எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 ஜனவரி, 2012

நன்றி பபாசி, டிஸ்கவரி புக் பேலஸ். ஆஸ்த்ரேலியன் வானொலி,சன் நியூஸ் ( THANKS TO BAPASI, DISCOVERY, AUSTRALIAN RADIO & SUN NEWS TV. )


என் புத்தக வெளியீடு டிசம்பர் 24 இல் இருந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. ஏற்கனவே லேடீஸ் ஸ்பெஷலில் வந்த கட்டுரைகள் என்றாலும் ஒன்பது முறை ப்ரூஃப் போய் வந்தது.


கட்டுரையில் சிலதை சேர்த்து சிலதை நீக்கி, சின்ன சின்ன மாறுதல்கள். ஆனால் ஆங்கிலக் கலப்பில்லாமல் முழுமையாக செய்ய முடியவில்லை. புகைப்படங்கள் வாங்கி போனில் புதிதாக எல்லாரிடமும் அட்வைஸ் வாங்கி சேர்த்திருக்கிறேன்.

எல்லாருக்கும் கமிட்மெண்ட்ஸ். என் அம்மா அப்பாவிலிருந்து கரிசல் மீடியா வரை. நடுவில் 17 சாதனைப் பெண்கள், மற்றும் கிரிஜாம்மா, ஃபாத்திமா பாபு அவர்கள் ஆகியோர்..

எல்லாரையும் ஒருங்கிணைக்க முடியாமல் புத்தகத் திருவிழாவில் ஸ்டால் எண் 334 , டிஸ்கவரி அரங்கில் மிகுந்த கூட்டத்தோடு எங்கள் இலக்கிய குழும பிதாமகர் பாரதி மணி ஐயா தலைமையிலும், இளம் கிரிக்கெட்டர் திருஷ்காமினி தலைமையிலும் ஜனவரி 8, 2012 இல் வெளியானது சாதனை அரசிகள்.

இதனை சாத்யப்படுத்திய பபாசிக்கும், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றி.

கடைசி நாளன்று அங்கே புத்தக விற்பனையின் போது இருப்பதற்காக சென்ற போது சன் டிவியில் ஒரு சின்ன கருத்து கேட்டார்கள். பபாசி பற்றி அதில் “ பபாசி என்னும் தேரில் புத்தகம் என்னும் தெய்வங்களை இவங்க இங்க அழைத்து வருவது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. பபாசி மெம்பர்களுக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய ” சாதனை அரசிகள் “ புத்தக வெளியீடும் இங்கேதான் நடைபெற்றது. புத்தகம் படிக்கும் வழக்கம் மக்களிடையே பெருக வேண்டும். புத்தக வாசிப்பாளர்களுக்கும் புத்தக நேசிப்பாளர்களுக்கும் பாலமாக இருக்கும் பபாசிக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் நன்றிகள்” என்று சொன்னேன். அது மறுநாள் சன் ந்யூஸ் தொலைக்காட்சியில் வெளியானது. கிட்டத்தட்ட 10 முறை ஒலிபரப்பானது பார்த்து தொடர்பு கொண்டு வாழ்த்திய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

புத்தக வெளியீடு கொஞ்சம் கடினமான பணிதான். ஒரு வீட்டைக் கட்டுவது போல ஒரு திருமணத்தை நடத்துவது போல, ஒரு தேரை வடம் பிடிப்பது போல.. ஆனால் தொட்டுவிட்டால் எல்லா கஷ்டங்களோடும் உதவிக்கரங்களும் நீண்டு உங்களுக்கு நல்ல அனுபவங்களைக் கொடுக்கும். கிரஹப் ப்ரவேசம் முடிந்தபின் சிலரை விட்டிருப்போம், திருமணத்தின் போது யாரின் அதிருப்தியாவது கலந்து காயப்படுத்தும். ஆனால் யார் யாரோ இழுத்து தேரை நிலைக்கு கொண்டுவருவது போல முடித்தவுடன் ஏற்படும் நிச்சலனம் அருமையானது. ஒரு ஞானி நிலைக்கு வந்து விடுவீர்கள்..:)

இந்த சந்தோஷங்களோடு சந்தோஷமாக புத்தகத்தில் வந்தவர்களே பல பிரதிகள் அடிப்படை விலைக்கே வாங்கிக் கொள்ள என் அன்பிற்கு உரிய சகோதரர் வேடியப்பனும் தன் டிஸ்கவரி புத்தக நிலையம் மூலமாக விற்ற 150 காப்பிகளுக்கும் ஒரே செக்காக கொடுத்து விட்டார். கிரெடிட்டும் ஆகிவிட்டது அக்கவுண்டில்.

இந்த புத்தக திருவிழாவில் முதல் புத்தகத்தை வெளியிடும் சந்தர்ப்பம் கொடுத்த பபாசிக்கும் என் அன்பு சகோ வேடியப்பனுக்கும் நன்றிகள்.

புத்தகம் வெளியிடும் நாளன்று பேட்டி எடுத்த ஆஸ்திரேலியன் வானொலியின் திரு ராமன் நாகப்பன் ,”இது அன்பால் சேர்ந்த கூட்டம்” என்றார். மேலும்”ஒரு கவிதாயினியாய் உங்களின் எத்தனையோ படைப்பிருக்க நீங்கள் ஏன் இதை மட்டும் எடுத்து வெளியிட்டீர்கள் ?”,என்று கேட்டார். என் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் நான் எழுதியது. இது இவர்களின் வாழ்வு , போராட்டம். நான் பேட்டி எடுத்த இவர்களின் வெற்றிக் கதைகளை மற்ற அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும்வண்ணம் சொல்ல விரும்பினேன் என்று கூறினேன். அதனால் நான் என் செலவிலேயே வெளியிட்டேன் என சொன்னேன்.

சன் டிவியில் பேட்டி எடுத்த திரு . விஜய் அவர்களுக்கும் நன்றிகள். ( இவர் என் புத்தகத்தின் பேரைக் கேட்டு பணம் கொடுத்து வாங்கிச் சென்றார். சும்மா வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.). ”இந்த மாதிரி சாதாரண பெண்களாய் இருந்து சாதனை செய்பவர்களை நான் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மீடியாவில் நாம் பார்க்க முடியாதவர்களை நீங்கள் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். எனவே ஆவலாய் இருந்தது”, என சொன்னார். நன்றிகள் விஜய்.

நன்றி பபாசி, டிஸ்கவரி, ஆஸ்த்ரேலியன் வானொலி, சன் நியூஸ் குழுமம்.



14 கருத்துகள்:

  1. நாகப்பன் ஆஸ்திரேலிய வானொலியிலா இருக்கிறார்? எஸ்.ஆர்.எம். கம்யூனிட்டி எஃப்.எம்.மில் வேலை பார்க்கிறதாதானே சொன்னார்?

    மற்றபடி புத்தக ரேஸில் வென்றமைக்கு வாழ்த்துகள் :-)

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள்.

    புத்தகத் திருவிழா சென்றபோது மறந்து விட்ட சில விஷயங்களில் இதுவும் ஒன்று. சன் நியூஸ் வீடியோ என்று நினைத்து க்ளிக் செய்தேன். அடுத்த வாய்ப்பில் வாங்கி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அக்கா, உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும். சாதனை அரசிகளுக்கு (நூலிற்கு) எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தேனக்கா.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் அக்கா :)
    You are very dynamic...

    பதிலளிநீக்கு
  6. Congratulations!!!!

    அக்கா, தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. தொடரட்டும் உங்கள் சாதனைகள்.வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  8. இவர்களின் வெற்றிக் கதைகளை மற்ற அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும்வண்ணம் சொல்ல விரும்பினேன் என்று கூறினேன். அதனால் நான் என் செலவிலேயே வெளியிட்டேன் என சொன்னேன்.//

    நல்ல பதில் தேனு.

    நானும் உங்கள் பதிவுகள் எவ்வளவு இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் சாதனை புரிந்த, சாதனை அரசிகள் பதிவை எனக்கு பிடித்த பதிவாய் வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டேன்.

    எல்லோருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்தியது உண்மை.உங்கள் இந்த பதிவுகள் தேனு.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் படைப்புகளை விடவும் சாதனை அரசிகளை புத்தகமாக வெளியிட நீங்கள் சொல்லியிருக்கும் காரணம் உங்கள் உயர்ந்த உள்ளத்தையும் சமூகத்தின்பால் உங்களுக்கிருக்கும் மரியாதையையும் பறைசாற்றுகிறது. மேலும் பல புத்தகங்கள் வெளியிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தேனக்கா

    //புத்தக வெளியீடு கொஞ்சம் கடினமான பணிதான். ஒரு வீட்டைக் கட்டுவது போல ஒரு திருமணத்தை நடத்துவது போல, ஒரு தேரை வடம் பிடிப்பது போல.. ஆனால் தொட்டுவிட்டால் எல்லா கஷ்டங்களோடும் உதவிக்கரங்களும் நீண்டு உங்களுக்கு நல்ல அனுபவங்களைக் கொடுக்கும். கிரஹப் ப்ரவேசம் முடிந்தபின் சிலரை விட்டிருப்போம், திருமணத்தின் போது யாரின் அதிருப்தியாவது கலந்து காயப்படுத்தும். ஆனால் யார் யாரோ இழுத்து தேரை நிலைக்கு கொண்டுவருவது போல முடித்தவுடன் ஏற்படும் நிச்சலனம் அருமையானது. ஒரு ஞானி நிலைக்கு வந்து விடுவீர்கள்..:)//

    இது உங்க அட்வைஸ் எடுத்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  11. நன்றி யுவகிருஷ்ணா

    நன்றி சரவணன்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி அமல்ராஜ்

    நன்றி புவனா

    நன்றி பிரபு

    நன்றி சித்ரா

    நன்றி ஜிஜி

    நன்றி கோமதி

    நன்றி கீதா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...