பூவாய் நீ..
நினைவின் தோட்டம்.. காதல் கோட்டம்..
எப்போதாவது என்னை நினைப்பாயா.. உன் நறுமண உலகில்தான் நான் இறகாய் சுழல்கிறேன். நிற்காத சுழற்சி.
பாசம் என்பதும்., நேசம் என்பதும்., காதல் என்பதும் ., அன்பு என்பதும்., உறவில்மட்டும்தானா.. நட்பில் இல்லையா என்ன.. தன்னுடையதான., தனக்கு மட்டுமேயான என்ற எண்ணம் எப்போதும் ஏற்பட்டதேயில்லை எனக்கு.. அப்படி உன்னை அடக்கிவிட முடியாதெனவும் உணர்வேன்.
உன் வாழ்வை,., இருப்பை., நம் உறவை ரசிக்கிறேன் நான்.. உன்னைச் சுற்றிக் காற்று தழுவினாலும்., பனி பெய்தாலும்., நிழல் அணைத்தாலும்., வெய்யில் கதகதத்தாலும்., மழை ஊடுருவினாலும்., பூச்சிகள் வண்டுகள் தேனெடுத்து உறிஞ்சினாலும்., ஒரு பார்வையாளராகவே இருக்கிறேன்.. நீ இருக்கிறாயா ., நன்றாக இருக்கிறாயா., தேவையான நீரருந்தி., பூரித்து ., விகசிப்போடு என்பது மட்டுமே என பார்ப்பதே என் தினசரி வேலையாய் இருக்கிறது.. உன் விருப்பங்கள் ., ஆசைகள்., தேவைகள் நிறைவேறி வருவதையே தோட்டக்காரனைப் போல ரசனையோடு பார்க்கிறேன்.. என்ன அழகு நீ .. எந்த இடத்திலோ இருக்க வேண்டிய வரம்.. என் வீட்டுத்தோட்டம் செய்த பாக்கியம்.. உன் விருப்பம் தீரும் காலம் வரை நீ இரு..
அவ்வப்போது பார்த்துக் கொள்கிறேன் .. தோட்டத்தில் யாரும் பறித்து விடாமல்.. ஓடும் சிந்தனைகள் உனக்கும் முதுமை வரும் என்கிறது.. உன் இதழ்கள் ஒவ்வொன்றாய் உதிரலாம்.. வெளிறலாம். குச்சியைத் தாங்கி காய்ந்த மகரந்தங்களோடு நீ நிற்கலாம்.. அப்போதும் உதிர்ந்த உன் மகரந்தத் துகள்கள் இன்னும் பல பூக்களை உருவாக்கும்.. அவற்றில் சுவாசத்திலும்., வாசத்திலும் என் தோட்டமே மலரும்..
சின்னஞ்சிறு பூக்களாய் விரிந்து கிடக்கிறது நினைவு.. உன்னையும் ஒரு பூவாய்த்தான் பார்த்தேன்.. முள்ளோடு கூடிய பூ.. அதற்குத்தானே கிராக்கி அதிகம்.. நீ புன்னகைத்ததை விட குத்தி காயமாக்கியதே அதிகமாய் இருக்கும்..
அடர் வனமொன்றில் கேட்பாரற்று அலையும் யானையைப் போலிருந்தேன்.. எனக்கு மதம் கொண்டதென்று எதிர் வரவில்லை யாரும்.. நீ வந்தாய் ஒரு தேனீயாகவோ குளவியாகவோ கவனம் சிதைத்தாய்.. உன்னைத் தும்பிக்கையில் வசமாக்கிவிட வீசித் துரத்த வைத்து.. கண்மண் தெரியாமல் காடுகரை மேடு எல்லாம் ஓட வைத்து., களைத்து நான் அமரும் போது காதுக்கருகே வந்து “நொய்ங்ங்” என்கிறாய்..
நான் திரும்பிப் பார்க்கையில், கிட்டே வந்து விடுவேனோ என வேங்கையின் உருவம் எடுக்கிறாய்.. நான் உடனே ஒரு சிறுத்தையாய் மாறி உறுமுகிறேன்.. சட்டென்று மறைந்து போகிறாய்..
”நான் செடியில் இருப்பேன்., பூப்பேன் .. மலர்ந்து கிடப்பேன்.. மரிப்பேன்... ஏன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்.. உன் பார்வை எனக்கு இம்சையாய் இருக்கிறது .. பார்க்காதே.. என் முட்கள் கூட மலராகும் அபாயத்தில் உன்னைப் பார்த்து அலறுகிறேன் .. போ போய்விடு.. உன் வேலைகளைக் கவனி.. உன் அன்புப் பார்வை ஏற்படுத்தும் இம்சைகளை நீ அறிய மாட்டாய்.. நான் நானாக இருக்க முடியவில்லை.. என் இயல்பற்றுப் போகிறது.. நீ இருந்தால் மற்ற வண்டுகள் கூட வரவில்லை என்னை அண்டி.. நான் உனக்கு மட்டுமல்ல. தோட்டம் முழுமைக்கும்... அதோ அந்த வண்ணாத்திப் பூச்சிக்கு., தேன் சிட்டுக்கு., கரு வண்டுக்கு., தேனீக்கு .. “ என்கிறாய்..
என்னை இழுத்துப் போர்த்தும் முயற்சியில் தீபமற்றும் மரிக்கும் மெழுகாய் உள்செல்கிறேன்.. எனக்கு இரங்கல் தெரிவிக்க விட்டிலாய் அருகே வருகிறாய்.. உன்னைக் காணும் ஆவலில் திரும்ப நான் வெளிவர நீ என் கணப்பில் குளிர் காய்கிறாய்..
சூரியனாய் இருந்தாலும் உன் முகம் பார்க்கும் திசையில் உதிக்க விரும்புகிறேன்.. நிலவாய் இருந்தாலும் உன் ஆம்பல் தலை தழுவும் வெண்காற்றாய்.. உன் மென்மையான இதழ்களை நீ கோபிக்காத சிலசமயம் தொட்டுப் பார்க்க நினைக்கிறேன்.. பார்த்தவுடனே நிறைவடைந்து விடுவதால் பக்கம் வரக் கூடத் தோன்றுவதில்லை.. நம் இறையாண்மையைக் கெடுக்க வேண்டாமென்றுதான்..
என்னை பார்த்ததும் வேர்க்கிறது உனக்கு.. மெய்க்காப்பாளன் போல தெரிகிறேன் உனக்கு ., தொடரும் அன்பை பி்ய்த்துப் போட முயல்கிறாய்.. என் அன்பை முகமூடியாய் வெறுக்கிறாய்.. விட்டால் விட்டு விட்டு ஓடும் ஆசையும் இருக்கிறது.. ஆனாலும் வேரைப் போன்று ஏதோ ஒன்று உன்னை பிடித்து என்னை விட்டு ஓடாமல் செய்கிறது.. ரத்தமும் சதையுமாய் பதிந்து போய் இருப்பது உணர்கிறாய்.. பின்னெப்போதும் விட்டுப் போகும் ஆசையை வளர்க்கவில்லை நீ..
சிலசமயம் புன்னகைத்தபடியே கிடக்கிறாய்.. போகட்டும் என உன் புன் முறுவலை பொன்னிற வெய்யிலில் சுற்றித் தருகிறாய்.. நானும் தினம் பெற்று என் இதயத்தில் அடுக்குகிறேன்.. ஸ்பரிசிக்கத்தூண்டும் ஆசையும் வேகமும் அடங்கிவிட்ட மனதில் தினமும் பூத்துக் கிடக்கிறது ஒவ்வொரு புன்னகையும் அஜந்தா சித்திரமாய்..
தில்லியின் முகல் கார்டனிலாகட்டும்., ஏற்காடு., கொடைக்கானலாகட்டும் எந்தக் குளிரிலும் பூத்திருக்கும் உன்னைத்தேடி வருகிறேன்.. ஒரு பொது ரகஸ்யத்தைப் போல நீயும் கிசுகிசுத்தபடியே மலர்ந்து கிடக்கிறாய்.. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் தோழியாயோ ., தாயாயோ உணர்கிறேன் என்னை..

எத்தனையோ மனிதர்கள் உன்னைச் சுற்றுவார்கள்., உன் பூப்புன்னகையைப் பார்த்து. அது ஒரு பொதுப் புன்னகை. பூவாக இருந்து பூகம்பம் விளைவிக்க உன்னால் மட்டும்தான் முடியும். பூ விழுங்கி மூழ்கிப் போன பூமியானேன் நான். என் நெஞ்சின் அதிர்வுகள் எண்களுக்குள் அடங்கா. என்னை இப்படி ஒரு வார்த்தையில் பார்வையில் புன்னகையில் ஒன்றுமில்லாமல் ஆக்க உன்னால்தான் முடியும். இப்படி எத்தனைபேர் விழுந்தார்களோ அறியே ன். அன்பில் வீழ்வது என்பது காதலில் எழுவதுதானே..
உன் வாழ்வை,., இருப்பை., நம் உறவை ரசிக்கிறேன் நான்.. உன்னைச் சுற்றிக் காற்று தழுவினாலும்., பனி பெய்தாலும்., நிழல் அணைத்தாலும்., வெய்யில் கதகதத்தாலும்., மழை ஊடுருவினாலும்., பூச்சிகள் வண்டுகள் தேனெடுத்து உறிஞ்சினாலும்., ஒரு பார்வையாளராகவே இருக்கிறேன்.. நீ இருக்கிறாயா ., நன்றாக இருக்கிறாயா., தேவையான நீரருந்தி., பூரித்து ., விகசிப்போடு என்பது மட்டுமே என பார்ப்பதே என் தினசரி வேலையாய் இருக்கிறது.. உன் விருப்பங்கள் ., ஆசைகள்., தேவைகள் நிறைவேறி வருவதையே தோட்டக்காரனைப் போல ரசனையோடு பார்க்கிறேன்.. என்ன அழகு நீ .. எந்த இடத்திலோ இருக்க வேண்டிய வரம்.. என் வீட்டுத்தோட்டம் செய்த பாக்கியம்.. உன் விருப்பம் தீரும் காலம் வரை நீ இரு..
அவ்வப்போது பார்த்துக் கொள்கிறேன் .. தோட்டத்தில் யாரும் பறித்து விடாமல்.. ஓடும் சிந்தனைகள் உனக்கும் முதுமை வரும் என்கிறது.. உன் இதழ்கள் ஒவ்வொன்றாய் உதிரலாம்.. வெளிறலாம். குச்சியைத் தாங்கி காய்ந்த மகரந்தங்களோடு நீ நிற்கலாம்.. அப்போதும் உதிர்ந்த உன் மகரந்தத் துகள்கள் இன்னும் பல பூக்களை உருவாக்கும்.. அவற்றில் சுவாசத்திலும்., வாசத்திலும் என் தோட்டமே மலரும்..
நிறைய பூக்களும் பிள்ளைகளும் விளையாடி மகிழ்வார்கள். பூக்களின் முட்கள் பற்றியோ., வண்டுகள் பற்றிய கவலையோ அன்றி..
நிறைவடைந்து விட்டதாய் தோன்றும் நேரம் வரும்.. நீ செல்ல வேண்டிய அக்கணம் நானும் மரித்துவிடுவேன் என்றே தோன்றுகிறது.. பின் என் உடலின் மீது அப்போதாவது அலங்கரிக்கப் போகும் எனக்கான ஒற்றைப் பூ நீதானே... அக்கணம் வரை உன் தேன் துளியைக் கண்ணீராய்ச் சேமித்து வை என் மேல் சிந்த..

டிஸ்கி:- ரூஃபினாவுக்காக..
மிக பெரிய கவிதை... ரசித்து எழுதிய கவிதை - ரசிக்க வைத்த கவிதை...
பதிலளிநீக்குமிக நன்றி ரமேஷ்..:)
பதிலளிநீக்குஉரைநடைக் கவிதை அருமை..
பதிலளிநீக்குபடிக்க தெவிட்டாமல் தொடர்ந்து அருமையாக போகிறது...
பதிலளிநீக்குஇதை படிக்கும் போது..
தபு சங்கரின் தேவதைகளின் தேவதை தொடர் தான் நினைவுக்கு வந்தது..
அருமை தொடருங்கள்..
பெரிய கவிதை அழகா ரசிக்கும் படியா இருக்கு சூப்பர்....
பதிலளிநீக்குஉங்கள் எண்ணங்களை அப்படியே வரிகளில் பதிவு செஞ்சீருக்கீங்கம்மா...
பதிலளிநீக்குநல்லாருக்கு :)
வரிக்கு வரி தேர்ந்தெடுத்த சொற்கள்..அழகு ..அழகு..
பதிலளிநீக்குஉரைநடைக் கவிதையா? இப்படியெல்லாம் கூட எழுதமுடியுமா?அருமை...
பதிலளிநீக்குஎன் முட்கள் கூட மலராகும் அபாயத்தில் //
பதிலளிநீக்குஅது தான் அன்பின் வலிமை, நன்றி தேனம்மை, மறுபடியுமாய் இதழ் விரித்தமைக்கு
முன்னர் இங்கு நான் படித்த “முகம்” போன்றே இதுவும் fully charged verse..முழுமையான அன்பினால் தோய்ந்த மனதில் இருந்து தான் இப்படி எழுதத் தோன்றும்..keep it up..Super work..
பதிலளிநீக்குமிக அருமையான நடை!!! லவ்லி!
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குஇனிமேல் கவிதைகளையும் படிக்க முயற்சிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
மிக மிக ரசனையுள்ள நட்பு !
பதிலளிநீக்கு//ஓடும் சிந்தனைகள் உனக்கும் முதுமை வரும் என்கிறது.. உன் இதழ்கள் ஒவ்வொன்றாய் உதிரலாம்.. வெளிறலாம். குச்சியைத் தாங்கி காய்ந்த மகரந்தங்களோடு நீ நிற்கலாம்.. அப்போதும் உதிர்ந்த உன் மகரந்தத் துகள்கள் இன்னும் பல பூக்களை உருவாக்கும்.. அவற்றில் சுவாசத்திலும்., வாசத்திலும் என் தோட்டமே மலரும்..//
பதிலளிநீக்குதேன்மழை!
//உன் தேன் துளியை கண்ணீராய் சேர்த்து வை என்மேல் சிந்த...//
பதிலளிநீக்குதேன்(அக்கா) மலருக்குச் சொல்கிறது.
வணக்கம்.நல்ல கவிதை,நன்றாகயிருந்தது.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குBy chance, I read this post mom. And it is too good. From all I could infer, your friend ரூஃபினா is gifted to have you as her friend. :)
பதிலளிநீக்குநட்பின் பிரவாகம் நன்று தேனம்மை.
பதிலளிநீக்கு//உன் வாழ்வை,., இருப்பை., நம் உறவை ரசிக்கிறேன் நான்.. உன்னைச் சுற்றி காற்று தழுவினாலும்., பனி பெய்தாலும்., நிழல் அணைத்தாலும்., வெய்யில் கதகதத்தாலும்., மழை ஊடுருவினாலும்., பூச்சிகள் வண்டுகள் தேனெடுத்து உறிஞ்சினாலும்., ஒரு பார்வையாளராகவே இருக்கிறேன்.. நீ இருக்கிறாயா ., நன்றாக இருக்கிறாயா., தேவையான நீரருந்தி., பூரித்து ., விகசிப்போடு என்பது மட்டுமே என பார்ப்பதே என் தினசரி வேலையாய் இருக்கிறது.. உன் விருப்பங்கள் ., ஆசைகள்., தேவைகள் நிறைவேறி வருவதையே தோட்டக்காரனைப் போல ரசனையோடு பார்க்கிறேன்.. என்ன அழகு நீ .. எந்த இடத்திலோ இருக்க வேண்டிய வரம்.. என் வீட்டுத்தோட்டம் செய்த பாக்கியம்.. உன் விருப்பம் தீரும் காலம் வரை நீ இரு..//
மிக அருமை.
உன்னைப் பார்க்கும் போதெல்லாம் தோழியாயோ ., தாயாயோ உணர்கிறேன் என்னை..
பதிலளிநீக்குஉணரவைத்து சிந்திக்க வைத்த அருமயான வரிகள்.
உங்களது நினைவுப்பெட்டகத்தில் எவ்வளவு அழகான நினைவுகளை தேக்கிவைத்திருக்கிறீகள் என்பதை அந்த கவிதை மழையில் குளித்தபின் தான் உணர்ந்தேன்.
பதிலளிநீக்குநன்றி சௌந்தர்.. தபூ சங்கரா.. ம்ம் அப்படி எழுதி இருக்கேனா.. பெரும் பாக்கியம்தான்.. எனக்கு ரொம்பப் பிடித்த எழுத்து அவரோடது..:))
பதிலளிநீக்குநன்றி மனோ.,
பதிலளிநீக்குநன்றி மாணவன்.,
நன்றி ஸாதிகா..
நன்றி கருன்..
நன்றி ரூஃபினா..எக்ஸ்பெஷலி ஃபார் யூ..:))
நன்றி வெற்றி..
நன்றி குட்டிப்பையா..
நன்றி ரத்னவேல் சார்..
நன்றி ஹேமா
நன்றி கோபால்..
நன்றி விமலன்..
நன்றி சபா..:)))))) ஆச்சர்யம் நீ படித்தது இதை..:))
நன்றி ராமலெக்ஷ்மி..
நன்றி ராஜி.,
நன்றி விஜயன்..:))
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!