சனி, 12 மார்ச், 2011

கடல் உள்ளும் வெளியேயும்..


கடற்கரையோரம்
செல்லும் போதெல்லாம்
சுனாமியும்
சர்வதேச எல்லையுமே
நினைவை உறுத்தி..

காற்று வாங்க நினைத்து
காற்றோடு கலந்த
மூச்சை எல்லாம் உணர்ந்து..

சங்கு., சிப்பி., மணல் குத்த
அலைச்சத்தம் துரத்த
செயலற்ற பாதசாரியாய்த்
திரும்பி ஓடினேன்..
வீட்டுக் காற்றை சுவாசிக்க..

20 கருத்துகள் :

தமிழ்வாசி சொன்னது…

சுனாமியால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

வலி மிகுந்த கவிதை..

கலாநேசன் சொன்னது…

சுடும் படம்...

ஸாதிகா சொன்னது…

மனதினை உலுக்கிப்போட்ட கவிதை வரிகள்& படம்.

middleclassmadhavi சொன்னது…

மனம் வலிக்கும் கவிதை!

ஹேமா சொன்னது…

கவிதையைவிடப் படமே கவிதை சொல்கிறது !

Ramani சொன்னது…

மிக அருமைஆயிரம் பக்கங்கள்
எழுதி ஏற்படுத்த முடியாத பாதிப்பை
உங்கள் மூன்று பத்திக் கவிதை
என்னுள் ஏற்படுத்திபோகிறது
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//செயலற்ற பாதசாரியாய்த்
திரும்பி ஓடினேன்..
வீட்டுக் காற்றை சுவாசிக்க..//

கவிதை அருமை....
நெஞ்சு வலிக்கத்தான் செய்யுது.....

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரி, கடலின் ரசனையினையும் அதன் பின்னே உள்ள கோர முகத்தையினையும் கவிதையில் புனைந்திருக்கிறீர்கள்.
//

காற்று வாங்க நினைத்து
காற்றோடு கலந்த
மூச்சை எல்லாம் உணர்ந்து..//

இங்கே வார்த்தைகள் நர்த்தனமாடுகின்றன.
கடல் உள்ளும் வெளியேயும் இயல்பான உணர்வுகளைப் பேசி நிற்கிறது.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அருமையான கவிதையம்மா..திண்ணையில் வெளியாகியானதற்கு வாழ்த்துக்கள்

சே.குமார் சொன்னது…

வலி மிகுந்த கவிதை..

பாரத்... பாரதி... சொன்னது…

//சங்கு., சிப்பி., மணல் குத்த
அலைச்சத்தம் துரத்த
செயலற்ற பாதசாரியாய்த்
திரும்பி ஓடினேன்..
வீட்டுக் காற்றை சுவாசிக்க..//

இறுதி வரிகளின் கனம் மிக அதிகம்..

பாரத்... பாரதி... சொன்னது…

கடல் என்பவள் அன்னை என்றாலும் கூட சில வேளை கோபத்தில் அதிகம் குமுறுகிறாள்.
இயற்கை தான் காப்பாற்ற வேண்டும்..

! சிவகுமார் ! சொன்னது…

பல பெண்கள் வீட்டுக்காற்றின் அனல் தாங்காது அலுவலக நிழலில் அமர்ந்து மூச்சு விட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

சசிகுமார் சொன்னது…

என்ன சொல்வது என தெரியவில்லை இந்த இரங்கல் சொல்வதை தவிர்த்து, இயற்கையோடு விளையாடினால் இப்படி தான் நடக்கும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வலியை பகிர்ந்து கொண்ட கவிதை.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ப்ரகாஷ்..

நன்றி கருன்

நன்றி கலாநேசன்

ஆமாம் ஸாதிகா..

நன்றி மாதவி

நன்றி ஹேமா

நன்றி ரமணி

நன்றி மனோ

நன்றி நிரூபன்

நன்றி சதீஷ்

நன்றி குமார்

நன்றி பாரதி

நன்றி சிவகுமார்

நன்றி சசி

நன்றி ராஜி..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

மதுரை சரவணன் சொன்னது…

கவிதை வலியை உணர்த்துகிறது... வாழ்த்துக்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சரவணன்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...