திங்கள், 7 மார்ச், 2011

இஸ்திரிக்காரரின் மகள்..


இஸ்திரிக்காரரின் மகள்..:-
********************************

வீடு வீடாய்ச் சென்று படியேறி
உடுப்பு சுமந்து சுமந்து

பழுக்காய்கள் நீக்கி
வெள்ளாவி வைத்து

உவர்மண்ணில் துவைத்து
கரை மண்ணில் உலர்த்தி

பெட்டி போட்டுக்
காய்ப்பேறிப் போன கைகளை
நீவி விட்டுக் கொள்கிறாள்..

உடுப்பெடுக்கச் சென்ற
மாடி வீட்டு அம்மாவின்

வேலையற்றுச் சிவந்திருந்த
ரோஜாப்பூக் கரங்களைப்
பார்க்கும்போதெல்லாம்..

அப்போதெல்லாம்
அவள் கண்கள் கனலும்
இஸ்திரிப்பெட்டியின் கங்குகளாய்..

அதிகச் சூட்டில் தீய்ந்த
ஓட்டையாய்.. துளையிட்டுச்
செல்லும் பார்வையோடு..

சென்ற பின்னும் உடுப்புக்களில்
கறுப்புத் தீற்றலாய்..

அங்குமிங்கும் பறந்து கிடக்கிறது
அவள் கோபத்தின் சாம்பல்..


15 கருத்துகள் :

செந்தில்குமார் சொன்னது…

நான் தான் முதல்ல வந்தேன் அக்கா..

வேலையற்றுச் சிவந்திருந்த
ரோஜாப்பூக் கரங்களைப்
பார்க்கும்போதெல்லாம்..

அப்போதெல்லாம்
அவள் கண்கள் கனலும்
இஸ்திரிப்பெட்டியின் கங்குகளாய்..

அழுத்தமான அனல் அவள் மனதிற்க்குள்

வாழ்த்துக்கள் வல்லினத்தில் வெளிவந்தமைக்கு...

ஸாதிகா சொன்னது…

யம்மாடியோவ்..தேனு.உங்களை சுற்றி இருப்பவைகளை எப்படி இவ்ளவு துல்லியமாக கவனித்து வருகின்றீர்கள்!!உங்கள் அசத்திய கவனிபுத்திறனும்,அபரிதமான கற்பனைத்திறனும் குற்றாலமாக கோட்டுகிறது உப்க்கள் கவிதைச்சரால் வழியே.சபாஷ் தேனு.

தமிழ்வாசி - Prakash சொன்னது…

நல்ல கவிதை பகிர்வு.

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

Chitra சொன்னது…

சென்ற பின்னும் உடுப்புக்களில்
கறுப்புத் தீற்றலாய்..

அங்குமிங்கும் பறந்து கிடக்கிறது
அவள் கோபத்தின் சாம்பல்..

.....உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகளில் அசத்துறீங்க...

Balaji saravana சொன்னது…

விளிம்பு நிலை மனிதர்களின் வலிகளையும் வன்மையாய் பதிவு செஞ்சிருக்கீங்க தேனக்கா! :)

மாதேவி சொன்னது…

பறந்து கிடக்கும் கோபத்தின் சாம்பல்.. நன்றாக இருக்கிறது.

ஹேமா சொன்னது…

மகளிர் தினத்தில் நல்லதொரு கவிதை தேனக்கா !

ஆயிஷா சொன்னது…

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

S.Menaga சொன்னது…

அசத்தல் கவிதை அக்கா!! வாழ்த்துக்கள்...

jayakumar சொன்னது…

ulaithu karutha kaigal uyarvaanathu...thozhi...

Rathnavel சொன்னது…

தற்போது கவிதை படித்து வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கோபத்தின் வெளிப்பாடும் சாமபலின் வெளிப்பாடும் உழைப்பின் வெளிப்பாடும் பாடுபொருள் அருமை.

jothi சொன்னது…

க‌விதை அழ‌கு

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி செந்தில்..


நன்றி ஸாதிகா..

நன்றி தமிழ்வாசி..

நன்றி சித்து..

நன்றி பாலாஜி..

நன்றி மாதேவி..

நன்றி ஹேமா..

நன்றி ஆயிஷா..

நன்றி மேனகா..

நன்றி ஜெய்குமார்.. உண்மை..:))

நன்றி ரத்னவேல் சார்..

நன்றி ராஜி..

நன்றி ஜோதி..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!]என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...