பி,
    மும்பை.

    பதிலளிநீக்கு
  5. நீ எவ்வளவு இட்டாலும்
    எங்களுக்குக் கொள்ளும்தான்..
    உன் அன்பை மட்டுமே புசிக்கும்
    காயசண்டிகைகள் நாங்கள்../

    ஆம்.. எத்தனை அன்பிருந்தாலும் கொள்ளும் அட்சய பாத்திரம் பிள்ளைகள்.

    அற்புதமான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. அம்மா என்பவளே அழகானவள் தானே...அவளை அழகான கவிதை பூக்களால் மேலும் அழகூட்டிவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  7. தேனக்கா நேற்று உங்களைப்பற்றி நிறையவே பேனோம் நிரூவின்
    பதிவில்.அதற்கும் உங்கள் அம்மாவுக்குத்தான் நன்றி.இப்படி ஒரு அம்மா வேணும் எப்பவும் !

    பதிலளிநீக்கு
  8. அம்மாவிற்கு கவிதையால் மகுடம் சூட்டியுள்ளீர்கள் தேனக்கா. வாழ்த்துக்கள். இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஆப்ரா கா டாப்ரா
    சொல்லாமலேயே
    உன் அன்பெனும்
    மந்திரத்தால்
    எங்களை வண்ணமயமாக
    உருமாற்றுகிறாய்..


    உண்மை தேனு அன்பெனும் மந்திரத்தால் தான் நம்மை கட்டி வைக்கிறாள்.

    நீ எவ்வளவு இட்டாலும்
    எங்களுக்குக் கொள்ளும்தான்..
    உன் அன்பை மட்டுமே புசிக்கும்
    காயசண்டிகைகள் நாங்கள்../

    நாம் விரும்புவது அம்மாவின் அன்பை மட்டுமே!
    அம்மாவுக்கு கவிதை அருமை தேனு.

    பதிலளிநீக்கு
  10. நன்றி சாந்தி

    நன்றி கணேஷ்

    நன்றி சசி

    நன்றி சபா

    நன்றி எனது கவிதைகள்

    நன்றி பட்டியன்

    நன்றி ராஜி

    நன்றி அகிலா

    நன்றி ஹேமா

    நன்றி புவனா

    நன்றி கோமதி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...