எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 மார்ச், 2011

சிங்கையில் குருக்ஷேத்திரம். (24 Hours of Anger) எனது பார்வையில்..

Singaiyil Gurushetram

பல நூற்றாண்டுகளுக்கு முன் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய சென்றவர்கள் இன்று எந்த நிலையில் இருப்பார்கள் என நினைத்ததுண்டா நீங்கள்.. நன்கு செட்டிலாகி நல்ல நிலைமையில் இருப்பார்கள் என நினைப்பீர்கள்தானே.. அதில் ஒரு பகுதி மக்களின் அதிர்ச்சியூட்டும் இன்றைய நிலையை இதில் பாருங்கள்..

வலசை சென்ற மக்களில் சிலர் வாழும் வாய்ப்புக்களற்று திசை மாறி முறையற்ற வழியில் திடீர் பணக்காரராக வேண்டும் என்று போதை மருந்து கடத்தும் தொழிலில் ஈடுபட்டு தங்களுக்குளே போராடி தங்களையே அழித்துக் கொண்ட கதை இது.. என்னை அதிர வைத்த படம்.



படம்தான் பார்க்கிறோமா இல்லை ஏதோ உண்மையான டாக்குமெண்ட்ரியா., ந்யூஸ் ரீலா என பதைக்க வைத்தது.. ”நம் மக்கள் என நினைக்காமல் தவறு செய்தோருக்கு தண்டனை உண்டு என்ற ரீதியில் படத்தைப் பார்”, என்றார் ரங்கமணி.

சிங்கையில் குருக்ஷேத்திரம் படத்தில் போதைப் பொருள் கடத்துவோர்., (வேறு வேலை வாய்ப்பற்று இருக்கும் மக்கள் )( ப்ரகாஷ்., வினோத்., ) அதைக் கண்டு பிடிக்கும் நார்கோடிக் டிவிஷனில் வேலை பார்ப்பவர்( அன்பரசன்)., அந்த மாதிரி பிடிபட்டுச் சிதைந்த குடும்ப உறுப்பினர்களுக்கும்., குழந்தைகளுக்கும் உதவி செய்யும் சைகலாஜிகல் கவுன்ஸிலிங் செய்பவர்( ரேவதி) அனைவரும் நம் மக்கள்தான்..

இதை ஒரு குடும்பம் சம்பந்தப்பட்ட கதையாக பார்த்தால் ப்ரகாஷ்., (அவன் தம்பி --மனநிலை பாதிக்கபட்ட குழந்தை )விப்ராவின் தாய் போதைப் பொருள் கடத்தப்பட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். அப்போது தன் தாயைக் காண வரும் ப்ரகாஷ் பக்கத்திலிருக்கும் சின்ன பெண்ணிடம் சொல்வான் ., ”நான் என் அம்மாவை தினம் பார்க்கலாம் ஒரு வாரத்துக்கு. ஏனெனில் அவங்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் தூக்கு “ என்று.

தன் மனைவி போதைப் பொருள் கடத்தி கைதானதும் தூக்கு நிர்ணயிக்கப்பட்டதும் அவரின் கணவர் படும் பாடு அப்பப்பா சொல்ல முடியாது. இருபக்கமும் கண்ணாடித் தடுப்பின் பின் கணவனும் மனைவியும் உரையாடும் காட்சியில் கணவர் சொல்வார்.” எனக்கு என் மனைவி வேணும். நான் அவளை கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும். “ என்று.. மிக அழ வைத்த காட்சி அது.

அவள் இறந்து உடலை கொண்டுவந்து ஈமக்கிரியை செய்யும் போது அவரால் துன்பத்தை தாங்க முடியாது. ”கொன்னுட்டாங்களே .. கொன்னுட்டாங்களே” என கதறுவார். அப்போது அவருக்கு போதை மருந்தைக் கொடுத்து சமாதானப்படுத்துவார்கள்.. அதன் பின் அவர் சொல்வார்.,” பாவம் யாரோ செத்துட்டாங்க போல” என்று.. போதையின் கொடுமை எப்பிடி இருக்கு.. ஐயோ என கலங்க வைத்தது.

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் வாழ வேண்டியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த தேசத்திலும் வந்தேறிகளாகப் பார்க்கப்படும் கொடுமை.

இறந்த பெண்ணின் சகோதரன் வினோத் சொல்வான் .,” செய்ய எங்களுக்கு வேலை இல்லை. இதை செய்தோம். காசு கிடைத்தது ”என்று..

இதே போல கடத்தப்பட்ட போதைப் பொருளை உட்கொள்ளும் ஆட்களும் நம்மவர்களே.. ஏனெனில் வேறு யாருமே உலகத்தில் கடத்துவதுமில்லை. உட்கொள்ளுவதுமில்லை என்ற கருத்து இந்தப் படத்தின் மூலம் எனக்கு தெரிய வந்தது.பின் என்ன சொல்ல?? பிடிபடுபவர்களும் நம்மவர்களே., இறப்பவர்களும் நம்மவர்களே..ஏனெனில் இது ஒரு குடும்பத்தின் கதை.. எனவே அந்தக் குடும்பத்தில் சம்பந்தப்பட்டவர்களை மட்டும் வைத்து இது பின்னப்பட்டுள்ளது.

அந்தப் பெண் சகோதரனிடம் கெஞ்சுவாள் . ”வேண்டாம் . என்னால் இத்தகைய செயலைச் செய்ய முடியாது ”என்று. தன் மன நிலை சரியில்லாத சின்னப் பையன் விப்ராவை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று. எந்தக் குடும்பத்தில் பெண்ணின் சொற்கள் அம்பலம் ஏறி இருக்கின்றன.. பெண்ணை ., அவள் விருப்பத்தை யார் கேட்கிறார்கள் இன்றளவும்.. சொல்வதை செய்ய வேண்டும் அவ்வளவே.. அதுதான் அவளுக்குக் கிடைத்த சுதந்திரம்.

அந்தப் பெண்ணின் மகன் ப்ரகாஷ் போதை கடத்தலுக்கான விசாரணையில் போதை தடுப்பு ஆஃபீசர் அன்பரசனிடம் சொல்வான்., ” நான் இங்கே பிறந்தேன். இருக்கிறேன் .,வாழ்கிறேன். ஆனால் நான் என் விலாசப்படி இந்தியன் கூட இல்லை தமிழன். ” என்று.. இதெல்லாம் தவமணியின் படத்தில் என்னை கலங்க வைத்த வசனங்கள்..

முறையற்ற .,தவிர்க்கப்பட்ட செயல்களில்., சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் அதற்கு மிகக் கடுமையான தீர்ப்புகள் வழங்கப்படும் நாடுகளில் அதன் பலனை அனுபவித்துத்தான் தீரவேண்டும். என்ற கருத்தை வலியுறுத்திய இந்தப் படத்தில் போதைப் பொருள் கடத்தினால் இறப்புத்தான் தீர்வு என்று விப்ராவைத் தவிர அனைவரும் இறக்கிறார்கள்.

மிகவும் பிடித்த காரெக்டர் அந்த கவுன்சிலிங் செய்யும் ரேவதி. நார்கோடிக் டிவிஷனில் கணவர் அன்பரசன் வேலை செய்கிறார். மனைவி ரேவதி அதில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு கவுன்சிலிங் செய்து மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்கிறார். கடைசி காட்சியில் விப்ரா ரேவதியின் கை பிடித்துக் கொள்ளும் காட்சி நெகிழ வைத்தது..


அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதா .. வாழ்ந்திருக்கிறார்கள் என சொல்வதா.. அவ்வளவு யதார்த்தம்..

ஹ்ம்ம் பிழைப்புக்காக வேறு நாட்டுக்குச் செல்லும் அன்பு சகோதரர்களே... அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ., எதற்காகவும் முறையற்ற., தவிர்க்கப்படவேண்டிய செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்டு விடாதீர்கள் என கேட்டுக் கொள்வது தவிர வேறு என்ன இருக்கிறது.

நல்ல எச்சரிக்கையூட்டும் படத்தைக் கொடுத்த தவமணிக்கு நன்றி.. நல்ல நண்பர்களையும், சகாக்களையும், ரூம்மேட்டுக்களையும் தேர்ந்தெடுங்கள். வழி தவறிச் செல்வோரிடம் இருந்து விலகி இருங்கள். உங்கள் வாழ்வும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்வும் உங்கள் வசம். பெருமையை தேடித்தராவிட்டாலும் சிறுமைப்படும்படி செய்துவிடாதீர்கள்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


14 கருத்துகள்:

  1. //இறந்த பெண்ணின் சகோதரன் வினோத் சொல்வான் ., செய்ய எங்களுக்கு வேலை இல்லை. இதை செய்தோம். காசு கிடைத்தது என்று..//

    மனசு வலிக்குது மக்கா.....

    பதிலளிநீக்கு
  2. நல்ல விழிப்புணர்வு தரக்கூடிய பதிவு - தந்த உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. //” பாவம் யாரோ செத்துட்டாங்க போல” என்று.. போதையின் கொடுமை எப்பிடி இருக்கு.. //
    இவற்றிலிருந்து நம் மக்களை எப்படி காப்பாற்றுவது?? தெரிந்தே ஈடுபடுபவர்கள் ஒரு நாளும் அவ்ற்றிலிருந்து வெளியே வர மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  4. அவள் இறந்து உடலை கொண்டுவந்து ஈமக்கிரியை செய்யும் போது அவரால் துன்பத்தை தாங்க முடியாது. ”கொன்னுட்டாங்களே .. கொன்னுட்டாங்களே” என கதறுவார். அப்போது அவருக்கு போதை மருந்தைக் கொடுத்து சமாதானப்படுத்துவார்கள்.. அதன் பின் அவர் சொல்வார்.,” பாவம் யாரோ செத்துட்டாங்க போல” என்று.. போதையின் கொடுமை எப்பிடி இருக்கு.. ஐயோ என கலங்க வைத்தது.//என்னையும் தான் பதிவு பார்க்கும் போது.

    பதிலளிநீக்கு
  5. ”நம் மக்கள் என நினைக்காமல் தவறு செய்தோருக்கு தண்டனை உண்டு என்ற ரீதியில் படத்தைப் பார்”, //
    விழிப்புண்ர்வூட்டும் ,கலங்கவைக்கும் பதிவு. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல நண்பர்களையும், சகாக்களையும், ரூம்மேட்டுக்களையும் தேர்ந்தெடுங்கள். வழி தவறிச் செல்வோரிடம் இருந்து விலகி இருங்கள். உங்கள் வாழ்வும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்வும் உங்கள் வசம். பெருமையை தேடித்தராவிட்டாலும் சிறுமைப்படும்படி செய்துவிடாதீர்கள்.



    .... Very good valuable advice.

    பதிலளிநீக்கு
  7. பிழைப்புக்காக வேறு நாட்டுக்குச் செல்லும் அன்பு சகோதரர்களே... அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ., எதற்காகவும் முறையற்ற., தவிர்க்கப்படவேண்டிய செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்டு விடாதீர்கள்

    பதிலளிநீக்கு
  8. படத்தை இன்னும் பார்க்கல உடனே பார்க்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  9. நானும் என் நண்பர்களும் இந்த படத்தை பார்க்க போன வெள்ளிக்கிழமை இரவு திருப்பூர் வாரணாசி தியேட்டர் போனோம். எங்க 3 பேரைத் தவிர வேற யாருமே வராததாலயும், குள்ளநரி கூட்டதுக்கு கூட்டமா மக்கள் வந்ததாலயும் இந்த படத்தோட ஷோவை கேன்சல் பண்ணிட்டு எங்கள குள்ளநரி கூட்டதுக்கு மாற்றி விட்டுட்டாங்க. அடத்த நாளே படத்தையும் தியேட்டரை விட்டே தூக்கிட்டாங்க. அதனால பார்க்க முடியாம போச்சு. உங்க விமர்சனத்தை படிச்ச பிறகுதான் யோசிக்கிறேன் நல்ல படத்தை பார்க்க முடியாம போச்சேனு.

    பதிலளிநீக்கு
  10. விமர்சனமே நடுங்க வைக்குதுங்க. நல்ல படமாக இருக்க வேண்டும். பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  11. //அதன் பின் அவர் சொல்வார்.,” பாவம் யாரோ செத்துட்டாங்க போல” என்று.. போதையின் கொடுமை எப்பிடி இருக்கு.. ஐயோ என கலங்க வைத்தது//

    கொடுமை!!

    வெளிநாடு செல்வோருக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள் மிக அவசியமானவை. விமர்சனம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  12. நன்றி ராஜா

    நன்றீ மனோ

    நன்றீ மாதவி

    நன்றி மயிலு

    நன்றி ரூஃபினா

    நன்றீ ராஜேஸ்வரி

    நன்றீ சித்து

    நன்றீ ரத்னவேல் சார்

    நன்றி சசி

    நன்றீ சிநேகம்.. கட்டாயம் பாருங்க..

    நன்றி விக்னேஷ்வரி

    நன்றீ ஹுசைனம்மா..

    பதிலளிநீக்கு
  13. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...