வியாழன், 5 ஜனவரி, 2012

எப்போதும் உங்களுடன் 106.4 ஹலோ எஃப். எம்மில்

டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஹலோ எஃப்.எம்மில் ஒரு நல்ல கலகலப்பான நிகழ்ச்சி. சர்வதேச சினிமா பற்றி ப்ரபலங்கள் கருத்து பகிர்ந்து கொண்டிருந்த நேரத்தில்., நாமும் நம்ம கருத்தை சொன்னோம். ( நாம பிரபலமா, நேயரா என்பது கொஸ்டீனபிள்..!!!). கருத்து கேட்டாங்க .. சொன்னேன்.

நம்மோட சினிமா பற்றி , அதன் வளர்ச்சி பற்றி , மற்றும் பொதுவான தங்கள் கருத்துக்களை எல்லாம் சொல்லிகிட்டு இருந்தாங்க..


என்னோட ஒரு நிமிட கருத்து இதுதான்..,” இப்போவெல்லாம் நிறைய ஸ்டூடண்ட்ஸ் விஸ்காம் படிக்கிறாங்க. நிறைய புது இயக்குநர்கள், ( மங்களா ஆர்த்தி போன்றவங்க மாஜிக்கை கூட சினிமாவில் கொண்டு வந்து இயக்க நினைக்கிறாங்க). புது முயற்சிகள் மேற்கொள்றாங்க. சர்வதேச தரத்தில் நம்ம சினிமா டெக்னிக்கலா எப்பவோ ரீச் ஆயிருச்சு. இந்த வருடத்துல நிறைய நம்மோட படங்களும் சர்வதேச விழாவின் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறது. என்னதான் இலக்கிய தரத்தோட இருந்தாலும் அதன் கமர்ஷியலா ஹிட்டை வைச்சுத்தான் அது நல்ல படம்னே முடிவுக்கு வர வேண்டி இருக்கு. கமர்ஷியல் ஹிட்தான் சர்வதேச படங்களிலும் சரி, இந்தியப்படங்களிலும் சரி நிறைய பேரை சென்றடையுது. நிறைய விஷயங்களை பணவெற்றிதான் முடிவு செய்யுது. அது போக நல்ல இலக்கிய முயற்சிகள், படைப்பு முயற்சிகள் ஆதரிக்கப்பட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நாம் சினிமாவில் டெக்னிக்கலா, உலக தரத்தோட அதி உச்சத்துல இருக்கோம், ஆனா இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து டெப்தா , அழுத்தமான படைப்புக்கள் கொண்டு வரக்கூடிய திறமையான புதுமையான டைரக்டர்கள் இன்னும் நம்மிடையே இருக்காங்க.. நிறைய அவங்களால் நிச்சயம் முடியும். அவங்க இன்னும் சிறப்பான சினிமாக்களை எடுக்கணும் என்பதே என்னுடைய ஆசை..”

எல்லாரும் பேசும் போது குறுக்குக் கேள்விகளால் மடக்கிக் கொண்டிருந்த பாலாஜி நான் பேசும்போது மட்டும் ஏதும் கேட்கவேயில்லை.. ம் ,ம் , சொல்லுங்க என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனா நடுவுல கலாய்ச்சிருந்தார்னா சொல்ல வந்த கருத்துல தடுமாறி இருப்பேன்.. நன்றி பாலாஜி அண்ட் கவி..:)

நன்றி....எப்போதும் உங்களுடன் 106.4 ஹலோ எஃப். எம்..:)


14 கருத்துகள் :

மதுமதி சொன்னது…

என்னைப் பொறுத்தவரை நாம் சினிமாவில் டெக்னிக்கலா, உலக தரத்தோட அதி உச்சத்துல இருக்கோம், ஆனா இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து டெப்தா , அழுத்தமான படைப்புக்கள் கொண்டு வரக்கூடிய திறமையான புதுமையான டைரக்டர்கள் இன்னும் நம்மிடையே இருக்காங்க.. நிறைய அவங்களால் நிச்சயம் முடியும். அவங்க இன்னும் சிறப்பான சினிமாக்களை எடுக்கணும் என்பதே என்னுடைய ஆசை..”

சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்..
த.ம-2

சரணடைகிறேன்

தமிழ் உதயம் சொன்னது…

மகிழ்ச்சி. வாழ்த்துகள். நான் வானொலி அதிரம் கேட்பதில்லை. பாடலுக்கு நடுவே விளம்பரம் என்பது போய் - விளம்பரங்களுக்கும், பேச்சுக்களுக்கும் நடுவே பாடல் என்பது வந்து விட்டதால் - எனக்கு வானொலி மீதான ஈர்ப்பு போய்விட்டது.

எங்கள் ப்ளாக் சொன்னது…

நீங்க பிரபலம்தான். இதிலென்ன சந்தேகம்?

சசிகுமார் சொன்னது…

தலைப்பை பார்த்தவுடன் ஹலோ FMல பேட்டி தர போறீங்கன்னு நெனச்சேன்... பத்திர்க்கை, தொலைக்காட்சிக்கு அடுத்து இதுலயும் வந்துட்டாங்களான்னு நெனச்சேன்... ஹீ ஹீ

கணேஷ் சொன்னது…

உங்கள் கருத்துக்கள் வானொலிப் பேட்டிக்கு மட்டுமல்ல... எல்லா மீடியங்களுக்கும் ஏற்புடையவை என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லைக்கா. மிகச் சரியான திறனாய்வை மிகக் குறைந்த சமயத்துல சொல்லியிருக்கீங்க. அருமை.

r.v.saravanan சொன்னது…

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி சொன்னது…

குறுக்குக் கேள்வி கேட்க முடியாதபடி சிறப்பான பேச்சு:)! வாழ்த்துகள் தேனம்மை!

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

பத்திரிக்கைத்துறை, அடுத்து வானொலி, இனி வருங்காலத்தில்
தொலைக்காட்சியிலும் நீங்கள் பிரபலமாக வாழ்த்துக்கள் தேனக்கா.

அமைதிச்சாரல் சொன்னது…

நீங்களும் பிரபலம்தாங்க்கா, அதுல என்ன சந்தேகம் :-)

சுருங்கச் சொல்லி விளங்க வெச்சிருக்கீங்க. புது முயற்சிகளோட புது ரத்தம் பாயட்டும் சினிமாவுக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள் தேனம்மை!

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

சினிமா இப்போ நல்லா வளர்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்லலாம். நல்ல கருத்துகள்.

வாழ்த்துகள் தேனக்கா.

Murali சொன்னது…

கச்சிதமான ஆனால் கனமான கருத்துக்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி மதுமதி

நன்றி ரமேஷ்

நன்றி ஸ்ரீராம்

நன்றி சசி

நன்றி கணேஷ்

நன்றி சரவணன்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி புவனா

நன்றி சாந்தி

நன்றி டி வி ஆர்

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி முரளி.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...